திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி௫ச்சிராப்பள்ளி சந்திப்பு
இந்திய இரயில் நிலையம்
Tiruchirapalli junction.JPG
தி௫ச்சிராப்பள்ளி சந்திப்பின் முகப்பு வாயில்
இடம்ராக்கின்ஸ் சாலை, திருச்சி, தமிழ்நாடு,  இந்தியா
அமைவு10°49′N 78°41′E / 10.81°N 78.69°E / 10.81; 78.69ஆள்கூறுகள்: 10°49′N 78°41′E / 10.81°N 78.69°E / 10.81; 78.69
உரிமம்தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே
தடங்கள்தி௫ச்சி - சென்னை எழும்பூர்
தி௫ச்சி - கன்னியாகுமரி
தி௫ச்சி - ஈரோடு
தி௫ச்சி - தஞ்சாவூர்
தி௫ச்சி - புதுக்கோட்டை
நடைமேடை7
இருப்புப் பாதைகள்32
இணைப்புக்கள்பேருந்து, டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடுTPJ
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்உள்ளது
முந்தைய பெயர்மதராஸ் மற்றும் தென்னக மராத்திய இரயில்வே
போக்குவரத்து
பயணிகள் (2012)ஒரு நாளிள் 1,00,000 நபர்கள்
சேவைகள்
ஒரு நாளிள் 110 அதிவிரைவு இரயில்கள்
ஒரு நாளிள் 40 பாசஞ்சர் இரயில்கள்

திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னிந்தியாவின் முக்கியமான தொடர்வண்டி சந்திப்புகளுள் ஒன்றான இது, தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. திருச்சிராப்பள்ளி தொடர்வண்டிச் சந்திப்பின் குறியீடு TPJ ஆகும்.

வரலாறு[தொகு]

1853ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியை தலையிடமாகக் கொண்டு, தென்னக இரயில்வே (The Great Southern of India) உருவாக்கப்பட்டது. [1] 1859ம் ஆண்டில், தென்னகத்தின் முதல் இருப்புப் பாதையான திருச்சிராப்பள்ளி - நாகப்பட்டினம் அமைக்கப்பட்டது. தற்போது, தென்னிந்தியாவின் முக்கிய தொடர்வண்டி சந்திப்பாகவும், தென்னக இரயில்வேயின் தனிப் பெரும் மண்டலமாகவும் உருபெற்றுள்ளது.[2]

சிறப்பம்சங்கள்[தொகு]

 • குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
 • சாமான்களை சோதிக்கும் எந்திரம்
 • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
 • உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
 • குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை (முதல் வகுப்பு பயணியருக்கு)
 • சரக்கு இரயில்களுக்கான தனி இருப்புப் பாதை
 • எளிதில் சென்றடையக்கூடிய டாக்ஸி, ஆட்டோ நிறுத்தம்
 • உடைமை பாதுகாப்பு அறை
 • ஊனமுற்றோர், முதியோருக்கான இலவச மின்கல ஊர்தி (சாமான்களுக்கு அனுமதியில்லை)
 • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி

வளர்ச்சியும் வளமையும்[தொகு]

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரயில்வே பாலம்
 • இந்தியாவின் சுறுசுறுப்பான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.
 • இந்தியாவின் தலைசிறந்த தொடருந்து நிலையங்களில் முதன்மையான இடம் [1]
 • தமிழகத்தில் சென்னை சென்ட்ரலுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய தொடருந்து சந்திப்பு நிலையம்.
 • இதன் மண்டலத்தில் தினசரி 200 இரயில்கள் கடந்து செல்கின்றன.
 • தொடருந்து சந்திப்பு நிலையத்தை உலகத் தரத்திற்கு மாற்றியமைக்கும் பணி மும்முரமாக நடந்துவருகின்றது.
 • திருச்சி(TPJ) - கன்னியாகுமரி(CAPE) மின்மயமாக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
 • சிறந்த மின்சார கையாளுமைக்கான 5 நட்சத்திரக் குறியீடு பெற்ற ஒரு சில தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.

அகல இருப்புப் பாதை[தொகு]

3ம் நடைமேடை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்
 • விழுப்புரம் - விருத்தாச்சலம் - திருச்சிராப்பள்ளி
 • திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் - கும்பகோணம் - மயிலாடுதுறை - கடலூர் துறைமுகம் - விழுப்புரம்
 • விழுப்புரம் - பாண்டிச்சேரி
 • விருத்தாசலம் - கடலூர் துறைமுகம்
 • தஞ்சாவூர் - காரைக்கால் துறைமுகம் - காரைக்கால்
 • திருச்சிராப்பள்ளி சந்திப்பு - திருச்சிராப்பள்ளி கோட்டை
 • நாகப்பட்டிணம் - வேளாங்கன்னி
 • நீடாமங்கலம் - மன்னார்குடி
 • மயிலாடுதுறை - திருவாரூர்
 • விழுப்புரம் - வேலூர் இராணுவ முகாம்
 • காரைக்குடி - திருவாரூர் (பட்டுக்கோட்டை வழி)

குறுகிய இருப்புப் பாதை[தொகு]

 • திருத்துறைபூப்ண்டி - அகஸ்தியம்பள்ளி (பயன்பாட்டில் இல்லை)

திருச்சியிலிருந்து கிளம்பும் தொடருந்துகள்[தொகு]

 • திருச்சி - ஹவுரா (12664/12663) (ஹவுரா அதிவிரைவு வண்டி)
 • திருச்சி - சென்னை (16178/16177) (மலைக்கோட்டை விரைவு வண்டி)
 • திருச்சி - சென்னை (16854/16853)(சோழன் விரைவு வண்டி)
 • திருச்சி - திருவனந்தபுரம் (இன்டர்சிட்டி அதிவிரைவு வண்டி) (22627/22628)[3]
 • திரு - மயிலாடுதுறை விரைவு வண்டி (16234/16233)
 • திருச்சி - ஸ்ரீகங்காநகர் ஹம்சஃபர் அதிவிரைவு வண்டி

திருச்சியிலிருந்து 22க்கும் மேற்பட்ட பயணியர் தொடருந்துகள் மானாமதுரை, தஞ்சாவூர், லால்குடி, மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, நாகூர், விருத்தாசலம், திண்டுக்கல், கடலூர், இராமேஸ்வரம், காரைக்குடி, மன்னார்குடி, பாலக்காடு ஆகிய ஊர்களை இணைக்கின்றன.

சான்றுகள்[தொகு]