சமுனாமரத்தூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமுனாமரத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. [1] போளூர் வட்டத்தின் மேற்கு பகுதிகளையும்; செங்கம் வட்டத்தின் வடக்குப் பகுதிகளையும் கொண்டு, இவ்வட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சமுனாமரத்தூரில் இயங்குகிறது. இவ்வட்டத்தின் கீழ் 42 வருவாய் கிராமங்கள் உள்ளது.

சவ்வாது மலைப் பகுதியில் அமைந்த சமுனாமரத்தூர் வட்டத்தில் சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

அமைவிடம்[தொகு]

சவ்வாதுமலை வட்டத்திற்கு தெற்கில் செங்கம் வட்டமும்; வடகிழக்கில் போளூர் வட்டமும்; தென்கிழக்கில் கலசப்பாக்கம் வட்டமும்; மேற்கிலும், வடக்கிலும் வேலூர் மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டது.

மாவட்டத் தலைமையிடம் திருவண்ணாமலைக்கு வடமேற்கே 80 கிமீ தொலைவிலும்;ஆரணியிலிருந்து 69 கிமீ தொலைவிலும், வேலூரிலிருது 87 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 222 கிமீ தொலைவிலும் சவ்வாது மலை உள்ளது. [2]

வருவாய் கிராமங்கள்[தொகு]

சவ்வாது மலை வருவாய் வட்டம் 42 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்
  2. [1]

வெளி இணைப்புக்ள்[தொகு]