பெருங்களத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருங்களத்தூர்
—  பேரூராட்சி  —
வரைபடம்:பெருங்களத்தூர், இந்தியா
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் தாம்பரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

37,342 (2011)

5,078/km2 (13,152/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.354 சதுர கிலோமீட்டர்கள் (2.839 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/perungalathur

பெருங்களத்தூர் (Perungalathur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்[தொகு]

3 நவம்பர் 2021 அன்று இந்த பேரூராட்சியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

காஞ்சிபுரம் - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்த பெருங்களத்தூர் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ.; காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ.; பல்லாவரத்திலிருந்து 12 கி.மீ.; தொலைவிலும் உள்ளது. பெருங்களத்தூரில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

7.354 சதுர கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 461 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9,584 வீடுகளும், 37,342 மக்கள்தொகையும், கொண்டது.

மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.36 % மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பெருங்களத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Perungalathur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்களத்தூர்&oldid=3538297" இலிருந்து மீள்விக்கப்பட்டது