தமிழக நகராட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரை
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

TamilNadu Logo.svg

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 150 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையிலான அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன் விதி 243 டபுள்யூ நகராட்சிகள் அமைக்க, அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது. தமிழகத்தில் நகராட்சி அமைப்புச் சட்டத்தின் படி தற்போது 49 மூன்றாம் படி நிலை நகராட்சிகள் உட்பட 148 நகராட்சிகள் இயங்குகின்றன.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

தொடர்புடையவை[தொகு]

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_நகராட்சிகள்&oldid=3071764" இருந்து மீள்விக்கப்பட்டது