கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி (ஆங்கிலம்:Karumathampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சந்தைப்பகுதியாகவும், விசைத்தறி நெசவு, சைசிங் மில்ஸ் முக்கிய தொழில்களாக உள்ளது,
அமைவிடம்[தொகு]
இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள் திருப்பூர் 25 கிமீ, பல்லடம் 20 கிமீ தொலைவிலும் உள்ளது. சோமனூரில் இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
27 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 167 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 10071 வீடுகளும், 35062 மக்கள்தொகையும் கொண்டது.[2][3]
கல்வி நிறுவனங்கள்[தொகு]
ஆர்.சி . மாதிரி துவக்கப்பள்ளி
சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
இணைப்பு நகரங்கள்[தொகு]
கருமத்தம்பட்டி, தேசிய நெடுஞ்சாலை எண் 47-இல் அமைந்து உள்ளதால் 24 மணி நேரமும் பேருந்து மூலமாக தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ கருமாத்தம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/karumathampatti/population
- ↑ Karumathampatti Town Panchayat Population Census 2011
- ↑ http://www.facebook.com/?ref=logo#!/group.php?gid=115094731845579&ref=ts