ஆரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரணி
—  தேர்வு நிலை நகராட்சி  —
ஆரணி
இருப்பிடம்: ஆரணி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°40′N 79°17′E / 12.67°N 79.28°E / 12.67; 79.28ஆள்கூற்று: 12°40′N 79°17′E / 12.67°N 79.28°E / 12.67; 79.28
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர் ஆனந்தகுமாரி
மக்களவைத் தொகுதி ஆரணி
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3533589(Qualifier Political party (102) is missing under P585 in d:Q3533589)

சட்டமன்றத் தொகுதி ஆரணி
சட்டமன்ற உறுப்பினர்

இராமசந்திரன் (அதிமுக)

மக்கள் தொகை 63,671 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


151 metres (495 ft)

ஆரணி (ஆங்கிலம்:Arani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய நகராட்சியும் உள்ளது. ஆரணி நகராட்சி, ஆரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு காஞ்சிபுரம் திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு மற்றும் பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் இந்த ஆரணி நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°40′N 79°17′E / 12.67°N 79.28°E / 12.67; 79.28 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 மீட்டர் (495 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆரணி கமண்டல நாகநதி கரையில் அமைந்துள்ளது.12.67°N 79.28°E

ஆரணி, சென்னையிலிருந்து 126 கி.மீ தொலைவிலும், வேலூரில் இருந்து 38 கி.மீ தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து இருந்து 60.கி.மீ தொலைவிலும் உள்ளது .

இந்நகரம் பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, மாநில நெடுஞ்சாலைகள்-4 ஆற்காடு – ஆரணி – செஞ்சி – விழுப்புரம் சாலை, மாநில நெடுஞ்சாலை-132 வேலூர் – ஆரணி சாலை, ஆரணி-திருவண்ணாமலை சாலை ஆகிய முக்கிய சாலைகள் ஆரணியை இணைக்கின்றன. ஆரணிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் களம்பூர். இது 10.7 கி.மீ (6.65 mi) தொலைவில் ஆரணி-போளூர் சாலையில் அமைந்துள்ளது.

ஆரணிக்கு வெளியே ஆரணியை இணைக்க சென்னை (ஆற்காடு) சாலை, சென்னை சாலை மற்றும் கடலூர் சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆரணி வழியாக ரயில்கள் இணைக்க நகரில் இருந்து திண்டிவனம் பாதை மத்திய அரசு மூலம் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அத்துடன், ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் களம்பூருக்கு மாற்றப்பட்டது.


ஆரணி பேருந்து போக்குவரத்து நிர்வாக வசதிக்காக ஆரணியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை:


1. புதிய பேருந்து நிலையம் (அ) கோட்டை பேருந்து நிலையம்


திருவண்ணாமலை, போளூர், செங்கம், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர்,ஈரோடு,திருச்சி, வந்தவாசி, சேத்பட், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, உத்திரமேரூர், கடலூர், படவேடு, தேவிகாபுரம், வாழைப்பந்தல் மற்றும் துரிஞ்சிகுப்பம் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் கிராம பகுதிகளில் செல்லும் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்.


2. பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்


சென்னைக்கு (தடம் எண்:202)அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. குறிப்பாக 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. சொகுசு, டீலக்ஸ்(தடம் எண் - 202UD) பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது.


சென்னை, திருவள்ளூர், தாம்பரம், காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி, வேலூர், பெங்களூரு, கண்ணமங்கலம், கலவை, பூந்தமல்லி, சித்தூர், அமிர்தி(ஜவ்வாது மலை) வரை செல்லும் பேருந்துகள் மற்றும் கிராம பகுதிகளில் செல்லும் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14,889 வீடுகளுடன், 63,671 மக்கள் ஆரணி நகரத்தில் வசிக்கின்றார்கள். மக்கள்தொகையில் ஆண்கள் 31,268 ஆகவும், பெண்கள் 32,403 ஆகவுள்ளனர். ஆரணி மக்களின் சராசரி கல்வியறிவு 85.41% ஆகும். ஆரணி நகர மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 9.97% ஆகும். ஆரணி நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 89.16%, இசுலாமியர்கள் 7.39%, கிறித்தவர்கள் 1.80%, தமிழ்ச் சமணர்கள் 1.43% ஆகவும், மற்றவர்கள் 0.21% ஆகவுள்ளனர்.[5]

இதனையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Arani". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  5. Arani Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி&oldid=2733082" இருந்து மீள்விக்கப்பட்டது