உள்ளடக்கத்துக்குச் செல்

கோயம்புத்தூரில் உள்ள தொடருந்து நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயம்புத்தூர் முதன்மை
கோவை வடக்கு

கோயம்புத்தூர் அல்லது கோவை என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒரு முக்கிய மாநகரமாகும். இது சென்னைக்குப் அடுத்து மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் நகர்ப்புறம் ஆகும்.[1] இந்த நகரம் இந்தியாவின் பதினாறாவது பெரிய நகர்ப்புறம் ஆகும். இது கோயம்புத்தூர் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. இது கோயம்புத்தூர் மாவட்டத்தின் நிர்வாக தலைநகரமாகவும் உள்ளது. இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் அடுக்கு நகரங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் முக்கிய ஆடை, தொழில்துறை, வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், உற்பத்தி மையமாக இந்நகரம் உள்ளது.[2] பருத்தி உற்பத்தி மற்றும் ஆடை தொழில்கள் காரணமாக இது பெரும்பாலும் " தென்னிந்தியாவின் மன்செஸ்டர் " என்று அழைக்கப்படுகிறது.[3]

கோயம்புத்தூரில் தொடருந்து சேவை 1861 இல் தொடங்கியது. கேரளம் மற்றும் மேற்கு கடற்கரையை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் போத்தனூர் - மெட்ராஸ் பாதை கட்டப்பட்டது.[4] கோயம்புத்தூர்-ஷொறணூர் 5 அடி 6 அங்குலம் (1,676 மிமீ) அகலப் பாதை அமைந்துள்ளது. 1956 வரை, கோயம்புத்தூர் ரயில்வே கோட்டம் போத்தனூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது. 1956 ஆம் ஆண்டில், தலைமையகம் கேரளத்தின் ஒலவக்கோடுக்கு மாற்றப்பட்டு, ஒலவக்கோடு ரயில்வே கோட்டம் என்று பெயர் மாற்றபட்டது. 1980ல் ஒலவக்கோடு கோட்டம் பாலக்காடு ரயில்வே கோட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. இறுதியில், 2006 ஆம் ஆண்டு பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இந்திய இரயில்வேயின் தெற்கு ரயில்வே மண்டலத்தின் சேலம் கோட்டத்தின் கீழ் வருகிறது. இதன் முக்கிய தொடருந்து நிலையம் கோயம்புத்தூர் சந்திப்பு ஆகும். இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்துக்கு அடுத்தபடியாக தெற்கு ரயில்வே மண்டலத்தில் இரண்டாவது பெரிய வருமானம் ஈட்டும் நிலையமாகும். மேலும் இது இந்திய இரயில்வேயின் முதல் நூறு முன்பதிவு செய்யப்படும் நிலையங்களில் ஒன்றாகும்.[5][6] கோயம்புத்துரூர் வடக்கு சந்திப்பு, போத்தனூர் சந்திப்பு மற்றும் பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர் சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, சோமனூர், சூலூர், துடியலூர் ஆகிய இடங்களில் உள்ள சிறிய தொடருந்து நிலையங்கள் நகரத்திற்கு சேவை செய்யும் மற்ற முக்கிய தொடருந்து நிலையங்கள் ஆகும்.

தொடருந்து நிலையங்களின் பட்டியல்

[தொகு]
கோயம்புத்தூரில் உள்ள தொடருந்து நிலையங்களின் பட்டியல்
ஆங்கிலத்தில் தமிழில் நிலையக் குறியீடு
Coimbatore Junction கோயம்புத்தூர் சந்திப்பு CBE
Podanur Junction போத்தனூர் சந்திப்பு PTJ
Coimbatore North Junction கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு CBF
Pilamedu பீளமேடு PLMD
Singanallur சிங்காநல்லூர் SHI
Irugur Junction இருகூர் சந்திப்பு IGU
Periyanaickenpalayam பெரியநாயக்கன்பாளையம் PKM
Madukkarai மதுக்கரை MDKI
Somanur சோமனூர் SNO
Sulur Road சூலூர் சாலை SUU
Thudiyalur துடியலூர் TDE
Karamadai காரமடை KAY
Kinathukadavu கிணத்துக்கடவு CNV
Ettimadai எட்டிமடை ETMD
கோவையில் செயல்படாத தொடருந்து நிலையங்களின் பட்டியல்
ஆங்கிலத்தில் தமிழில் நிலை நிலையக் குறியீடு
Chettipalayam செட்டிபாளையம் செயலிழந்தது CIM
Urumandampalayam உருமாண்டம்பாளையம் மூடப்பட்டது
Veerapandi வீரபாண்டி மூடப்பட்டது
Pudupalayam புதுப்பாளையம் மூடப்பட்டது
Nallatipalayam நல்லட்டிபாளையம் மூடப்பட்டது
Koilpalayam கோயில்பாளையம் மூடப்பட்டது
Tamaraikulam தாமரைக்குளம் மூடப்பட்டது

மெட்ரோ ரயில்

[தொகு]

கோயம்புத்தூரில் மூன்று மெட்ரோ ரயில் பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. அவை நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இரண்டு வட்ட பாதைகள் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் இரட்டை நேரியல் கோடுகளாக இருக்கும். வடக்குப் பாதை காந்திபுரத்தில் இருந்து கணபதி, சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, ஆர். எஸ். புரம், நகரமண்டபம், கோயம்புத்தூர் சந்திப்பு வழியாக காந்திபுரத்தில் முடிவடைகிறது. இரண்டாவது சுற்றுப்பாதை போத்தனூர் சந்திப்பில் இருந்து திருச்சி சாலை, சுங்கம், ரெட்பீல்ட்ஸ், ரேஸ் கோர்ஸ், நரகர தொடருந்து நிலையம், உக்கடம் வழியாக போத்தனூரில் முடிகிறது. சின்னம்பாளையம், கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், கொடிசியா, பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி, லட்சுமி ஆலைகள், காந்திபுரம், கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு கவ்லி பிரவுன் சாலை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலிருந்தும் ஒரு நேரியல் பாதை முன்மொழியப்பட்டுள்ளது. அண்மையில் வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய இரண்டு புதிய பகுதிகள் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக நேரியல் கோட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.[7][8] கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான டிபிஆர் மற்றும் சாத்தியக்கூறு அறிக்கையை சிஎம்ஆர்எல் தயாரிக்கும் என்றும், ஜெர்மனியை தளமாகக் கொண்ட நிறுவனம் நிதியளிக்கும் என்றும் 2017 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

கோயம்புத்தூர் புறநகர் மின்சாரத் தொடர்வண்டி சேவை

[தொகு]

கோயம்புத்தூர் புறநகர் மின்சாரத் தொடர்வண்டி சேவை என்பது கோயம்புத்தூர் மாநகரத்திற்கு திட்டமிடப்பட்ட ஒரு வட்ட புறநகர் தொடருந்து பாதை ஆகும். இது கோயம்புத்தூர் சந்திப்பு, போத்தனூர், வெள்ளலூர், இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு ஆகிய பகுதிகள் வழியாகச் செல்ல உதவும் (வரைபடத்தைப் பார்க்கவும்). இது நகர சாலைகளின் நெரிசலைக் குறைக்க உதவும். சேலம் கோட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பழைய இரயில் பாதையைப் புனரமைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா என்றால் அதை பரிசீலிக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nādu (India): State, Major Cities, Towns & Agglomerations – Statistics & Maps on City Population". பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
  2. "Indian Government press release". Press Information Bureau, Government of India. 31 October 2011. பார்க்கப்பட்ட நாள் 31 January 2013.
  3. "Nicknames of places in India". Archived from the original on 3 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
  4. "IR History – Early days". 1832–1869. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
  5. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
  6. "Railways in Coimbatore". raac.co.in. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Corporation speeds up work to begin mono rail project". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Times News Network. 22 August 2012 இம் மூலத்தில் இருந்து 2013-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130618043815/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-22/coimbatore/33321368_1_monorail-project-kozhikode-monorail-monorail-network. 
  8. "A fresh look at Mass Public Transport System for city". The Hindu. 2012-09-04. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3856605.ece.