கண்ணமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]

கண்ணமங்கலம்
—  முதல் நிலை பேரூராட்சி  —
கண்ணமங்கலம்
இருப்பிடம்: கண்ணமங்கலம்
,
அமைவிடம் 12°45′03″N 79°09′36″E / 12.750919°N 79.15999°E / 12.750919; 79.15999ஆள்கூற்று: 12°45′03″N 79°09′36″E / 12.750919°N 79.15999°E / 12.750919; 79.15999
நாடு  இந்தியா
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் ஆரணி
மக்களவைத் தொகுதி கண்ணமங்கலம்
மக்கள் தொகை

அடர்த்தி

7,399 (2011)

1,541/km2 (3,991/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.80 சதுர கிலோமீட்டர்கள் (1.85 sq mi)

கண்ணமங்கலம் (ஆங்கிலம்:Kannamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

திருவண்ணாமலையிலிருந்து 64 கிமீ தொலைவில் உள்ள கண்ணமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே ஆரணி 16 கிமீ; மேற்கே சவ்வாது மலை 50 கிமீ; வடக்கே வேலூர் 22 கிமீ மற்றும் ஆற்காடு 32 கி.மீ தொலைவிலும், தெற்கே போளூர் 26 கிமி தொலைவில் உள்ளது. கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - ‌‌‌‌‌‌‌சித்தூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் - ஆரணி - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள அழகிய நகரமாகும்.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

4.80 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆரணி (சட்டமன்றத தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2]


போக்குவரத்து வசதிகள்[தொகு]

கண்ணமங்கலம்தில் பேருந்து வசதிகளை பொறுத்த வரை 24 மணி நேரமும் செயல்படும். வேலூரிலிருந்து, ஆரணி மற்றும் திருவண்ணாமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்லும். அதுமட்டுமல்லாமல் ஆற்காடு,பூந்தமல்லி, வழியாக சென்னைக்கும்அதிக பேருந்து வசதிகளும் உள்ளன. கடலூர்,விழுப்புரம், செய்யாறு,சேத்பட், செஞ்சி,மேல்மலையனூர், வந்தவாசி,தேவிகாபுரம், படவேடு,செங்கம், போளூர்,திருப்பதி, குடியாத்தம், பெங்களூரு, சிதம்பரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி,பண்ருட்டி, திருச்சி, மதுரை, புதுச்சேரி, மற்றும் அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரப்பேருந்து வசதிகளும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,696 வீடுகளும், 7,399 பேராக மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு வீதம் 83.68% அகும். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1038 பெண்கள் வீதம் ஆக அமைகிறது. [3]

ஆதாரங்கள்[தொகு]

  1. chetpet
  2. கண்ணமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
  3. Kannamangalam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணமங்கலம்&oldid=2801392" இருந்து மீள்விக்கப்பட்டது