சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்

தமிழ்நாட்டிலுள்ள பல்லவர் காலக் குடைவரைகளுள் ஒன்றான சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் சாலைக்கு அண்மையில், மாமல்லபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடற்கரைக்கு அண்மையில் காணப்படும் பாறையொன்றின் கிழக்குப் பக்கத்தில் குடைந்து, உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கடலைப் பார்த்தபடி உள்ளது.

காலம்[தொகு]

இங்கே காணப்படும் கிரந்தம் மற்றும் நாகரி எழுத்துக்களிலான கல்வெட்டுக்கள் இக்கோயிலை அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம் எனக் குறிப்பிடுகின்றன. அதிரணசண்டன் என்னும் விருதுப் பெயர் கொண்ட இராஜசிம்ம பல்லவன் காலத்திலேயே இக் குடைவரை அமைக்கப்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர் கருத்து.

அமைப்பு[தொகு]

நீள்சதுரத் தள அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் பின்புறச் சுவரில் கருவறை குடையப்பட்டுள்ளது. முகப்பில் இரண்டு பக்கச் சுவர்களுடனும் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும், நடுவில் இரண்டு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]