உள்ளடக்கத்துக்குச் செல்

ஒண்டுராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹொண்டுராஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒந்துராசு குடியரசு
Republic of Honduras
República de Honduras
கொடி of ஒந்துராசு
கொடி
சின்னம் of ஒந்துராசு
சின்னம்
குறிக்கோள்: 
  • "Libre, Soberana e Independiente"
  • "விடுதலை, இறையாண்மை, சுதந்திரம்"
நாட்டுப்பண்: 
ஒந்துராசுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டெகுசிகல்பா
14°6′N 87°13′W / 14.100°N 87.217°W / 14.100; -87.217
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
இனக் குழுகள்
(2016)[1]
சமயம்
(2014)[2]
மக்கள்
  • ஒந்தூரான்
  • கத்ராச்சோ
அரசாங்கம்ஒருமுக சனாதிபதிக் குடியரசு
• அரசுத்தலைவர்
சியோமாரா காசுட்ரோ
• தேசிய காங்கிரசுத் தலைவர்
மொரீசியோ ஒலிவா
சட்டமன்றம்தேசிய காங்கிரசு
விடுதலை
• அறிவிப்புb எசுப்பானியாவிடம் இருந்து
15 செப்டம்பர் 1821
• 1-வது மெக்சிக்கப் பேரரசிடம்
இருந்து
1 சூலை 1823
• ஒந்துராசாக அறிவிப்பு (நடு அமெரிக்கக் குடியரசிடம் இருந்து)
5 நவம்பர் 1838
பரப்பு
• மொத்தம்
112,492 km2 (43,433 sq mi) (101-வது)
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
10,278,345[3][4] (95-வது)
• 2013 கணக்கெடுப்பு
8,303,771
• அடர்த்தி
85/km2 (220.1/sq mi) (128-ஆம்)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$49.010 பில்லியன்[5] (104-வது)
• தலைவிகிதம்
$5,817[5] (133-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$23.835 பில்லியன்[5] (108-வது)
• தலைவிகிதம்
$2,829[5] (128-வது)
ஜினி (2018)negative increase 52.1[6]
உயர்
மமேசு (2019)Increase 0.632[7]
மத்திமம் · 133-வது
நாணயம்இலெம்பீரா (HNL)
நேர வலயம்ஒ.அ.நே−6 (நடு நேர வலயம்)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+504
இணையக் குறி.hn
  1. ஐரோப்பிய, அமெரிக்க இந்தியக் கலப்பு.
  2. நடு அமெரிக்கக் குடியரசின் பகுதி

ஒந்துராசு (Honduras, (/hɒnˈdʊərəs/ (கேட்க); எசுப்பானியம்: [onˈduɾas]), அதிகாரபூர்வமாக ஒந்துராசு குடியரசு (Republic of Honduras), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒந்துராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒந்துராசு எனவும் அழைக்கப்பட்டது[8] இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன.

ஒந்துராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன. ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது.[9]

ஒந்துராசு 112,492 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

ஹொண்டுராஸ் வரைபடம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Central America and Caribbean :: HONDURAS". CIA The World Factbook. 5 November 2021. Archived from the original on 11 April 2021. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  2. "Religion in Latin America: Widespread Change in a Historically Catholic Region" (PDF) (in ஆங்கிலம்). November 2014. p. 14. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  3. "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  4. "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  5. 5.0 5.1 5.2 5.3 "World Economic Outlook Database, October 2018". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். பார்க்கப்பட்ட நாள் 7 March 2019.
  6. "Gini Index coefficient". CIA World Factbook. பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
  7. Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene (PDF). United Nations Development Programme. 15 December 2020. pp. 343–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-126442-5. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
  8. "Archeological Investigations in the Bay Islands, Spanish Honduras". Aboututila.com. Archived from the original on 2010-09-22. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2010.
  9. Parkinson, Charles (21 ஏப்ரல் 2014). "Latin America is World's Most Violent Region: UN". InSight Crime. பார்க்கப்பட்ட நாள் 2016-02-09. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டுராசு&oldid=4040178" இலிருந்து மீள்விக்கப்பட்டது