பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி் (Perambur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 12. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பெரம்பூர் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரத்து 208 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 1,55,049 பேரும், பெண்கள் 1,60,088 பேரும், 3-ம் பாலினத்தவர் 71 பேரும் உள்ளனர். இத்தொகுதியில் மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி, பார்வதி நகர் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
இத்தொகுதியில் பட்டியல் சமூகத்தினர் மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். மேலும் நாடார், தேவர், நாயுடு, உடையார் மற்றும் பிறரும் குறிப்பிடும் அளவில் உள்ளனர்.
இத்தொகுதியில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்றும் 3 தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. சிறுதொழில்கள் அடங்கிய சிட்கோவும் இடம்பெற்றுள்ளன.[2]