உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்களத்தூர் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°54′15″N 80°5′39″E / 12.90417°N 80.09417°E / 12.90417; 80.09417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருங்களத்தூர்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை - 45, பெருங்களத்தூர், சென்னை, தமிழ்நாடு - 600 063, இந்தியா
ஆள்கூறுகள்12°54′15″N 80°5′39″E / 12.90417°N 80.09417°E / 12.90417; 80.09417
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
நடைமேடை2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPRGL
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்9 சனவரி 1965[1]
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
பெருங்களத்தூர் is located in சென்னை
பெருங்களத்தூர்
பெருங்களத்தூர்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
பெருங்களத்தூர் is located in தமிழ் நாடு
பெருங்களத்தூர்
பெருங்களத்தூர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பெருங்களத்தூர் is located in இந்தியா
பெருங்களத்தூர்
பெருங்களத்தூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

பெருங்களத்தூர் தொடருந்து நிலையம் (Perungalathur railway station, நிலையக் குறியீடு:PRGL) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இது பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்கரணை பகுதியில் உள்ள மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இது சென்னைக் கடற்கரையிலிருந்து சுமார் 32 கி.மீ. (20 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது கடல் மட்டத்திலிருந்து 26 மீ (85 அடி) உயரத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]

தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]

போக்குவரத்து

[தொகு]

2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 84 இரயில்கள் இந்நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன, மேலும் சுமார் 10,000 பயணிகள் இந்த நிலையத்தை தினமும் பயன்படுத்துகின்றனர்.[2]

அமைவிடம்

[தொகு]

இது பெருங்களத்தூரில், தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. பொதுவாக பெருங்களத்தூரில் தான் சென்னைக் கோயம்பேடு செல்லும் சாலையும், தாம்பரம், மீனம்பாக்கம், கிண்டி போன்ற சென்னை நகரப் பகுதிக்கு செல்லும் சாலையும் பிரிகிறது. பெரும்பாலான பேருந்துகள் கோயம்பேடு செல்வதால், சென்னை நகரப் பகுதிக்கு செல்வோர் பெருங்களத்தூரில் இறங்கி, புறநகர் இரயிலில் செல்வதால், இந்நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

விபத்து

[தொகு]

2012 நிலவரப்படி, இந்நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக குறைந்தது ஐந்து பேர் தொடருந்து விபத்தால் இறக்கின்றனர்.[2]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. 2.0 2.1 "Perungalathur railway station in makeover mode". The Times of India (Chennai: The Times Group). 2 January 2012 இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116124335/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-02/chennai/30581011_1_railway-station-suburban-trains-southern-railway. பார்த்த நாள்: 19 Jan 2013. 

வெளி இணைப்புகள்

[தொகு]