கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர்
KILPENNATHUR திருவண்ணாமலை புறநகர் பகுதி | |
|---|---|
முதல் நிலை பேரூராட்சி | |
| அடைபெயர்(கள்): திருவண்ணாமலை புறநகர் பகுதி | |
| ஆள்கூறுகள்: 12°15′01″N 79°13′32″E / 12.2502272°N 79.2256532°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மண்டலம் | தொண்டை மண்டலம் |
| வருவாய் கோட்டம் | திருவண்ணாமலை |
| சட்டமன்றத் தொகுதி | கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி |
| மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
| தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
| அரசு | |
| • வகை | முதல் நிலை பேரூராட்சி |
| • நிர்வாகம் | கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி |
| • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | திருவண்ணாமலை |
| • மக்களவை உறுப்பினர் | திரு.சி.அண்ணாதுரை |
| • சட்டமன்ற உறுப்பினர் | திரு. கு.பிச்சாண்டி |
| • மாவட்ட ஆட்சியர் | திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
| • பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 13,718 |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீடு | 604601 |
| வாகனப் பதிவு | TN 25 |
| ஊராட்சி ஒன்றியம் | கீழ்பென்னாத்தூர் |
| சென்னையிலிருந்து தொலைவு | 176 கி.மீ. |
| திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 18 கி.மீ. |
| புதுச்சேரியிலிருந்து தொலைவு | 88 கி.மீ. |
| வேட்டவலத்திலிருந்து தொலைவு | 23 கி.மீ. |
| விழுப்புரத்திலிருந்து தொலைவு | 61 கி.மீ. |
| பெங்களூரிலிருந்து தொலைவு | 221 கி.மீ. |
| திண்டிவனத்திலிருந்து தொலைவு | 50 கி.மீ. |
| இணையதளம் | கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி |
கீழ்பென்னாத்தூர் (ஆங்கிலம்:Kilpennathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் வட்டம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். கீழ்பென்னாத்தூர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]இந்த நகரம் பெங்களூரு - திருவண்ணாமலை - புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 16 கி.மீ. உள்ள கீழ்பெண்ணாத்தூர் அருகே அமைந்த தொடருந்து நிலையம் திருவண்ணாமலை ஆகும். இதன் கிழக்கில் செஞ்சி 18 கி.மீ.; வடக்கில் வேட்டவலம் 23 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]12.44 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3152 வீடுகளும், 13,718 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4100 மற்றும் 93 ஆகவுள்ளனர்.[3]
நிர்வாகம் மற்றும் அரசியல்
[தொகு]| பேரூராட்சி அதிகாரிகள் | |
|---|---|
| தலைவர் | |
| ஆணையர் | |
| தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
| சட்டமன்றத் தொகுதி | கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) |
| சட்டமன்ற உறுப்பினர் | திரு.கு.பிச்சாண்டி |
| மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
| மக்களவை உறுப்பினர் | திரு.சி.என்.அண்ணாதுரை |
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி, கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
- ↑ கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kilpennathur Population Census 2011
- ↑ "திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226365-thiruvannamalai-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025.