சென்னை பூங்கா தொடருந்து நிலையம்
சென்னை பூங்கா | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் இரயில் நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
![]() சென்னை பூங்கா தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 4, பெரியமேடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°4′49″N 80°16′22″E / 13.08028°N 80.27278°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் |
| ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | MPK | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
முந்தைய பெயர்கள் | தென்னக இரயில்வே | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 440,000/நாள் ஒன்றுக்கு (2012 ஆம் ஆண்டு நிலவரப்படி) | ||||
|
பூங்கா தொடருந்து நிலையம் அல்லது சென்னை பூங்கா தொடருந்து நிலையம் (Chennai Park railway station, நிலையக் குறியீடு:MPK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னையின் புறநகர்ப் பகுதியான பூங்கா நகர் அருகில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் வடக்கு பகுதியில் சென்னை மத்திய இரயில் நிலையமும் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]
இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1] சென்னை பூங்கா ரயில் நிலையம் வரும் முன்பு இந்த பகுதி வெளியூர் மக்கள் வந்து தங்க ஏதுவாக சென்னை கொடைவள்ளல் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் கட்டிய மிகப்பெரிய இலவச சத்திரம் இருந்தது.ரயில்வே துறை நிலம் பெற்று கொண்டதை அடுத்து தற்போது அது சிறிய அளவில் காணப்படுகிறது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சென்னை பூங்கா தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 10.68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8][9][10]
போக்குவரத்து
[தொகு]2012 நிலவரப்படி, இந்த நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 440,000 பயணிகளை கையாளுகிறது.
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electric Traction - I". IRFCA.org. Retrieved 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
- ↑ https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=14090&id=0,4,268
- ↑ https://www.newindianexpress.com/cities/chennai/2024/Apr/27/50-per-cent-redevelopment-work-at-chennai-park-station-complete-project-expedited
வெளி இணைப்புகள்
[தொகு]சென்னை பூங்கா | |||
---|---|---|---|
வடகிழக்கு/வடக்கில் அடுத்த நிலையம்: சென்னைக் கோட்டை |
தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் | தெற்கு/தென்மேற்கில் அடுத்த நிலையம்: சென்னை எழும்பூர் | |
நிறுத்த எண்: 3 | கிமீ தொடக்கத்திலிருந்து: 3.07 |