நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம்
நுங்கம்பாக்கம் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருவெங்கடபுரம், சூலைமேடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°03′55″N 80°13′58″E / 13.065363°N 80.232742°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | NBK | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1900களின் முற்பகுதி | ||||
மின்சாரமயம் | 1931 | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம் (Nungambakkam railway station, நிலையக் குறியீடு:NBK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், சூளைமேடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 11 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இரயில் நிலையத்தின் தென்பகுதியில், சென்னை இலயோலாக் கல்லூரி இருப்பதால், எப்போதும் பரபரப்பாகவே இந்த நிலையம் காணப்படுகிறது.
வரலாறு
[தொகு]1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நடைபெற்ற போது இந்த தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.[1]
பாதுகாப்பு சிக்கல்கள்
[தொகு]சென்னை நகரத்தின் பரபரப்பான தொடருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்த நிலையத்தில் பாதுகாப்பு காரணிகள் ஏதேனும் இல்லை. இதில் முக்கியமாக சிசிடிவி கேமரா இல்லை. 24 சூன் 2016 ஆம் ஆண்டு 24 வயதான கணினி பொறியியலாளர் சுவாடி என்பவர் காலை 6 மணி அளவில் தொடருந்திற்காக காத்துக் கொண்டிருந்த வேளையில், இளவயது கொலையாளி ஒருவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையானது ஊடகத்தால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் விளைவாக பெருமளவில் மக்கள் கூடும் ஒரு தொடருந்து நிலையத்தில் கண்காணிப்புக் காமிராக்கள் அமைக்கப்படாதிருந்தது குறித்து குமுகாயத்தின் பல்வேறு அமைப்புகள் தமது கண்டன விமர்சனங்களை தெரிவித்தன.[2]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Chennai's Nungambakkam railway station does not have CCTV cameras". தி இந்து. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]நுங்கம்பாக்கம் | |||
---|---|---|---|
வடகிழக்கு/வடக்கில் அடுத்த நிலையம்: சேத்துப்பட்டு (சென்னை) |
தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் | தெற்கு/தென்மேற்கில் அடுத்த நிலையம்: கோடம்பாக்கம் | |
நிறுத்த எண்: 6 | கிமீ தொடக்கத்திலிருந்து: 8.15 |