தருமபுரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக்கட்டுரை தருமபுரி மாவட்டத்தைப் பற்றியது. தருமபுரி நகரைப் பற்றி அறிய, தருமபுரி பக்கத்தைக் காணவும்.


தருமபுரி மாவட்டம்
India Tamil Nadu districts Dharmapuri.svg
தருமபுரி மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் தருமபுரி
மிகப்பெரிய நகரம் தருமபுரி
ஆட்சியர்
திருமதி S.மலர்விழி இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு.அச்ரா கார்க் இ.கா.ப.
ஆக்கப்பட்ட நாள் 02.10.1965
பரப்பளவு 4497.77 கி.மீ² (12வது)
மக்கள் தொகை
(2011
வருடம்
அடர்த்தி
1,506,843 (வது)
/கி.மீ²
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 8
நகராட்சிகள் ஒன்று
பேரூராட்சிகள் 10
ஊராட்சிகள் 251
வருவாய் கோட்டங்கள் 2
https://dharmapuri.nic.in

தருமபுரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். தருமபுரி நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

வரலாறு[தொகு]

1965-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

சங்ககால தகடூரை (தற்போதைய தருமபுரி) ஆண்டவர்களுள் மிகவும் அறியப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து,சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.ய்ய

புவியமைப்பு[தொகு]

வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கருநாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

காலநிலை[தொகு]

பருவநிலை பொதுவாக வெப்பமயமானதாகும். ஆண்டிற்கு சராசரியாக 89.556 மி.மீ. மழை பொழிகின்றது.

கல்வி[தொகு]

கல்வியில் முன்னேறும் மாவட்டமாக தருமபுரி மாவட்டம் கூறப்படுகின்றது. இதனை பயன்படுத்தி, அரசுக்குத் தெரியாமல் அங்குள்ள மக்களுக்கு சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சோதனை அடிப்படையான மருந்துகளைக் கொடுத்து ஆய்வு நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 15,06,843 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தருமபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[3] விட குறைவானது. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மாவட்ட வருவாய் நிருவாகம்[தொகு]

தருமபுரி மாவட்டதில் தர்மபுரி மற்றும் அரூர் என இரண்டு வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், 23 உள்வட்டங்கள், 470 வருவாய் கிராமங்கள் கொண்டது.[4]

வட்டங்கள்[தொகு]

 1. தருமபுரி
 2. அரூர்
 3. பாலக்கோடு
 4. பாப்பிரெட்டிப்பட்டி
 5. பென்னாகரம்
 6. காரிமங்கலம்
 7. நல்லம்பள்ளி

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள்[தொகு]

இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும்[5], 8 ஊராட்சி ஒன்றியகளும்[6], 251 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[7]

நகராட்சி[தொகு]

 1. தருமபுரி நகராட்சி

பேரூராட்சிகள்[தொகு]

 1. அரூர்
 2. கடத்தூர்
 3. காரிமங்கலம்
 4. மாரண்டஅள்ளி
 5. பாலக்கோடு
 6. பாப்பாரப்பட்டி
 7. பாப்பிரெட்டிப்பட்டி
 8. பென்னாகரம்
 9. பி. மல்லாபுரம்
 10. கம்பைநல்லூர்

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

 1. தருமபுரி
 2. அரூர்
 3. காரிமங்கலம்
 4. மொரப்பூர்
 5. பாலக்கோடு
 6. நல்லம்பள்ளி
 7. பாப்பிரெட்டிப்பட்டி
 8. பென்னாகரம்

அரசியல்[தொகு]

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மக்களவைத் தொகுதியும், பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி), பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி), தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி), பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி), அரூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி) என 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[8]

ஒகேனக்கல் காவிரி அருவி

பொருளாதாரம்[தொகு]

விவசாயம் மாவட்டத்தின் முக்கியமான தொழிலாக விளங்குகின்றது. சுமார் 70 சதவிகித மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டம் மாநிலத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளுள் ஒன்றாகும்.

வாணியாறு அணை

சுற்றுலா[தொகு]

தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ந்து வரும் தொழிலாகும். தமிழ்நாட்டின் தலையாய நதியான காவிரி, ஒகேனக்கல் அருவியின் வழியாகவே மாநிலத்தை வந்தடைகிறது. இங்கு பரிசல் பயணமும் எண்ணைக்குளியலும் பிரபலம்.

தீர்த்தமலை மலைக்கோவில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு அணை மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. தினமணி; 02.12.2014; பக்கம் 6; (கட்டுரை:ஓர் உண்மை தெரிஞ்சாகணும்...)
 2. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு,2011 - தர்மபுரி மாவட்டம்". பார்த்த நாள் 18 ஆகத்து 2014.
 3. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்த்த நாள் 13 ஆகத்து 2014.
 4. தர்மபுரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
 5. தர்மபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
 6. தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
 7. தர்மபுரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்
 8. தர்மபுரி மாவட்ட மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரி_மாவட்டம்&oldid=2809909" இருந்து மீள்விக்கப்பட்டது