தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள்

← 2016 18 ஏப்ரல் 2019 (18 தொகுதிகள்) , 19 மே 2019 (4 தொகுதிகள்) ,21 அக்டோபர் 2019 (2 தொகுதிகள்) 2021 →

தமிழ்நாடு சட்டப் பேரவை 234 தொகுதிகளில் 24 தொகுதிகள் காலியாக உள்ளது
118 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
வாக்களித்தோர்75%
  First party Second party
  Mkspicture (cropped).jpg
தலைவர் மு. க. ஸ்டாலின் எடப்பாடி க. பழனிசாமி
கட்சி திமுக அஇஅதிமுக
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவரின் தொகுதி கொளத்தூர் எடப்பாடி
முந்தைய தேர்தல் 3 21
வென்ற தொகுதிகள் 13 11
மாற்றம் Green Arrow Up Darker.svg10 Red Arrow Down.svg10
விழுக்காடு 42.85 39.86

2019 Tamil Nadu Legislative Assembly by-elections.svg

முந்தைய முதலமைச்சர்

எடப்பாடி க. பழனிசாமி
அஇஅதிமுக

முதலமைச்சர்

எடப்பாடி க. பழனிசாமி
அஇஅதிமுக

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் 2019 மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் 2021 ஏப்ரல் 18 அன்று நடந்தது. நடைபெறும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கு நடைபெறுவதால் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பருங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை என அறிவித்தது.[1] அந்த வழக்குகளை திரும்ப பெறுவதாகவும் எனவே மீதமுள்ள அந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தவேண்டும் என்று சம்பந்தபட்டவர்கள் கோரியதால், அத்தொகுதிகுளுக்கு 2019 மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் பின்னணி[தொகு]

2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுனர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி. டி. வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.கவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல், தானாக முன்வந்து அ.தி.மு.கவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆகத்து 24ஆம் தேதியன்று கோரினார்.

இவர்களில் எஸ். டி. கே. ஜக்கையன் பிறகு ஆளும் பிரிவுக்கு ஆதரவாளராகி விட்டார். செப்டம்பர் 17ஆம் தேதியன்று சபாநாயகரைச் சந்தித்த அவர், டி. டி. வி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி ஆளுனரை சந்திக்க அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதற்குப் பிறகு, மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 1986ஆம் ஆண்டு விதிகளின்படியும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். [2]

காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகள்[தொகு]

 1. ஆண்டிபட்டி
 2. அரூர்
 3. மானாமதுரை
 4. பெரியகுளம்
 5. குடியாத்தம்
 6. பாப்பிரெட்டி பட்டி
 7. அரவக்குறிச்சி
 8. பரமக்குடி
 9. பெரம்பூர்
 10. சோளிங்கர்
 11. திருப்போரூர்
 12. பூந்தமல்லி
 13. தஞ்சாவூர்
 14. நிலக்கோட்டை
 15. ஆம்பூர்
 16. சாத்தூர்
 17. ஒட்டப்பிடாரம்
 18. விளாத்திகுளம்

திருவாரூரில் கருணாநிதி இறந்ததாலும், திருப்பரங்குன்றத்தில் போஸ் இறந்ததாலும், ஒசூரில் அமைச்சர் பாலகிருஷ்ணன் மேல் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தாக குற்றம் நிரூபணம் ஆனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும் 18 தொகுதிகளோடு இந்த 3 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.

ஏப்பிரல் 18 தேர்தல்[தொகு]

மக்களவையின் 2ஆம் கட்ட தேர்தலுடன் சேர்த்து கீழ்கண்ட 18 தொகுதிகளுக்கும் ஏப்பிரல் 18 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. [3]

ஆண்டிபட்டி, அரூர், மானாமதுரை, பெரியகுளம், குடியாத்தம், பாப்பிரெட்டி பட்டி, பரமக்குடி, பெரம்பூர், சோளிங்கர், திருப்போரூர், பூந்தமல்லி, தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், விளாத்திகுளம், திருவாரூர், ஓசூர் ஆகியன இத்தொகுதிகள்.

மே 19 தேர்தல்[தொகு]

சூலூர் அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து மார்ச் 31, 2019 அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கும் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மக்களவையின் ஏழாம் கட்டத்துடன் சேர்த்து மே 19 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. [4]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

நிலைகள் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருந்த வேட்பாளர்கள்

தேர்தல் முடிவுகள்[தொகு]

22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 23 மே 2019 நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 9 தொகுதிகளிலும்; திமுக 13 தொகுதிகளிலும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. [5]

திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
திமுக 13 அதிமுக 9 அமமுக 0
நாம் தமிழர் கட்சி 0
மக்கள் நீதி மய்யம் 0
மொத்தம் (2019) 13 மொத்தம் (2019) 9 மொத்தம் (2019) 0
மொத்தம் (2016) 0 மொத்தம் (2016) 22 மொத்தம் (2016) 0

தொகுதியும் அதில் கட்சிகள் பெற்ற வாக்குகளும்.

தொகுதி அதிமுக திமுக மநீம நாதக அமமுக
சூலூர் 100,782 90,669 6,644 4,335 16,530
அரவக்குறிச்சி 59,843 97,800 1,361 2,227 7,195
ஒட்டப்பிடாரம் 53,584 73,241 1,734 8,666 29,228
திருப்பரங்குன்றம் 83,038 85,434 12,610 5,467 31,199
திருவாரூர் 53,045 117,616 4,251 8,144 19,133
பூந்தமல்லி 76,809 136,905 11,772 10,871 14,804
பெரம்பூர் 38,371 106,394 20,508 8,611 6,281
ஆண்டிப்பட்டி 74,756 87,079 போஇ 5,180 28,313
விளாத்திகுளம் 70,139 41,585 1,399 4,628 9,695
பாப்பிரெட்டிப்பட்டி 103,981 85,488 2,374 3,783 15,283
ஆம்பூர் 58,688 96,455 1,853 3,127 8,856
குடியாத்தம் 78,296 106,137 3,287 4,670 8,186
சோழிங்கர் 103,545 87,489 2,466 5,188 12,868
திருபோரூர் 82,235 103,248 6,039 9,910 11,936
நிலக்கோட்டை 90,982 70,307 3,139 4,934 9,401
ஒசூர் 91,814 115,027 8,032 6,740 1,432
அரூர் 88,632 79,238 போஇ 3,902 20,282
பரமக்குடி 82,438 68,406 5,421 6,710 9,672
சாத்தூர் 76,820 75,719 3,899 5,004 12,428
பெரியகுளம் 68,073 88,393 5,727 5,825 26,338
தஞ்சாவூர் 54,992 88,972 9,345 11,182 20,006
மானாமதுரை 85,288 77,034 போஇ 9,315 20,395
 • விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக அதிருப்தி வேட்பாளர் மார்கண்டேயன் 27,456 வாக்குகள் பெற்றார்.
 • போஇ = போட்டியிடவில்லை

மேற்கோள்கள்[தொகு]

 1. "அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்". தினத்தந்தி. பார்த்த நாள் மார்ச் 29, 2019.
 2. "18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு". பி்பிசி தமிழ். பார்த்த நாள் ஏப்ரல் 12, 2019.
 3. "21 அல்ல... 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்பு". தமிழ் இந்து திசை. பார்த்த நாள் ஏப்ரல் 12, 2019.
 4. "அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் மே 19-ந் தேதி இடைத்தேர்தல்". தினந்தந்தி. பார்த்த நாள் ஏப்ரல் 12, 2019.
 5. 2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்