மன்னார்குடி தொடருந்து நிலையம்
மன்னார்குடி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
மன்னார்குடி தொடருந்து நிலையத்தில் நிற்கும் ஜோத்பூர் விரைவு இரயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மன்னை நகர், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°40′30″N 79°27′11″E / 10.6751°N 79.4531°E | ||||
ஏற்றம் | 17 மீட்டர் | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நாகப்பட்டினம் -திருச்சிராப்பள்ளி வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையில் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | MQ[1] | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
மன்னார்குடி தொடருந்து சந்திப்பு நிலையம் (Mannargudi railway station, நிலையக் குறியீடு:MQ) ஆனது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.
அமைவிடம்
[தொகு]மன்னார்குடியில் மன்னை நகரில் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் மன்னார்குடி பேருந்து பணிமனை உள்ளது. மன்னார்குடி தொடருந்து நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் உள்ள தொலைவு 86 கி.மீ ஆகும்.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன,மன்னார்குடி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 4.69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10]
இணைக்கும் தொடருந்து நிலையங்கள்
[தொகு]சென்னை எழும்பூர், திருப்பதி, ஜோத்பூர் சந்திப்பு, ஜெய்ப்பூர் சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, புதுக்கோட்டை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு போன்றவை ஆகும்.
முக்கிய தொடருந்துகள்
[தொகு]மன்னார்குடி தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் சில முக்கியமான தொடருந்துகளின் பட்டியல்:
தொடருந்து எண் | தொடருந்து பெயர் |
---|---|
16863/16864 | பகத் கி கோத்தி (ஜோத்பூர்)-மன்னார்குடி வாராந்திர விரைவு வண்டி |
16179 / 16180 | மன்னை விரைவுத் தொடருந்து |
17407 / 17408 | பாமணி விரைவுத் தொடருந்து |
16615/16616 | செம்மொழி விரைவுத் தொடருந்து |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mannargudi Railway Station". Mustseeindia. Archived from the original on 27 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
- ↑ https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/15-railway-stations-in-tiruchi-division-chosen-for-amrit-bharat-station-scheme/article66450874.ece/amp/
- ↑ https://news.railanalysis.com/mannargudi-railway-station-set-to-be-redeveloped-under-amrit-bharat-station-scheme/