பரிதி இளம்வழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரிதி இளம்ழுதி
தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–2011
தொகுதி எழும்பூர்
பதவியில்
1984–1989
தொகுதி பெரம்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 11, 1959 (1959-11-11) (அகவை 58)
சென்னை
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) எஸ் எம் லலிதா
பிள்ளைகள் இந்திரசித் இளம்வழுதி
படித்த கல்வி நிறுவனங்கள் வெஸ்லி உயர்நிலைப்பள்ளி, இராயப்பேட்டை, சென்னை-600014
பணி அரசியல்வாதி

பரிதி இளம்வழுதி  (பிறப்பு; சென்னை,  11 நவம்பர் 1959) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் தனது பள்ளி இறுதியை வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இவர்  தமிழக சட்டமன்றத்துக்கு  மொத்தம் ஆறு முறை  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 11வது சட்டமன்றத்தின் (1996-2001 ) காலகட்டத்தில் பேரவைத் துணைத் தலைவராக இருந்தார். மேலும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 2006-2011 காலகட்டத்தில் இருந்தார். இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக 28 ஆண்டுகள் (1984-2011) தி.மு.க சார்பில் இருந்தார். இவர் தனது 25வது வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு. க.வின் சத்தியவாணி முத்துவை எதிர்த்துப் போட்டியிட்டு பெரம்பூரில் வெற்றிபெற்றார். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்ட விதத்தைக் கண்டு தி.மு.க தலைவர் மு. கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார். இவர் தி.மு.க வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவியில் இருந்தார். இந்நிலையில் தி.மு.கவில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.கவில் 28/06/13 அன்று இணைந்தார். அடுத்த நாளே அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதி_இளம்வழுதி&oldid=2330024" இருந்து மீள்விக்கப்பட்டது