ஆரணி வட்டம்

ஆள்கூறுகள்: 12°40′30″N 79°17′04″E / 12.6751077°N 79.2843245°E / 12.6751077; 79.2843245
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரணி
வருவாய் வட்டம்
ஆரணி is located in தமிழ் நாடு
ஆரணி
ஆரணி
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 12°40′30″N 79°17′04″E / 12.6751077°N 79.2843245°E / 12.6751077; 79.2843245
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை மாவட்டம்
அரசு
 • வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,94,976
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTN-97

ஆரணி வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் தலைமையிடமாகவும் ஆரணி அமைந்துள்ளது. [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆரணி நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் 5 உள்வட்டங்களும் 55 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

2012-இல் ஆரணி வட்டத்தின் தென்பகுதிகளைக் கொண்டு சேத்துப்பட்டு வட்டம் நிறுவப்பட்டது.

இவ்வட்டத்தில் ஆரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

ஆரணி வட்டத்தில் ஒரு ஆரணி தேர்வு நிலை நகராட்சியும் மற்றும் கண்ணமங்கலம் பேரூராட்சியும்,சத்திய விஜய நகரம் பேரூராட்சியும், தேவிகாபுரம் பேரூராட்சியும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 294,976 ஆகும். அதில் 146,822 ஆண்களும், 148,154 பெண்களும் உள்ளனர். 70,667 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 62.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.79% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31125 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 950 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 52,912 மற்றும் 1,158 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.45%, இசுலாமியர்கள் 3.57%%, கிறித்தவர்கள் 1.25% சமணர்கள் 0. 0.56% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[3]


அமைவிடம்[தொகு]

ஆரணி வட்டத்தின் எல்லைகளாக வடக்கே ஆற்காடு வட்டமும்,கிழக்கே வந்தவாசி வட்டமும் மற்றும் செய்யார் வட்டமும், தெற்கே சேத்துப்பட்டு வட்டமும், மேற்கே போளூர் வட்டமும் மற்றும் வேலூர் வட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளது.

வருவாய் கிராமங்கள்[தொகு]

இந்த ஆரணி வட்டத்தில் 55 வருவாய் கிராமங்கள் உள்ளன.[4]

 1. ஆகரம்
 2. ஆதனூர்
 3. அடையபுலம்
 4. அக்ராபாளையம்
 5. அரையாளம்
 6. அரியப்பாடி
 7. ஆரணி நகராட்சி
 8. ஆரணி மேற்கு
 9. அத்திமலைப்பட்டு
 10. அய்யம்பாளையம்
 11. இரும்பேடு
 12. கல்பூண்டி
 13. கண்ணமங்கலம் பேரூராட்சி
 14. காட்டுகாநல்லூர்
 15. கீழ்நகர்
 16. கொளத்தூர்
 17. குண்ணத்தூர்
 18. குப்பம்
 19. மாமண்டூர்
 20. மருசூர்
 21. மட்டதாரி
 22. மேல்நகர்
 23. மெய்யூர்
 24. மூர்பந்தாங்கல்
 25. முள்ளண்டிரம்
 26. முள்ளிப்பட்டு
 27. நெசல்
 28. ஓகையூர்
 29. பையூர்
 30. பாளையம்
 31. பனையூர்
 32. பூசிமலைக்குப்பம்
 33. புதூர் 5
 34. புலவன்பாடி
 35. புங்கம்பாடி
 36. புத்தூர் 2
 37. ராந்தம்கொரட்டூர்
 38. ரத்தினமங்கலம்
 39. ச.வி.நகரம்
 40. சென்னநந்தல்
 41. சேவூர்
 42. சிறுமூர்
 43. தச்சூர்
 44. வடுகசாத்து
 45. வண்ணாங்குளம்
 46. வேலப்பாடி
 47. வெள்ளேரி
 48. வெட்டியாந்தொழுவம்
 49. விண்ணமங்கலம்
 50. பெரியகொழப்பலூர்
 51. அய்யம்பேட்டை
 52. விளைசித்தேரி
 53. ராட்டினமங்கலம்
 54. ஒண்ணுபுரம்
 55. மலையாம்பட்டு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_வட்டம்&oldid=3494885" இலிருந்து மீள்விக்கப்பட்டது