சோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோளம்
Sorghum.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரங்கள்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: காமெனிலிட்டுகள்
வரிசை: Poales
குடும்பம்: போவாசியே
பேரினம்: சோளம்
L.
இனங்கள்

ஏறத்தாழ 30 இனங்கள்.

சோளம் (இலங்கையில் 'இறுங்கு') என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுட் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரலேசியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை ஆகும். இது சிறிய தானியப் பயிராகும்.[1]

வரலாறு[தொகு]

இந்திய மாநிலமான தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். இன்றும் இது திருச்சிமாவட்டம், பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரிடப்படுகிறது. இது நாட்டுவகைச் சோளம். பெரும்பாலோர் கலப்பின ரகச் சோளங்களையே பயிரிடுகின்றனர்.

வெண்சாமரச் சோளம்
வெண்சாமரச் சோளப்பொரிகள்


இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம்[தொகு]

வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன. . இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.

 • ஆற்றல்-349 கி.கலோரி
 • புரதம்-10.4 கிராம்
 • கொழுப்பு-1.9 கி
 • மாவுச்சத்து - 72.6 கி
 • கால்சியம் - 25 மி.லி
 • இரும்புசத்து 4.1 மி.கி,
 • பி-கரோட்டின் – 47 மி.கி
 • தயமின் - 0.37 மி.கி
 • ரிபோப்ளோவின் 0.13 மி.லி
 • நயசின் - 3.1 மி.கி.
Sorghum Field El Salvador 2011.jpg

கனிமங்கள்[தொகு]

பச்சையாக உள்ள நூறு கிராம் சோளத்தில் உள்ள கனிம அளவுகள்,

 • 30.00 மிகி கால்சியம்,
 • 0.00 மிகி இரும்பு,
 • 0.00 மிகி மெக்னீசியம்,
 • 49.00 மிகி பாஸ்பரஸ்,
 • 421.00 மிகி பொட்டாசியம்,
 • 4.00 மிகி சோடியம்.

வைட்டமின்கள்[தொகு]

பச்சையாக உள்ள நூறு கிராம் சோளத்தில் உள்ள விட்டமின்களின் அளவுகள், - 2.00 மிகி வைட்டமின் ஏ (ரெட்டினால் அல்லது கரோட்டின்), - 0.06 மிகி வைட்டமின் பி 1 (thiamin, தையமின்) (சோளம், - 0.08 மிகி வைட்டமின் B2 அல்லது ரிபோப்லாவின் (சோளம், - 0.20 மிகி வைட்டமின் B6 அல்லது பைரிடாக்சின், - 18.00 வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் மிகி, - 0.00 மிகி வைட்டமின் ஈ அல்லது தொக்கோபெரோல்.

பழுப்பு நிற சோளம்[தொகு]

சிவப்பு சோளம்

இவ்வகை சோளம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. இது பெரும்பாலும் தென் ஆப்ரிக்காவில் விளைவிக்கப்படுகின்றது. தற்போது இது மழை குறைவாக பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகின்றது. இது நான்கு மீட்டர் உயரம் வரை வளரும். இப்பயிர் மூன்று முதல் நான்கு மில்லி மீட்டர் வரை சுற்றளவு கொண்டிருக்கும். இதன் இலைகள் மருந்து, மற்றும் எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது.

சோளம் பயிரிடும் நாடுகள்[தொகு]

இந்திய சோளம்

சோளம் அனைத்து பகுதிகளிலும் விளைய ஏற்ற பயிராகும். சிறு வெள்ளைச்சோளமே இந்தியாவினுடைய இயற்கைச் சோளமாகும். மக்காச் சோளத்தின் உற்பத்தியில் தற்போது இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ள நாடு ஆகும்[2]. மக்காச்சோளம் தென் அமெரிக்க நாட்டில் இருந்து வந்த பயிர் ஆகும். சிறுசோளமும், மக்காச்சோளமும் இந்தியாவின் பாரம்பரிய பயிராகும்.

2011 ல் சோளத்தின் உற்பத்தி நைஜீரியாவில் (12.6%), இந்தியாவில் (11.2%), மெக்ஸிகோவில் (11.2%) மற்றும் அமெரிக்காவில் (10.0%) ஆக இருந்தது. சோளம் ஒரு பரவலான வெப்பநிலையில், அதிக உயரத்தில் வளரும். நச்சு மண்களிலும் வளர்க்க முடியும். இது மிகவும் வறட்சியில் வளரும் பயிராகும். இது பசிபிக் பகுதிகளிலும் விளையக்கூடியது ஆகும்.

சாகுபடி முறை[தொகு]

 • இருங்கு சோளத்தை ஆண்டுக்கு ஒரு முறை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.
 • மானாவாரி நிலங்களில் சித்திரை மாதம் ஒரு உழவு செய்து மண்ணை ஆறப்போட வேண்டும்.
 • ஆடி மாதத்தில், ஒரு மழை கிடைத்தவுடன், சோளத்தை விதைத்து, நிலத்தை உழவு செய்ய வேண்டும்.
 • ஆவணி மாதத்தில் களை எடுக்க வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.
 • சோள விளைச்சலைப் பொறுத்து, மார்கழி மாதக் கடைசிக்குள் அறுவடை செய்து விட வேண்டும்.
 • நன்றாக விளைந்த சோளம், முற்றி, சிறிய அளவில் வெடித்து, அரிசி வெள்ளையாக வெளியே தெரியும்போது அறுவடை செய்யலாம்.
 • நிலத்தில் இருந்து அரையடி விட்டு, தட்டையை அறுத்தெடுத்து, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.

சோளத்தின் பயன்கள்[தொகு]

சோளம் அமெரிக்காவில் மற்ற தானியங்களைவிட அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து உள்ளதால் சத்தான உணவாக இது கருதப்படுகின்றது. உணவுக்காக மேலைநாடுகளில் அதிக அளவில் இவை பயிரிடப்படுகின்றது. மக்காச்சோள அவல் அதிக அளவு காலை சிற்றுண்டிக்கு பயன்படுகின்றது. வளர்ந்த நாடுகளில் கால்நடை தீவனத்திற்காகவும் சோளம் பயன்படுகின்றன. இது கஞ்சி சர்க்கரை (சோளசர்க்கரை, டெக்ஸரின்) காகன் சிரப் தொழிற் ஆல்கஹால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

 • சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது ஆகும். இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இவை வாய் நாற்றத்தைப் போக்கும்.
 • சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கவல்லதாகும். சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன.
 • சோளம் உயிரி எரிபொருள் தயாரிப்பிற்கும் பயன்படும் முக்கிய பொருளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Mutegi, Evans; Fabrice Sagnard, Moses Muraya, Ben Kanyenji, Bernard Rono, Caroline Mwongera, Charles Marangu, Joseph Kamau, Heiko Parzies, Santie de Villiers, Kassa Semagn, Pierre Traoré, Maryke Labuschagne (2010-02-01). "Ecogeographical distribution of wild, weedy and cultivated Sorghum bicolor (L.) Moench in Kenya: implications for conservation and crop-to-wild gene flow". Genetic Resources and Crop Evolution 57 (2): 243–253. doi:10.1007/s10722-009-9466-7. 
 2. Sorghum, U.S. Grains Council.

தொடர்புடைய சுட்டிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளம்&oldid=2031589" இருந்து மீள்விக்கப்பட்டது