விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
விருதுநகர் சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே தெரு, விருதுநகர் விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°45′53″N 79°38′02″E / 10.7648°N 79.6338°E | ||||
ஏற்றம் | 287 மீட்டர்கள் (942 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 6 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | VPT | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
|
மதுரை - திருநெல்வேலி வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Virudhunagar Junction Railway Station) தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் நகரிலுள்ள ஒரு சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது தெற்கு இருப்புப் பாதை மண்டலத்திற்குட்பட்ட மதுரை இருப்புப் பாதைப் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.[1] இத்தொடருந்து நிலையக் குறியீடு VPT ஆகும்.
அமைவிடம்
[தொகு]விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையமானது நகரின் கிழக்குப் பகுதியில் சிட்கோ தொழிற்பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையம் நான்கு கிளைகளை இணைக்கும் இருப்புப் பாதைகளைக் கொண்டுள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையங்களாவன:
- கள்ளிக்குடி தொடருந்து நிலையம் (வடக்கில்)
- சங்கரலிங்கபுரம் தொடருந்து நிலையம் (மேற்கில்)
- துலுக்கப்பட்டி தொடருந்து நிலையம் (தெற்கில்)
- அருப்புக்கோட்டை தொடருந்து நிலையம் (கிழக்கில்)
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையமானது, விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ (29 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
இந்த இரயில் நிலையத்திலிருந்து விருதுநகர் பழைய பேருந்து நிலையமானது 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் ம்துரை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 7.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[5][6]
இருப்புப்பாதை வழித் தடங்கள்
[தொகு]- மதுரை சந்திப்பை நோக்கிச் செல்லும் ஒற்றை வழி அகலப் பாதை.
- தென்காசி சந்திப்பை நோக்கிச் செல்லும் ஒற்றை வழி அகலப் பாதை.
- மானாமதுரை சந்திப்பை நோக்கிச் செல்லும் ஒற்றை வழி அகலப் பாதை.
- மணியாச்சி சந்திப்பை நோக்கிச் செல்லும் இரட்டை வழி அகலப் பாதை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madurai Division System Map" (PDF). Southern Railway. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.thehindu.com/news/cities/Madurai/pm-lays-foundation-stone-for-redevelopment-of-virudhunagar-tenkasi-railway-stations/article67164813.ece
- ↑ https://timesofindia.indiatimes.com/city/madurai/modi-to-lay-foundation-stone-for-redevelopment-of-13-amrith-bharat-railway-stations-in-madurai-today/articleshow/107997384.cms