சூரியகாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Sunflower
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Asterales
குடும்பம்: Asteraceae
துணைக்குடும்பம்: Helianthoideae
சிற்றினம்: Heliantheae
பேரினம்: Helianthus
இருசொற் பெயரீடு
Helianthus annuus
L.
சூரியகாந்தி விதைகள்
முழுமையான விதை (வலது) மற்றும் உமி நீக்கப்பட்ட பருப்பு (இடது)

சூரியகாந்திகள் (Helianthus annuus ) என்பவை அமெரிக்க நாடுகளில் உருவான ஆண்டுத் தாவரங்கள் ஆகும். இவை மிகப்பெரிய மஞ்சரியை (பூங்கொத்து) உடையவை.

விவரிப்பு[தொகு]

பூங்கொத்தானது வெளிப்புறத்தைச் சுற்றி 34 மற்றும் 55 சுருளிகளில் சிறுபூக்களைக் காண்பிக்கிறது.

இதில் பூ என அழைக்கப்படுவது உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான சிறுபூக்கள் (சிறிய பூக்கள்) ஒன்றாக்கப்பட்ட கொத்தாகும் (முறையாகக் கூறுவதாயின் கூட்டுப் பூ ). வெளிப்புற சிறுபூக்கள் மலட்டுத்தன்மையான கீற்றுச் சிறுபூக்கள் ஆகும், அவை மஞ்சள், அரக்கு வண்ணம், செம்மஞ்சள் அல்லது பிற வண்ணங்களில் இருக்கலாம். வட்டவடிவான கொத்துக்கு உள்ளாகவுள்ள சிறுபூக்கள் தட்டு சிறுபூக்கள் எனப்படும், இவை முதிர்வடைந்து விதைகளாகும்.

சூரியகாந்திக் கொத்துக்குள் உள்ள சிறுபூக்கள் சுருளி அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். பொதுவாக ஒவ்வொரு சிறு பூவும் கிட்டத்தட்ட தங்கக் கோணம் 137.5° ஆல் அடுத்த சிறுபூவை நோக்கி வரிசைப்படுத்தப்படும், இது ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் சுருளிகள் வடிவமைப்பை உண்டாக்கும். இங்கு இடது சுருள்களின் எண்ணிக்கையும் வலது சுருள்களின் எண்ணிக்கையும் அடுத்தடுத்த ஃபிபனாச்சி எண்களாகும். பொதுவாக, ஒரு திசையில் 34 சுருள்களும் அடுத்த திசையில் 55 உம் உள்ளன; மிகப்பெரிய சூரியகாந்தியில் ஒரு திசையில் 89 உம் அடுத்ததில் 144 உம் இருக்கலாம்.[1][2][3] இந்த வடிவமைப்பானது பூங்கொத்துக்குள் மிகவும் திறனான முறையில் நிரப்பப்படும் விதைகளை உண்டாக்கும்.[4][5][6]

ஒளிதூண்டுதிருப்பம்[தொகு]

மொட்டு நிலையிலுள்ள சூரியகாந்திகள் ஒளிதூண்டுதிருப்பத்தைக் காண்பிக்கின்றன. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் நகரும்போது, அவையும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றவேளையில் இரவில் அவை மீண்டும் கிழக்குத் திசைக்குத் திரும்புகின்றன. இந்த நகர்வானது மொட்டிற்குச் சிறிது கீழாக உள்ள தண்டின் வளையத்தக்க பகுதியான இலையடிமுண்டிலுள்ள இயக்க கலங்களினால் ஏற்படுத்தப்படும். மொட்டு நிலை முடியும்போது, தண்டானது விறைப்படைந்து, பூக்கும் நிலையை அடையும்.

பூக்கும் நிலையிலுள்ள சூரியகாந்திகள் அவற்றின் ஒளிதூண்டுதிருப்பத் திறனை இழக்கின்றன. தண்டானது பொதுவாக கிழக்குநோக்கிய திசை அமைவில், "உறைந்த" நிலைக்கு வந்துவிடும்.[சான்று தேவை] தண்டும் இலைகளும் தமது பச்சை வண்ணத்தை இழக்கும்.

காட்டுச் சூரியகாந்தி குறிப்பாகச் சூரியனை நோக்கித் திரும்பாது; முதிர்வடையும்போது இதன் பூக்கும் கொத்தானது பல திசைகளை நோக்கியிருக்கக்கூடும். இருந்தபோதிலும், இலைகள் சில ஒழிதூண்டுதிருப்பத்தைக் குறிப்பாக வெளிப்படுத்தும்.

வரலாறு[தொகு]

சூரியகாந்தி மத்திய அமெரிக்க நாடுகளைச் சொந்த இடமாகக் கொண்டது. இது குறைந்தது கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது என்பது அதை உறுதிப்படுத்தும் சான்றாகும்.[7] இது இரண்டாம் முறையாக மத்திய மிசிசிப்பி பள்ளத்தாக்கில் பயிரிடப்பட்டிருக்கலாம் அல்லது முற்காலத்தில் மெக்சிகோவிலிருந்து சோளம் அறிமுகமாகியபோது இதுவும் அறிமுகமாகியிருக்கலாம். வடக்கு மெக்சிகோவில் மிகவும் முந்திய காலத்தில் முழுதாக பயிரிடப்பட்டதாக அறியப்பட்ட சூரியகாந்தி எடுத்துக்காட்டுகள் டென்னசியில் கி.மு 2300 அளவில் காணப்பட்டுள்ளன. பல உள்ளூர் அமெரிக்க மக்கள் சூரியகாந்தியை மெக்சிகோவின் ஆஸ்டெக்குகள் மற்றும் ஆட்டொமி மற்றும் தென்னமெரிக்காவில் இன்காகள் உள்ளடங்கலாக தமது சூரிய தெய்வத்தின் அடையாளமாகப் பயன்படுத்தினர். பிரான்சிஸ்கோ பிஸார்ரோ என்பவரே தஹுவண்டின்சுயோ, பெருவில் சூரியகாந்தியைச் சந்திக்கவேண்டியிருந்த முதலாவது ஐரோப்பியராவார். பூவின் தங்க படங்கள் மற்றும் அதோடு விதைகள் ஆகியவை 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினுக்குத் திருப்பிக் கொண்டுசெல்லப்பட்டன. சூரியகாந்தியானது சூரிய சமயம் மற்றும் போர்முறை ஆகியவற்றுடன் தொடர்புள்ளதாக இருப்பதால், இதைப் பயிரிடுவதை ஸ்பெயின் நாட்டவர்கள் தடுக்க முயற்சிப்பதாக சில ஆய்வாளர்கள் விவாதிக்கிறார்கள்.[8]

18 ஆம் நூற்றாண்டின்போது, ஐரோப்பாவில், குறிப்பாக ரஷ்யன் பழமைவாத தேவாலய உறுப்பினர்களுடன், சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடானது மிகவும் பிரபலமாகியது, ஏனெனில் தவக்காலத்தின்போது தடைசெய்யாத சில எண்ணெய்களில் சூரியகாந்தி எண்ணெயும் ஒன்றாக இருந்தது.

பயிர்ச்செய்கையும் பயன்களும்[தொகு]

சூரியகாந்திகள் சிறப்பாக வளருவதற்கு முழுமையான சூரியன் தேவை. அவை ஏராளமான பத்திரக்கலவையுடன் வளம்மிக்க, ஈரமான, நன்கு-வடிகட்டப்படும் மண்ணில் மிகச்சிறப்பாக வளரும். வர்த்தகரீதியான பயிர்ச்செய்கையில், விதைகள் 45 செ.மீ (1.5 அடி) இடைவெளியிலும் 2.5 செ.மீ (1 அங்) ஆழத்திலும் விதைக்கப்படும். சூரியகாந்தி "முழுமையான விதை" (பழம்) உப்புச் சேர்க்கப்பட்டு அல்லது சேர்க்கப்படாமல் அடுப்புகளில் வைத்து வறுத்த பின்னர் சிற்றுண்டியாக விற்கப்படும். சூரியகாந்திகளை வேர்க்கடலை வெண்ணெய் மாற்றாக சன்பட்டராகப் பதப்படுத்தலாம். ஜெர்மனியில், இதை ரை மாவுடன் சேர்த்து சோனன்ப்ளுமென்கர்ன்ப்ரட் (Sonnenblumenkernbrot) செய்கிறார்கள் (நேர்ப்பொருளாக: சூரியகாந்தி முழுமையான விதை வெதுப்பி), இது ஜெர்மன் மொழி பேசுகின்ற ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமானது. இதை பறவைகளுக்கான உணவாகவும் விற்கிறார்கள், சமையலிலும் பச்சைக்காய்கறிக் கலவைகளிலும் இதை நேரடியாகப் பயன்படுத்தலாம்.

விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சூரியகாந்தி எண்ணெய் தாங்கி எண்ணெயாக சமையலுக்குப் பயன்படும், மேலும் இது ஆலிவ் எண்ணெயைவிட மலிவாக இருப்பதால் வெண்ணெய் (மார்ஜரின்) மற்றும் பயோடீசல் தயாரிப்புக்கும் பயன்படும். வேறுபடுகின்ற கொழுப்பமில சேர்வைகளுடன் பரந்துபட்ட சூரியகாந்தி வகைகள் உள்ளன; சில 'உயர் ஒலீக்' வகைகளின் எண்ணெயில், ஆலிவ் எண்ணெயை விடக்கூட அதிகமான அளவில் ஆரோக்கியமான நிரம்பாத கொழுப்புகள் உள்ளன.

வட்டு சிறுபூக்கள் விவரம்.

எண்ணெய் எடுப்பதற்காக விதைகளை பதப்படுத்திய பின்னர் எஞ்சுகின்ற கட்டியை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். சமீபத்தில் உருவாக்கப்பட்ட சில இனங்கள் தொங்குகின்ற பூங்கொத்துகளை உடையன. பூக்களை அலங்காரத் தாவரமாக வளர்க்கின்ற தோட்டக்காரர்களை இந்த இனங்கள் குறைவாகவே ஈர்க்கின்றன, ஆனால் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுகின்றன, ஏனென்றால் அவை பறவைகளால் ஏற்படும் சேதம் மற்றும் சில தாவர நோய்களால் ஏற்படும் இழப்புக்களைக் குறைக்கின்றன. சூரியகாந்திகள் மரப்பாலையும் உற்பத்திசெய்யும், மேலும் குறைந்த ஒவ்வாமை ரப்பரைத் தயாரிப்பதற்கான மாற்றுத் தாவரமாக அவற்றை மேம்படுத்துவதற்காக பரிசோதனைகளுக்கு உள்ளாகின்றன.

பாரம்பரியமாக பல நேட்டிவ் அமெரிக்கன் குழுக்கள், நன்கறியப்பட்ட மூன்று சகோதரிகள் பொருத்தமான சோளம், அவரை மற்றும் பூசணி ஆகியவற்றுக்கு "நான்காவது சகோதரியாக" அவர்களின் தோட்டங்களின் வடக்கு வரம்புகளில் சூரியகாந்திகளைப் பயிரிட்டனர்.[9] ஆண்டு இனங்கள் கொண்டுள்ள இரசாயனப் பதார்த்தங்களைச் சுரக்கும் பண்புகளுக்காக அவை பெரும்பாலும் பயிரிடப்படும்.[சான்று தேவை]

இருந்தபோதிலும், சரக்குப் பயிர்களை வளர்க்கின்ற வர்த்தகரீதியான விவசாயிகளுக்கு சூரியகாந்தியானது பிற விரும்பத்தகாத தாவரமாகவே இருக்கும், அடிக்கடி களையாகக் கருதப்படும். குறிப்பாக மத்தியமேற்கு அமெரிக்காவில், காட்டு (பல்லாண்டு வாழ்கின்ற) இனக்கள் சோளம் மற்றும் சோயாஅவரைத் தோட்டங்களில் அடிக்கடி காணப்படும், இவை விளைச்சலில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கக்கூடியன.

ஈயம், ஆர்சனிக் மற்றும் யுரேனியம் போன்ற நச்சுப் பதார்த்தங்களை மண்ணிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் சூரியகாந்திகளைப் பயன்படுத்தக்கூடும். இவை செர்னோபில் அனர்த்தத்தின் பின்னர் மண்ணிலிருந்து யுரேனியம், செசியம்-137 மற்றும் துரந்தியம்-90 ஆகியவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டன (தாவரமறுசீரமைப்பு என்பதைப் பார்க்கவும்).

சிறுபூ ஒழுங்கமைப்பின் கணிதரீதியான மாதிரி[தொகு]

n=1..500 க்கான வோஜலின் மாதிரி விளக்கப்படம்.

சூரியகாந்திப் பூங்கொத்தின் சிறுபூக்களின் வடிவமைப்பின் மாதிரியை 1979 ஆம் ஆண்டில் ஹெச். வோஜெல் முன்வைத்தார்.[10] இது முனைவு ஆயங்களில் தெரிவிக்கப்படுகிறது

இங்கே θ என்பது கோணம், r என்பது ஆரம் அல்லது மையத்திலிருந்தான தூரம், n என்பது சிறுபூவின் சுட்டி எண் மற்றும் c என்பது ஒரு மாறிலியான அளவீட்டுக் காரணியாகும். இது ஃபெர்மட்டின் சுருளி வடிவமாகும். கோணம் 137.5° என்பது தங்க விகிதத்துடன் தொடர்பானது, இது சிறுபூக்களின் நெருக்கமான அடுக்கைக் கொடுக்கிறது. இந்த மாதிரியானது சூரியகாந்திகளின் கணினி வரைகலைச் சித்தரிப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[11]

அளவு[தொகு]

சூரியகாந்திகள் மிகப் பொதுவாக 1.5 தொடக்கம் 3.5 மீ (8–12 அடி) வரையான உயரத்துக்கு வளர்கின்றன. 12-மீ (40 அடி), பாரம்பரிய, தனித்த-பூங்கொத்து, சூரியகாந்தி தாவரமானது படுவாவில் வளர்க்கப்பட்டதாக 1567 ஆம் ஆண்டிலிருந்தான விஞ்ஞானரீதியான இலக்கியங்கள் கூறுகின்றன. இதே விதைகள் வேறு சமயங்களில் வேறு இடங்களில் கிட்டத்தட்ட எட்டு மீட்டர் (26 அடி) உயரத்துக்கு வளர்ந்தன (எ.கா. மாட்ரிட்). எட்டு மீட்டருக்கும் அதிகமாக வளர்கின்ற மிக அண்மைக்கால அருஞ்செயல்கள் (கடந்த இருபது ஆண்டுகள்) நெதர்லாந்து மற்றும் ஒண்டாரியோ, கனடா இரு நாடுகளிலும் நடந்துள்ளன.

பண்பாட்டு அடையாளம்[தொகு]

  • சூரியகாந்தியானது அமெரிக்க மாநிலமான கன்சாஸின் மாநிலப் பூ ஆகும், மேலும் கிட்டாக்யுஷு, ஜப்பானின் நகரப் பூக்களில் ஒன்றாகும்.
  • சிவப்பு ரோஜாவானது சமதர்மம் அல்லது சமூக ஜனநாயகத்தின் அடையாளமாக இருப்பதுபோலவே, சூரியகாந்தியானது பெரும்பாலும் பசுமைக் கொள்கையின் அடையாளமாகப் பயன்படும். சைவ சமூகத்தின் சின்னமாகவும் சூரியகாந்தி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, இப்பூவானது கலைநயமுடைய இயக்கத்தின் அடையாளமாகப் பயன்பட்டது.
  • வான் கோவின் மிகப் பிரபலமான ஓவியத்தின் பொருள் சூரியகாந்திகளாகும் (ஓவியங்களின் தொடர்)
  • உக்ரெய்ன் நாட்டின் தேசியப் பூ சூரியகாந்தியாகும்.

வகைகள்[தொகு]

பின்வருவன சூரியகாந்தி வகைகளாகும் (ஆங்கில அகரவரிசைப்படி உள்ளன):

  • அமெரிக்கன் ஜயண்ட் ஹைப்ரிட்
  • ஆர்னிகா
  • ஆட்டம் பியூட்டி
  • ஆஸ்டெக் சன்
  • பிளாக் ஆயில்
  • ட்வார்ஃப் சன்ஸ்பாட்
  • ஈவ்னிங் சன்
  • ஜயண்ட் ப்ரிம்ரோஸ்
  • இண்டியன் பிளாங்கட் ஹைப்ரிட்
  • ஐரிஷ் ஐஸ்
  • இட்டாலியன் ஒய்ட்
  • காங் ஹைப்ரிட்
  • லார்ஜ் கிரே ஸ்ட்ரைப்
  • லெமன் குயீன்
  • மமட் சன்ஃபிளவர்
  • மொங்கோலியா ஜயண்ட்
  • ஆரஞ்ச் சன்
  • பீச் பஷன்
  • பெரிடாவிக்
  • ரெட் சன்
  • ரிங் ஆஃப் ஃபயர்
  • ராஸ்டாவ்
  • ஸ்கைஸ்கிரேப்பர்
  • சோரயா
  • ஸ்ட்ராபெரி ப்லாண்டே
  • சனி ஹைப்ரிட்
  • டையோ
  • டாரஹுமாரா
  • டெட்டி பியர்
  • டைட்டன்
  • வாலண்டைன்
  • வெல்வெட் குயீன்
  • எலோ எம்பிரஸ்

பிற இனங்கள்[தொகு]

  • வட அமெரிக்காவில் தோன்றிய 38 பல்லாண்டு வாழ்கின்ற சூரியகாந்தி இனங்களில் மாக்ஸிமில்லியன் சூரியகாந்தி (Helianthus maximillianii ) ஒன்றாகும். இவற்றை பல்லாண்டுவாழ் விதைப் பயிராக வளர்க்கக்கூடிய சாத்தியக்கூறை லேண்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் பிற இனப்பெருக்க திட்டங்கள் தற்போது ஆராய்கின்றன.
  • சன்சோக் [2] பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம் (ஜெருசலேம் (Jerusalem) கூனைப்பூ அல்லது கெலியந்தஸ் டுபரோசஸ் (Helianthus tuberosus)) என்பது சூரியகாந்திக்குத் தொடர்பானது, இது பல்லாண்டுவாழ் சூரியகாந்திக்குரிய இன்னொரு எடுத்துக்காட்டாகும்.
  • மெக்சிகன் சூரியகாந்தி என்பது டைதோனியா ரோடந்திபோலியா (Tithonia rotundifolia) ஆகும். இது மிகவும் தொலைவாகவே வட அமெரிக்க சூரியகாந்திகளுடன் தொடர்பானது.
  • பொய்யான சூரியகாந்தி என்பது ஹெலியோப்சிஸ் (Heliopsis) இனத்துத் தாவரங்களைக் குறிக்கும்.

புகைப்படத் தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. ஜான் எ. அடம், மதமட்டிக்ஸ் இன் நேச்சர்
  2. "ஆர். நோட், இன்டராக்டிவ் டெமோஸ்". Archived from the original on 2009-09-16. பார்க்கப்பட்ட நாள் 2010-04-22.
  3. [https://web.archive.org/web/20090907063800/http://www.mcs.surrey.ac.uk/Personal/R.Knott/Fibonacci/fibnat.html பரணிடப்பட்டது 2009-09-07 at the வந்தவழி இயந்திரம் ஆர்.நோட் பிபொனக்சி இன் பிளாண்ட்ஸ்[1] பரணிடப்பட்டது 2009-09-07 at the வந்தவழி இயந்திரம்
  4. http://books.google.com/books?id=f_VMeAToefwC&pg=PA154&lpg=PA154&dq=fibonacci+packing+efficiency&source=bl&ots=sWDWr07bFq&sig=JmfHmea2OIFuDSU0R46OXbm-kDM&hl=en&ei=6x4WSv2IOov8swPhtOHZCA&sa=X&oi=book_result&ct=result&resnum=5
  5. http://books.google.com/books?id=YJ6uEstnjLsC&pg=PA185&lpg=PA185&dq=fibonacci+packing+efficiency&source=bl&ots=yd-x1QO3YA&sig=xdU6n_dYMjyfXQCcsxE9ODNwXBc&hl=en&ei=6x4WSv2IOov8swPhtOHZCA&sa=X&oi=book_result&ct=result&resnum=1[தொடர்பிழந்த இணைப்பு]
  6. http://www.oocities.com/capecanaveral/lab/5833/cycas.html[தொடர்பிழந்த இணைப்பு]
  7. யூனிவர்சிட்டி ஆஃப் சின்சின்னடி (2008, ஏப்ரல் 29). ஏஞ்ஷண்ட் சன்ஃபிளவர் ஃபியுவல்ஸ் டிபேட் அபௌட் அக்ரிகல்ச்சர் இன் தி அமெரிக்காஸ். சயின்ஸ்டெய்லி. நவம்பர் 3, 2009 அன்று பெறப்பட்டது.
  8. சன்ஃபிளவர் டிபேட் எண்ட்ஸ் இன் மெக்ஸிகோ, ரிசர்ச்சர்ஸ் சே நியூஸ்வைஸ், ஜூன் 26, 2008 அன்று பெறப்பட்டது.
  9. குவெப்பர் அண்ட் டாட்சன், 2001 கம்பானியன் பிளாண்டிங்: பேசிக் கன்செப்ட் அண்ட் ரிசோர்ஸஸ் பரணிடப்பட்டது 2008-05-24 at the வந்தவழி இயந்திரம்
  10. Vogel, H (1979), "A better way to construct the sunflower head", Mathematical Biosciences, 44 (44): 179–189, doi:10.1016/0025-5564(79)90080-4
  11. Przemyslaw Prusinkiewicz; Lindenmayer, Aristid (1990). The Algorithmic Beauty of Plants. Springer-Verlag. பக். 101–107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0387972978. http://algorithmicbotany.org/papers/#webdocs. 

குறிப்புதவிகள்[தொகு]

  • பாப், கெவின்; பால், மேரி ஈ. டி.; ஜோன்ஸ், ஜான் ஜி.; லெண்ட்ஸ், 3 டேவிட் எல்.;வோன் நாகி, கிறிஸ்டோபர்; வேகா ஃபிரான்ஸிஸ்கோ ஜெ.; கியூட்மையர் இர்வி ஆர்.; "ஒரிஜின் அண்ட் என்வயர்ன்மெண்டல் செட்டிங் ஆஃப் ஏன்சியண்ட் அக்ரிகல்ச்சர் இன் தி லாலாண்ட் ஆஃப் மீசொமெரிக்கா," சயின்ஸ், 18 மே 2001:தொகுதி. 292. எண். 5520, பக்கங்கள். 1370–1373.
  • ஸுஸ்டிக், ரொப்ட். 1974. ஃபிளவர்ஸ் அண்ட் பிளாண்ட்ஸ். அன் இன்டர்நேஷனல் லெக்ஷிகான் வித் பயோக்ராபிக்கல் நோட்ஸ்' . குவாட்ரங்கிள்/தி நியூ யார்க் டைம்ஸ் புக் கோ. 329 பக்கங்கள்.
  • வூட், மர்சியா. ஜூன் 2002. "சன்ஃபிளவர் ரப்பர்?" அக்ரிகல்ச்சரல் ரிசர்ச். USDA. [3][4]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியகாந்தி&oldid=3886409" இலிருந்து மீள்விக்கப்பட்டது