கன்னியாகுமரி தொடருந்து நிலையம்
கன்னியாகுமரி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
கன்னியாகுமரி இரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 7, கன்னியாகுமரி, தமிழ்நாடு, | ||||
ஆள்கூறுகள் | 8°5′16″N 77°32′48″E / 8.08778°N 77.54667°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | திருவனந்தபுரம் - நாகர்கோயில் - கன்னியாகுமரி இரயில்வே வழித்தடம் | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 6 | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையில் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | CAPE | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | உண்டு | ||||
|
கன்னியாகுமரி தொடருந்து நிலையம் (Kanyakumari railway station, நிலையக் குறியீடு:CAPE) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள தொடருந்து நிலையமாகும்.
நிர்வாகம்
[தொகு]இது தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1] கன்னியாகுமரி தொடருந்து நிலையம் ஆனது, கன்னியாகுமரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 1 கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் உள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, கன்னியாகுமரி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 49.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11]
சேவைகள்
[தொகு]பல விரைவு இரயில்கள் கன்னியாகுமரியை, இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் மிக நீண்ட தூர பயண இரயில்களான திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் விரைவுத் தொடருந்து 4,283 கிலோமீட்டர் (2,661 மைல்) மற்றும் ஹிம்ஸாகர் விரைவுத் தொடருந்து 3,789 கிலோமீட்டர் (2,354 மைல்) ஆகிய இரண்டு வண்டியும்,இங்கிருந்து புறப்படுகின்றன. இங்கிருந்து சென்னை, பெங்களூர் மற்றும் மும்பைக்கு தினசரி இரயில்களையும், இராமேஸ்வரம், புது தில்லி, ஹவுரா, ஜம்மு, திப்ருகார், திருவனந்தபுரம் மற்றும் பிற நகரங்களுக்கான நேரடி இரயில்களும் இயக்கப்படுகிறது.
படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கன்னியாகுமரி தொடருந்து நிலையம்".
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
- ↑ https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.youtube.com/watch?app=desktop&v=Rt1Y_5QLKjM
- ↑ https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/pm-modi-inaugurated-the-foundation-stone-ceremony-of-the-amrit-bharat-railway-station-scheme/tamil-nadu20230806164607780780649
- ↑ https://tamil.indianexpress.com/tamilnadu/kanyakumari-railway-station-is-modernized-soon-547882/