பட்டுப்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பட்டுப்பூச்சி[தொகு]

    பட்டுப்ட்டுப்பூச்சியின் வழ்க்கை சுழற்சியானது 6-8 வாரங்களில் முடிவடைந்துவிடும். இப்பூச்சியை அந்துப்பூச்சி என்றும் அழைப்பார்கள்.

உடல் அமைப்பு[தொகு]

பட்டுப்பூச்சி வெளிறிய நிறத்தில், சுமார் 2.5. செ.மீ நீளத்திலும் ,மிகவும் சோர்வாகவும் காணப்படும். அவற்றின் உடல்பாகம் நல்ல தடிமனாகவும், இறக்கைகள் பலவீனமாகவும் இருப்பதால் இவற்றால் பறக்கமுடிவதில்லை.

வளர்ச்சி நிலைகள்[தொகு]

ஒரு பெண் பட்டுப்பூச்சி 300-400 வரை பழுப்பு கலந்த வெண்மை நிற, கோள வடிவிலான முட்டைகளை குவியலாக இடும். அதன் பிறகு இப்பூச்சிகள் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும்.[1] முட்டைகளில் இருந்து 8-12 நாட்களில் சுமார் 3 மி.மீ. நீளமுள்ள, கருமை நிறம் கொண்ட இளம் புழுக்கள் வெளிவரும். அவை வளர்ச்சியடையும் போது 4 முறை தோல் உரிக்கும்.முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் சுமார் 5 செ.மீ. நீளத்திலும், உருளை வடிவத்திலும், மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும் காணப்படும். புழுப்பருவம் 30-40 நாட்கள் வரை நீடிக்கும்.[2] முழு வளர்ச்சியடைந்த புழு தொடர்ச்சியான ஒரே பட்டு நூல் இழையினால் நீள்வட்ட வடிவில் கூடு கட்டி அதனுள் கூட்டுப்புழுவாக மாறும். கூடு கட்டி முடிக்க 1 அல்லது 2 நாட்கள் ஆகும். குக்கூன் என்று அழைக்கப்படும் கூடு வெண்மை நிறத்தில் இருக்கும். கூட்டுப்புழுவில் இருந்து 10-12 நாட்களில் பட்டுப்பூச்சி வெளிவரும். பட்டுப்பூச்சியின் வாழ்க்கை 6-8 வாரங்களில் முடிவடைந்து விடும்.

  1. http://www.senature.com/research/publications/cocoon-silk-a-natural-architecture
  2. http://www.buzzle.com/articles/silkworm-life-cycle.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுப்பூச்சி&oldid=2342157" இருந்து மீள்விக்கப்பட்டது