ஓ. பன்னீர்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓ. பன்னீர்செல்வம்
O. Paneerselvam.jpg
17 ஆம் தமிழக முதல்வர்
பதவியில்
29 செப்டம்பர் 2014 – 22 மே 2015
முன்னவர் ஜெயலலிதா
பின்வந்தவர் ஜெயலலிதா
தொகுதி போடிநாயக்கனூர்
12 ஆம் தமிழக முதல்வர்
பதவியில்
21 செப்டம்பர், 2001 – 1 மார்ச்சு, 2002
முன்னவர் ஜெ. ஜெயலலிதா
பின்வந்தவர் ஜெ. ஜெயலலிதா
தொகுதி பெரியகுளம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜனவரி 14 1951
பெரியகுளம் தமிழ்நாடு
அரசியல் கட்சி அதிமுக
இருப்பிடம் சென்னை
பணி விவசாயம்
சமயம் இந்து

ஓ. பன்னீர்செல்வம் (பிறப்பு: ஜனவரி 14 1951) முன்னாள் தமிழக முதல்வர் ஆவார். தேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்த இவர் அ. இ. அ. தி. மு. கழகத்தின் பொருளாளராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்[தொகு]

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.

சட்டமன்றப் பங்களிப்புகள்[தொகு]

இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]

2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.

2016 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]

2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.

தமிழக முதல்வராக[தொகு]

முதல் முறை[தொகு]

டான்சி வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால் இவர் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

இரண்டாம் முறை[தொகு]

27 செப்டம்பர் 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார். தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அ. தி. மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.[1] சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து 22.05.2015 அன்று நடந்த அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாட்டு முதலமைச்சர்
செப்டம்பர் 2001- மார்ச் 2002
பின்னர்
ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாட்டு முதலமைச்சர்
27 செப்டம்பர்2014 - 22 மே 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._பன்னீர்செல்வம்&oldid=2073283" இருந்து மீள்விக்கப்பட்டது