தொண்டாமுத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொண்டாமுத்தூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் கோயம்புத்தூர் தெற்கு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,492 (2011)

389/km2 (1,008/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 29.58 சதுர கிலோமீட்டர்கள் (11.42 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thondamuthur

தொண்டாமுத்தூர் (ஆங்கிலம்:Thondamuthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

கோயம்புத்தூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

29.58 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3320 வீடுகளும், 11,492 மக்கள்தொகையும் கொண்டது.[5]

பெயர்க்காரணம்[தொகு]

சரியான வரலாற்று ஆவணங்கள் இல்லாத காரணத்தால் , ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே பெயர்க்காரணம் தேடவேண்டி உள்ளது. தொண்டி அல்லது சக்கிரி என்ற பழைய வட்டார வழக்கிற்கு தடித்த தோல் ( thick skin ) என்று ஒரு பொருள். இந்தப்பகுதியில் அதிக அளவில் உள்ள தென்னை மரங்களும் அதன் தொண்டிகளையும் குறிக்கும் விதமாக இப்பெயர் பெற்றிருக்கலாம்.

தொண்டி மற்றும் தோண்டி என்பதுக்கு தோண்டுதல் என்று பொருள். தொண்டி ( புதையல் / பொதியல் ) என்பதை  தோண்டி என்று பொருள்படுத்தி எடுத்தால், முத்துப்புதையல்  ( gems - மணி ) நிரம்ப கிடைக்கும் இடம் என்னும் பொருள் வரும்.தொண்டி முதல் , தொண்டிக்கட்டு போன்றவை தோண்டி ( நோண்டி ) எடுக்கப்பட்ட புதையல் என்று பொருள் கொடுக்கும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. இப்பேரூராட்சியின் இணையதளம்
  5. Thondamuthur Town Panchayat Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டாமுத்தூர்&oldid=2812136" இருந்து மீள்விக்கப்பட்டது