காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்
வேலூர் காட்பாடி சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
காட்பாடி தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கடலூர்- திருவண்ணாமலை - வேலூர்- சித்தூர் நெடுஞ்சாலை, காட்பாடி, வேலூர், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°58′20″N 79°8′18″E / 12.97222°N 79.13833°E | ||||
ஏற்றம் | 213 மீட்டர்கள் (699 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை சென்ட்ரல் - பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 9 | ||||
இணைப்புக்கள் | |||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | KPD | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சென்னை | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
வேலூர் காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம் (Katpadi Junction, நிலையக் குறியீடு:KPD) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் நகரிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை - பெங்களூரு மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயில் சுத்தமாகவும் பராமரிக்கப்படும் இரயில் நிலையத்தில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் இரயில் நிலையங்களில் காட்பாடி இரயில் நிலையமும் ஒன்றாகும். இது கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் நெடுஞ்சாலை ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் சித்தூர் நெடுஞ்சாலையில் நகரின் வடக்கு இறுதியில் அமைந்துள்ளது.
இட அமைப்பு
[தொகு]இந்த நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 4 மற்றும் 5 நடைமேடைகள் வழியாக முதன்மையாக வேலூர் கண்டோன்மென்ட் தொடருந்து நிலையம் வழியாக தெற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் இரயில்கள் நின்று செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 150க்கும் அதிகமான பயணிகள் இரயில்கள் (இருபுறமும்) வேலூர்-காட்பாடி சந்திப்பு வழியாக செல்கின்றன. தளமேடை 1 முதல் 3வரை, சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பயணிகள் இரயில்கள் முதன்மையாக இயக்கப்படுகின்றன.[1][2]
வசதிகள்
[தொகு]- ஐ.ஆர்.சி.டி.சி மூலம் பராமரிக்கப்படும் உணவுத் தளம் 1 மற்றும் 2 தளங்களில் அமைந்துள்ளது.
- நடைமேடை 1, 2 மற்றும் 3 தளங்களில் ஆவின் பால் சாவடி, காபி ஷாப்பிங், ஹோட்டல், புக் ஸ்டால் மற்றும் பழ ஸ்டால்கள் வரை புதுப்பித்தல் கடைகளும் உள்ளன.
- கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் நடைமேடை 1, 2, 3 மற்றும் 5 ஆகிய இடங்களில் உள்ளன.
- ஏ.டி.எம் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ளது.
- டிஜிட்டல் போர்டு நடைமேடை 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் வந்து செல்லும் தொடருந்துகளின் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இட அமைப்பு உடன் காட்டுகிறது.
- பார்சல் முன்பதிவு அலுவலகம், இரயில்வே அஞ்சல் சேவை (ஆர்.எம்.எஸ்) ஆகியவை இருக்கின்றன. உயரக மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள் காத்திருக்கும் அறைகள் நடைமேடை 1, 2 மற்றும் 3ல் உள்ளன.
- பெண்களுக்கான தனி காத்திருக்கும் மண்டபம்.
- இந்த நிலையத்தில் நடைமுறையில் முன்பதிவற்ற பயணிகளுக்கான ஐந்து நுழைவுச்சீட்டு சேவை முகப்புகள் உள்ளன. நீண்ட தொலைவு இரயில்களுக்கான ஏழு முன்பதிவு சேவைமுகப்புகள் (கவுன்டர்கள்) தனி கட்டிடத்தில், இரயில் நிலையத்தில் முதன்மை நுழைவாயிலில் அமைந்துள்ளது.
- இரயில்வே காவல் நிலையம் (RPF) நடைமேடை எண்.1 இல் அமைந்துள்ளது.
- பயணிகளின் பாதுகாப்புக்கு, தெற்கு இரயில்வே எல்லா தளங்களிலும் கேமராக்களை நிறுவியுள்ளது.
- நடைமேடை 1இல் ஒரு CMC மருத்துவமனை உதவி மையம் செயல்படுகிறது.[3]
போக்குவரத்து
[தொகு]காட்பாடி நிலையத்திலிருந்து 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியே இரயில் நிலையத்தை இணைக்கும் பஸ் வசதிகள் கிடைக்கின்றன. டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.
இரயில் பயணிகள்
[தொகு]சென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி சந்திப்புக்கு தினமும் சராசரியாக முன்பதிவு செய்யாத 2,280 பயணிகள், வேலூருக்கு வருகை தருகின்றனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "KPD / Katpadi to VLR / Vellore Cantt. - 14 Trains - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
- ↑ "MSB/Chennai Beach (8) Railway Station - Today's Train Arrival Timings - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
- ↑ "Yeshwantpur, Bangalore Cantonment to have food plazas soon - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2010-02-16. Archived from the original on 2013-10-31. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)