சாளுவன்குப்பம் தொல்லியல் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாளுவன்குப்பம் புலிக்குடைவரை
சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்

சாளுவன்குப்பம் தொல்லியல் களம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்த பல்லவர் கால தொல்லியல் களம் ஆகும். இது சென்னைக்கு தெற்கே 56 கிலோ மீட்டர் தொலைவிலும்; மகாபலிபுரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டுக்கு கிழக்கே 36 கிலோ மிட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சாளுவன்குப்பம் தொல்லியள் களம் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வுகள்[தொகு]

2004-ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலைகளின் சீற்றத்தினால் சாளுவனகுப்பத்தில் வெளிப்பட்ட கல்வெட்டுகளில் காணப்பட்ட குறிப்புகளைக் கொண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் கண்காணிப்பாளர்கள் தி. சத்தியமூர்த்தி மற்றும் சத்தியபாமா பரணிநாத் ஆகியோர் இணைந்து சாளுவன்குபத்தில் 2005-06 மற்றும் 2005-2007-ஆம் ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டனர். [1] அகழாய்வின் போது சாளுவன்குப்பத்தில் பல்லவர் கால புலிக் குடைவரை, முருகன் கோயில்[2] மற்றும் அதிரனசண்ட பல்லவேஸ்வரம்

பின்னர் அதே இடத்தில் மேலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வால் சங்க கால செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது. மாமல்லபுரம் சங்ககாலத் துறைமுக நகரமாகக் கூறப்படும் நீர்ப்பெயற்று என்று சமீபகாலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். ஆனால் அதற்கான சான்றுகள் ஏதும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. 22 செப்டம்பர், 2005ல் [3] இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் கடல் அகழாய்வுப் பிரிவினர் ஆழிப்பேரலையால் வெளிவந்த சில கட்டிடச்சிதைவுகளை முழுவதுமாக வெளிப்படுத்தினர். இவை மாமல்லை கடற்கரை கோவிலுக்கு 270 அடி தொலைவில் இருக்கிறது. இதன் அமைப்பு மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்போல் உள்ளது.

முருகன் கோவிலின் முன்தோற்றம்

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் எழுந்த ஆழிப் பேரலைகள் குறைந்த பின்னர் தொல்லியல் ஆய்வாளர்கள் சுனாமி அலைகளால் வெளிப்பட்ட பாறைகளில் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தனர்.[2] யுனஸ்கோவால் மகாபலிபுரத்தின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்ட சாளுவன்குப்பத்தில் இவை கண்டெடுக்கப்பட்டன.[4][5] ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன், சோழ மன்னர்கள் முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுகள் திருவீழ்ச்சில் (தற்போதைய சாளுவன்குப்பம்) என்ற இடத்தில் அமைந்த முருகன் கோவிலைப் பற்றிக் குறிப்பிட்டன.[2] இந்திய தொல்லியல் ஆய்வகத்தைச் சேர்ந்த கல்வெட்டியலாளர் எஸ். ராஜவேலு, அருகில் காணப்பட்ட மேட்டினை அம்முருகன் கோவிலாக அடையாளம் கண்டார்.[2] 2005 இல் தொல்லியல் ஆய்வாளர்கள் அம்மேட்டின் அடியிலிருந்து 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ காலத்திய கருங்கல் அமைப்பான கோவிலை அகழ்ந்தெடுத்தனர்.[2] இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் உதவி தொல்லியல் ஆய்வாளர் தி. சத்தியமூர்த்தி, தமிழ் நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப்பழமையான முருகன் கோவிலாக இதைக் கருதுகிறார்.

செங்கல் அடித்தளத்தின் மீது அமைந்துள்ள கல்லால் ஆன வேல்.

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோயில் அகழப்படும் முன் இதைச்சுற்றி கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளான கன்னரத்தேவர் 26ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இரண்டு, இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் 12ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, கம்பவர்ம பல்லவனின் 17ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இரண்டு, முதலாம் இராசராசச் சோழன் கல்வெட்டு மற்றும் சில பிற்காலப்பாண்டியர் கல்வெட்டு ஆகியவற்றில் திருவிழச்சு என்னும் ஊரிலுள்ள முருகன் கோவிலுக்குச் சிலர் தானம் அளித்ததாக உள்ளது. அதைக் கொண்டே அக்கோவிலை தேட இப்பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்டு இக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இம்முருகன் கோவிலைச் சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுப் பாறைகள் காணப்படுகின்றன. இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட மான்யங்களைப் பற்றிக்கூறும் மூன்று கருங்கல் தூண்களின் கண்டுபிடிப்பே கோவிலைக் கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது.[2] ஒரு தூண், 858 இல் கீரர்பிரியன் என்பவரால் கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட 10 பொற்கழஞ்சுகளைக்[6] குறிப்பிடுகிறது.[2] மற்றொரு தூண், 813 இல் கோவிலின் தீபத்தின் பராமரிப்புச் செலவிற்காக வசந்தனார் என்ற பிராமணப் பெண்ணால் அளிக்கப்பட்ட 16 கழஞ்சுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.[2] மூன்றாவது தூண் முதலாம் ராஜராஜ சோழனால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது.[6]இம்மூன்று தூண்களைத் தவிர மேலும் ஐந்து தூண்கள் கீழ்க்காணும் அரசர்களால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன.[6]

கட்டடக் கலை[தொகு]

செங்கல் பிரகாரத்தின் ஒரு பகுதி அல்லது சாளுவன்குப்பம் முருகன் கோவில் சுற்றுச் சுவர்.
சாளுவன்குப்பம் முருகன் கோவில் கருவறை. மேற்புறத்தில் உள்ள மெல்லிய செங்கல் பலகைகள் பல்லவர்களால் செய்விக்கப்பட்டவை.

இங்குள்ள [சாளுவன்குப்பம் முருகன் கோவில்]] வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் கருவறை 2 மீட்டர் நீளமும் 2.2 மீட்டர் அகலமும் கொண்டு 27 செங்கல் அடுக்குகளாக அமைந்துள்ளது. கோவிலின் நுழைவாயிலின் முன் கல்லால் ஆன வேல் ஒன்று உள்ளது. அகழ்வாய்வில் முதலாம் நூற்றாண்டு காலத்துக்குரிய நடன வகையாக சிலப்பதிகாரம் கூறும் குரவைக் கூத்தினைச் சித்தரிக்கும் சான்றும் கிடைத்துள்ளது. சதுரக் கருவறை மிகவும் சிறியதாக உள்ளமையால் அதனுள் எந்தவொரு கடவுளுருவமும் இருந்திருக்க முடியாது என்பது தி. சத்தியமூர்த்தியின் கருத்தாகும். வண்டல் மண் நிரம்பிய ஒரு மேடான அடிப்பரப்பின் மீது செங்கற்களை அடுக்கி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. செம்புரைக் கற்களால் (laterite) ஆன நான்கு அடுக்குகளால் பிரிக்கப்பட்ட நான்கு செங்கல் அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொல்பொருட்கள்[தொகு]

சாளுவன்குப்பம் முருகன் கோவில் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டச் சில்லுகள் மற்றும் கருங்கல் பலகைகள். சில மட்பாண்டச் சில்லுகள்

இப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய தொல்பொருட்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Excavations carried out ASI Chennai Circle from 1950 to 2011
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 T. S. Subramanian (July 27, 2005). "Remains of Subrahmanya temple found near Mahabalipuram". தி இந்து இம் மூலத்தில் இருந்து நவம்பர் 3, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103235414/http://www.hindu.com/2005/07/12/stories/2005071214881300.htm.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "thehindu_20050727" defined multiple times with different content
  3. http://www.shaivam.org/news_2005.htm
  4. Paddy Maguire (October 27, 2005). "Tsunami reveals ancient temple sites". British Broadcasting Corporation. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4312024.stm. 
  5. Sathyabhama Badhreenath, Hema Achyuthan, Smriti Haricharan, K. P. Mohandas (April 10, 2011). "Saluvankuppam coastal temple - excavation and application of soil micromorphology". Current Science 100 (7). http://www.ias.ac.in/currsci/10apr2011/1071.pdf. 
  6. 6.0 6.1 6.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; thehindu_20070317 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]