போளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போளூர்
போளூர்
இருப்பிடம்: போளூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13ஆள்கூற்று: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் போளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

28,123 (2011)

2,236/km2 (5,791/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

12.58 சதுர கிலோமீட்டர்கள் (4.86 sq mi)

171 மீட்டர்கள் (561 ft)

இணையதளம் www.townpanchayat.in/polur

போளூர் (ஆங்கிலம்:Polur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வட்டம் மற்றும் போளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

திருவண்ணாமலை - வேலூர் வழித்தடத்தில் அமைந்த போளூர் பேரூராட்சிக்கு தெற்கே திருவண்ணாமலை 38 கிமீ; வடக்கே வேலூர் 52 கிமீ; கிழக்கே சேத்துப்பட்டு 28 கிமீ மற்றும் மேற்கே சமுனாமரத்தூர் 48 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

12.58 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 86 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,706 வீடுகளும், 28,123 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.87% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர். [5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது திருவண்ணாமலை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது

சிறப்புகள்[தொகு]

போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அருகில் உள்ளது. திருவண்ணாமலைக்கு வேலூர்இருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் வட தமிழகம்ஆகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ள்து. போளூர் மலையிில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.

இது சுயம்பு வடிவம் ஆனது.

போக்குவரத்து[தொகு]

போளூரில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பேருந்து சேவைகள் நடைபெறுகிறது. போளூரிலிருந்து சென்னைக்கு ஆரணி, ஆற்காடு (தடம் எண் - 202 UD) வழியாகவும், மற்றும் சேத்துப்பட்டு, வந்தவாசி, உத்திரமேரூர் (தடம் எண் - 148) வழியாகவும் அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படுகன்றன.

வேலூர்,ஆரணி மற்றும் செய்யாறு லிருந்து திருவண்ணாமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். அதுமட்டுமின்றி குறிப்பாக, திருவண்ணாமலை, வேலூர், பெங்களூர், திருப்பூர், ஆரணி, சேலம், திருப்பதி, கோயம்புத்தூர், ஒகேனக்கல், செங்கம், தாம்பரம், செய்யாறு, சேத்பட், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செஞ்சி, ஆத்தூர், திருச்சி, சிதம்பரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், படவேடு, வந்தவாசி, உத்திரமேரூர், கண்ணமங்கலம் மற்றும் துரிஞ்சிகுப்பம், சாத்தனூர் அணை ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. அதுமட்டுமின்றி கிராமப்புறங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக துரிஞ்சிகுப்பம்,அவலூர்பேட்டை, பாடகம், மங்கலம், ஆதமங்கலம்புதூர், பர்வதமலை, கலசப்பாக்கம், மன்சுராபாத், இன்னும் அதிகப்படியான ஊர்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ரயில் போக்குவரத்து[தொகு]

போளூரில் ஒரு ரயில் நிலையமும் உள்ளது. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - களம்பூர் (ஆரணி ரோடு) - வேலூர் (காட்பாடி) - திருப்பதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர ரயில்கள் மற்றும் அனைத்து ரயில்களும் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. போளூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Polur Population Census 2011
  6. "Polur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=போளூர்&oldid=2790912" இருந்து மீள்விக்கப்பட்டது