தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 31. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. மைலாப்பூர், சைதாப்பேட்டை, திருப்போரூர், சிறீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1][தொகு]

  • தாம்பரம் வட்டம்

கடப்பேரி, திருவஞ்சேரி, முடிச்சூர், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம் மற்றும் மூலச்சேரி கிராமங்கள்.

தாம்பரம் (நகராட்சி), சிட்லப்பாக்கம் (பேரூராட்சி), செம்பாக்கம் (பேரூராட்சி), மாடம்பாக்கம் (பேரூராட்சி), பெருங்களத்தூர் (பேரூராட்சி) மற்றும் பீர்க்கன்கரணை (பேரூராட்சி)[2]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1977 முனுஆதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [3]
1980 பம்மல் நல்லதம்பி திராவிட முன்னேற்றக் கழகம் [4]
1984 ராஜ மாணிக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [5]
1989 வைத்தியலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1991 கிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு [7]
1996 வைத்தியலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [8]
2001 வைத்தியலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [9]
2006 எஸ்.ஆர். ராஜா திராவிட முன்னேற்றக் கழகம் [10]
2011 டி. கே. எம். சின்னையா அதிமுக

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]