ஆரணி (சட்டமன்றத் தொகுதி)
ஆரணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 67. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ஆற்காடு, கலசப்பாக்கம், போளூர், செய்யார், வந்தவாசி, வேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
ஆரணி தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவிகிதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 28 சதவிகிதமும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 17 சதவிகிதமும், இதர சமூகத்தினர் 25 சதவிகிதம் உள்ளனர்.
ஆரணி தொகுதியில் விவசாயம், நெசவுத் தொழில், அரிசி ஆலை உள்ளிட்டவை பல்வேறு தொழில்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று கூறும் அளவிற்கு ஆரணி தொகுதி உள்ளது. அதேபோல், இந்தியாவில் பட்டு உறுபத்தி செய்யும் தொகுதிகளில் ஒன்றாக ஆரணி தொகுதி உள்ளது. ஆரணி பட்டு மிகவும் பிரசித்தி பெற்றது
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி, ஆரணி வட்டத்தில் உள்ள ஊராட்சிகள்
- செய்யார் வட்டம் (பகுதி)
கடுகனூர், மேல்நகரம்பேடு, மேல்மட்டை, விண்ணமங்கலம், அகத்தேரிப்பட்டு, மாளிகைப்பட்டு, மேல்கொவளைவேடு, வள்ளேரிப்பட்டு, புதுக்கோட்டை, நாவல்பாக்கம், கொருக்கத்தூர், முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம், திருமணி, மேல்புத்தூர், தேவனாத்தூர் மற்றும் பில்லாந்தி கிராமங்கள்[1].
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | வி. கே. கண்ணன் | பொது நல கட்சி | 17761 | 48.14 | டபள்யு. எசு. சீனிவாச ராவ் | காங்கிரசு | 10329 | 28.00 |
1957 | பி. துரைசாமி ரெட்டியார் | சுயேச்சை | 20237 | 51.59 | வி. கே. கண்ணன் | காங்கிரசு | 18989 | 48.41 |
1962 | கோதண்டராம பாகவதர் | காங்கிரசு | 30773 | 51.60 | எ. சி. நரசிம்மன் | திமுக | 23055 | 38.66 |
1967 | எ. சி. நரசிம்மன் | திமுக | 38038 | 60.74 | டி. பி. ஜெ. செட்டியார் | காங்கிரசு | 17320 | 27.66 |
1971 | எ. சி. நரசிம்மன் | திமுக | 37682 | 60.50 | எம். தருமராசன் | ஸ்தாபன காங்கிரசு | 24599 | 39.50 |
1977 | வீ. அர்ச்சுனன் | அதிமுக | 33925 | 41.47 | ஈ. செல்வராசு | திமுக | 24703 | 30.20 |
1980 | ஏ.சி. சண்முகம் | அதிமுக | 42928 | 50.65 | ஈ. செல்வராசு | திமுக | 37877 | 44.69 |
1984 | எம். சின்னகுழந்தை | அதிமுக | 54653 | 54.83 | ஆர். சிவானந்தம் | திமுக | 43620 | 43.76 |
1989 | எ. சி. தயாளன் | திமுக | 38558 | 36.21 | டி. கருணாகரன் | அதிமுக (ஜெ) | 30891 | 29.01 |
1991 | ஜெய்சன் ஜேக்கப் | அதிமுக | 66355 | 58.51 | ஈ. செல்வராசு | திமுக | 32043 | 28.26 |
1996 | ஆர். சிவானந்தம் | திமுக | 63014 | 51.29 | எம். சின்னகுழந்தை | அதிமுக | 44835 | 36.49 |
2001 | கா. இராமச்சந்திரன் | அதிமுக | 66371 | 50.98 | ஏ. சி. சண்முகம் | புதிய நீதி கட்சி | 52889 | 40.62 |
2006 | ஆர். சிவானந்தம் | திமுக | 69722 | --- | எ. சந்தானம் | அதிமுக | 57420 | --- |
2011 | ஆர். எம். பாபு முருகவேல் | தேமுதிக | 88,967 | 50.06 | ஆர். சிவானந்தம் | திமுக | 81001 | 45.58 |
2016 | சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக | 94074 | 45.27 | சி. பாபு | திமுக | 86747 | 41.75% |
2021 | சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக[2] | 102,961 | 46.50 | எஸ். எஸ். அன்பழகன் | திமுக | 99,833 | 45.09 |
- 1977ல் ஜனதாவின் எம். தேலூர் தர்மராசன் 19448 (23.78%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் ஏ. சி. சண்முகம் 21827 (20.50%) & காங்கிரசின் எ. லோகநாதன் 12793 (12.01%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991ல் பாமகவின் எம். மூர்த்தி கவுண்டர் 11902 (10.50%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் டி. ரமேசு 6292 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வெளியிட்ட தேதி | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
10.01.2018 | 126629 | 133145 | 5 | 259779 | .திருவண்ணாமலை மாவட்ட இணையதளம் |
26.12.2019 | 128190 | 135117 | 11 | 263318 | திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1749 | % |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ஆரணி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா