உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். பி. வேலுமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S.P.Velumani
சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி
தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்
பதவியில்
மே 2016 – ஏப்ரல் 2021
முதன்மை அமைச்சர்ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அமைச்சர்
பதவியில்
மே 2014 – ஏப்ரல் 2016
முதன்மை அமைச்சர்ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி க. பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
தொகுதிதொண்டாமுத்தூர்
பதவியில்
2006–2011
தொகுதிபேரூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 அக்டோபர் 1969 (1969-10-05) (அகவை 55)
சுகுணாபுரம், குனியமுத்தூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்வித்யாதேவி
பிள்ளைகள்மகன் விகாஷ், மகள் சாரங்கி
பெற்றோர்பழனிசாமி, மயிலாத்தாள்
வாழிடம்கதவு எண்.07/1C, சுகுணாபுரம் கிழக்கு, குனியமுத்தூர் அஞ்சல், கோயம்புத்தூர் மாவட்டம் -641 008
பணிவிவசாயம்
இணையத்தளம்நமக்காக எஸ்.பி.வி

எஸ். பி. வேலுமணி (இயற்பெயர்: சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி, பிறப்பு: 10 மே 1969) தமிழக அரசியல்வாதி ஆவார். 2006, 2011[1], 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.[2] நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகவும், பணியாற்றினார்.[3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ். பி. வேலுமணி கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் 05.10.1969 அன்று E. A. பழனிசாமி – மயிலாத்தாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கும் திருமதி வித்யாதேவிக்கும் கடந்த 11.03.1998-ல் திருமணம் நடைபெற்றது. எஸ். பி. வேலுமணி-வித்யாதேவி தம்பதிக்கு விகாஷ் என்ற மகனும், சாரங்கி என்ற மகளும் உள்ளனர். இவருக்கு எஸ். பி. அன்பரசன் என்ற மூத்த சகோதரரும், எஸ். பி. செந்தில்குமார் என்ற இளைய சகோதரரும் உள்ளனர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் முதுகலை பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் (MPhil) பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். தமிழக அரசியல்வாதியான இவர் 2006, 2011, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ல் முதன் முதலாக தமிழக அமைச்சராக பதவியேற்ற இவர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார்.

அரசியல் பயணம்

[தொகு]

ஆரம்பம் முதலே அதிமுகவில் இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி, மறைந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. குனியமுத்தூர் நகர் மன்றத் தலைவராக இருந்தவர். 2006-ம் ஆண்டு பேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதேபோல், 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வகிக்கும் கட்சி பதவிகள்

[தொகு]

அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும் எஸ். பி. வேலுமணி பதவி வகித்து வருகிறார்.

அதிமுகவில் களப்பணிகள்

[தொகு]

கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து களப்பணியாற்றும் எஸ்.பி.வேலுமணி, தொண்டர்களோடு தொண்டர்களாக பழகுவதால் அவரை தொண்டாமுத்தூரின் தொண்டர் என அதிமுகவினர் அன்போடு அழைக்கின்றனர். 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தனித்தனி அணியாக இருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓரணியாக இணைய எஸ்.பி.வேலுமணி முக்கிய பங்காற்றியவர். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் அதிமுகவின் வெற்றிக்காக பம்பரமாக களப்பணியாற்றுபவர்.

விருதுகளும் சிறப்புகளும்

[தொகு]
  • கடந்த 2011-ம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக 107 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 2018 – 19 ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் நாட்டிலேயே, தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எஸ்.பி.வேலுமணி தேசிய விருது பெற்றுள்ளார்.
  • 2011-12 ராஷ்டிரிய கௌரவ கிராமசபா விருது 1 (இராமநாதபுரம் மாவட்டம் மேதலோடை ஊராட்சி)
  • 2011-12 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 தேசிய விருதுகள் மாவட்ட அளவில் 2, ஒன்றியம் அளவில் 1, கிராமஊராட்சி 1
  • 2012-13 சிறந்த செயல்பாட்டுக்கான சமூக பங்களிப்பு என்ற தலைப்பில் தமிழகத்துக்கு தேசிய விருது
  • 2012-13 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 3 தேசிய விருதுகள் மாவட்ட அளவில் 1, ஒன்றியம் அளவில் 1, கிராமஊராட்சி 1
  • 2012-13 தேசிய அளவில் ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகள் 9 (6 கிராம ஊராட்சிகள் 2 ஊராட்சி ஒன்றியங்கள் 1 மாவட்ட ஊராட்சி ஒன்றியம்)
  • 2012-2013 ராஷ்டிரிய கௌரவ கிராமசபா விருது 1 (திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குளம் ஊராட்சி)
  • 2013-2014 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 3 தேசிய விருதுகள் மாவட்ட அளவில் 1 ஒன்றியம் அளவில் 1,கிராமஊராட்சி 1
  • 2014-15 ஆம் ஆண்டில் மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்திற்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது
  • 2014-15 தேசிய அளவில் ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகள் 9 (6 கிராம ஊராட்சிகள், 1 மாவட்ட ஊராட்சி, 2 ஊராட்சி ஒன்றியங்கள்)
  • 2017-18 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 5 தேசிய விருதுகள்
  • 2017-18 மத்திய அரசின், கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேசிய விருது
  • 2018-19 ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் நாட்டிலேயே, தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு பிரதமரிடமிருந்து தேசிய விருது
  • 2018-19 தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப முறையை சிறப்பாக செயல்படுத்தியதற்க மத்திய அரசின் இ-பஞ்சாயத் புரஸ்கார் விருது
  • 2018-19 ஊராட்சிகளின் சிறந்த செயல்பாடு, திறன் மேம்பாடு, ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது, ராஷ்டிரிய கௌரவ கிராம சபா விருது என 12 தேசிய விருதுகள்
  • 2018-19 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகள் (மாநில அளவில் 2, மாவட்ட அளவில் 4 ஊராட்சி ஒன்றிய அளவில் 1, கிராம ஊராட்சியில் 1)
  • 2018-19 மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின், சிறப்பான செயல்பாட்டிற்காக தேசிய விருது உள்ளிட்ட 2 விருதுகள்
  • 2018-19 தீன்தயாள் உபாயத்யாயா திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தமைக்காக, தேசிய தங்க விருது
  • 2018-19 தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காக 2 தேசிய விருதுகள்
  • 2019 ஆண்டில் மட்டும் ஊராட்சி அமைப்புகளின் சிறந்த செயல்பாட்டுக்காக ஒரே ஆண்டில் 31 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • 2012 -2019 வரை மொத்தம் உள்ளாட்சித்துறையில் தமிழகத்திற்காக இவர் 99 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்களிப்பு

[தொகு]

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ்.பி.வேலுமணி, ஊராட்சி முதல் மாநகராட்சி வரை பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இல்லந்தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமைச்சராக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் இவரது பங்கு முக்கியமானது. 2,500 சதுர அடிக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி இணையதளம் வாயிலாக வழங்கப்படும் என அறிவித்து நடுத்தர மக்களின் பாராட்டுகளை பெற்றவர். சென்னையில் 2019-ம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு சென்னை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர். ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். கோவை வளர்ச்சிக்காக பில்லூர் மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டமும், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் அமைக்க வித்திட்டவர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து, செயலாக்கத்திற்கு கொண்டு வந்தவர். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் இந்தியாவிலேயே முதல்முறையாக கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original on 2015-04-21. Retrieved 2016-06-11.
  2. "தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்". தி இந்து. 19 மே 2014. Retrieved 12 சூன் 2016.
  3. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Retrieved 29 மே 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "நமக்காக எஸ்.பி.வி". Archived from the original on 2020-05-10. Retrieved 2020-05-16.
  2. "சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் இந்தியாவிலேயே முதல்முறையாக கொடுங்கையூரில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தது". மாலை மலர். Retrieved 01 October 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சென்னை கோயம்பேட்டில் மூன்றாம் நிலை "கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது". தினகரன். Archived from the original on 1 டிசம்பர் 2019. Retrieved 01 December 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  4. "சென்னை மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் நாள்தோறும் தண்ணீர் கொண்டு வரும் திட்டம்". தினமலர். Retrieved 13 July 2019.
  5. "சென்னை மாநகராட்சியில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை துரிதப் படுத்தி இல்லங்கள் தோறும் கட்டடங்கள் தோறும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியது". Asianet News தமிழ். Retrieved 31 August 2019.
  6. "தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர் வாரி மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை திறம்பட செயல்படுத்தியது". தினமலர். Retrieved 12 July 2019.
  7. "நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் பெற திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது". தினத்தந்தி. Retrieved 28 June 2019.
  8. "குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றை இணையதளம் வாயிலாக வழங்கப்படும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது". இந்து தமிழ். Retrieved 28 August 2019.
  9. "தூய்மை இந்தியா திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாக செயல்படுத்தி தேசிய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருதை பெற்றது". விகடன். Retrieved 02 October 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "தூய்மை இந்தியா திட்டத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு". Times Now Tamil. Retrieved 03 October 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தேசிய விருது வழங்கினார் பிரதமர் மோடி". The Main News. Archived from the original on 31 ஜனவரி 2020. Retrieved 02 October 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  12. "ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம், தூய்மையில் இந்திய அளவில் தமிழகம் சிறப்பிடம்: பிரதமரிடம் விருதை பெற்றார் அமைச்சர் வேலுமணி". இந்து தமிழ். Retrieved 03 October 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "சென்னை மாநகராட்சியில் பள்ளி மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது". The Main News. Archived from the original on 31 ஜனவரி 2020. Retrieved 14 November 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "மாணவர்கள் சுகாதார விழிப்புணர்வு பேரணி: எஸ்.பி.வேலுமணி துவக்கினார்". மக்கள் குரல். Retrieved 14 November 2019.
  15. "சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 40,000 மாணவர்கள்... விழிப்புணர்வு வீடியோ மூலம் தூய்மைப் பணி". News18 தமிழ். Retrieved 05 November 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "மாணவ சுகாதார தூதர்கள் ! -சென்னை மாநகராட்சியின் புதுமை வீடியோ!". நக்கீரன். Retrieved 25 October 2019.
  17. "இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை துறையில் வீடுகள் தோறும் திடக்கழிவுகளை சேகரித்து, பதனிடுதல் மற்றும் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு செயல்திறன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் பணி". மக்கள் குரல். Retrieved 24 December 2019.
  18. "இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள ஸ்பெயின் நிறுவனத்துக்கு பணி ஆணை". The Main News. Archived from the original on 31 ஜனவரி 2020. Retrieved 24 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. "தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியது உட்பட, பல்வேறு பணிகளுக்காக, மத்திய அரசு சார்பில், தமிழக உள்ளாட்சி துறைக்கு, 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன". தினமலர். Retrieved 19 December 2019.
  20. "உள்ளாட்சியில் நல்லாட்சி: ஒரே நாளில் 13 தேசிய விருதுகளை பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!!". The Main News. Archived from the original on 31 ஜனவரி 2020. Retrieved 19 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. "தமிழகத்துக்கு மத்திய அரசின் 12 விருதுகள்!!! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்". The Main News. Archived from the original on 9 டிசம்பர் 2019. Retrieved 23 October 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  22. "சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி". The Main News. Archived from the original on 31 ஜனவரி 2020. Retrieved 19 November 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. "தமிழக அரசுக்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது: மின்னணு ஆளுகைத் திட்டத்துக்காக கிடைத்தது". இந்து தமிழ். Retrieved 25 April 2015.
  24. "தமிழக அரசுக்கு சிறந்த மின்னணு ஆளுகைக்கான விருது". News 7 தமிழ். Archived from the original on 31 ஜனவரி 2020. Retrieved 24 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  25. "தமிழக அரசுக்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது". தினமணி. Retrieved 24 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._வேலுமணி&oldid=4177145" இலிருந்து மீள்விக்கப்பட்டது