உள்ளடக்கத்துக்குச் செல்

தலைவர் ஆளும் அரசு முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைவர் ஆளும் அரசு முறைமை (Presidential System) என்பது அரசுத் தலைவரே நாட்டின் தலைவராகவும், சட்டமியற்றும் கிளையில் இருந்து மாறுபட்ட ஆட்சியக கிளையின் முன்நிலையாளராகவும் உள்ள அரசு முறையாகும். ஒன்றிணைந்த அமெரிக்க நாடுகள், தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்ட ஒரு தேசமாகும். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் பரவலாக "தலைவர்" எனும் சுட்டுப் பெயரைக் கொண்டவரும் சட்டமியற்றகத்தின் மீது பொறுப்பற்றவரும், சாதாரன சூழ்நிலையில் பதவியில் இருந்து நீக்க முடியாதவரும் ஆவார். மிதமிஞ்சியச் சூழலில், குற்றம் சாட்டுதலின் வாயிலாக ஆட்சியாளரை நீக்கும் அதிகாரத்தை சட்டமியற்றகம் பெற்றிருக்கலாம். இவ்வாறு ஆட்சியாளரைப் நீக்குவது மிகவும் அரிது என்பதால், சாதாரண நிலையில் சட்டமியற்றகத்தால் நீக்க முடியாது என்றே கூறலாம்.

பொதுத் தன்மை[தொகு]

தலைவர் ஆளும் முறைமை பல்வேறு விதங்களில் நடைமுறைக்கு வந்திருந்தாலும், எண்ணற்ற வடிவங்களைக் கொண்டிருந்தாலும், கீழ்காணும் சில பொதுவான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.

  • சட்டமியற்றும் அவைகளின் செயல்களை நிராகரிக்கும் அதிகாரம் ஆட்சியாளருக்கு வழங்கப்படும். இந்த அதிகாரத்தை சட்டமியற்றுபவர்களின் சிறப்பு பெரும்பான்மையினால் புறக்கணிக்கவும் முடியும். நிராகரிக்கும் அதிகாரமானது பிரித்தானிய முறையில், பாரளுமன்றத்தின் சட்டங்கள் சட்டமாக்கப்பட கோவின் (Crown) ஒப்புதல் வேண்டும் என்பதில் இருந்து வந்ததாகும்.
  • தலைவரின் பதவிக் காலம் நிச்சயிக்கப்பட்டதாகும். இப்பதவிக்கான தேர்தல் குறிப்பிட்ட இடைவேளையில் நடத்தப்படும். இது நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற நாடாளுமன்ற செயலுக்கு உட்பட்டதல்ல.
  • ஆட்சியக கிளை ஒரு நபரைக் கொண்டு இயங்கும், அமைச்சரவை உறுப்பினர்கள் தலைவரின் விருப்பத்திற்கு உட்பட்டவர்களும் ஆவர்.
  • தலைவர் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பார்.

தலைவர்களின் பண்புகள்[தொகு]

தலைவரே முழுமையாக ஆளும் முறையில், மக்களால் நேரடியாகவோ, தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியினரால் மறைமுகமாகவோ தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். இம்முறையில் அரசுத்தலைவரும் நாட்டின் தலைவரும் இருவேறு ஆட்களாக அல்லாமல், ஒருவராகவே இருப்பார்.

சில நாடுகளில் (எ.கா., தென் ஆப்ரிக்கா) சட்டமியற்றகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முழு ஆளுமையைக் கொண்டிருப்பதும் உண்டு. இந்த ஆட்சியாளர்கள் "தலைவர்" எனும் சுட்டுப்பெயரைக் கொண்டிருந்தாலும், இவர்கள் முதன்மை அமைச்சர்களைப் (Prime Ministers) போன்றே செயல்படுவார்கள். இம்முறையைக் கொண்ட நாடுகளில் போட்ஸ்வானா, மார்ஷல் தீவுகள், நாரு மற்றும் சுரிநாம் ஆகியன உட்படும்.

இத்தகைய சில அரசு முறைமைகளில் (குறிப்பாக அசெர்பாய்ஜன், மொசம்பிக்), முதன்மை அமைச்சர் (Prime Minister) அல்லது பிரதமர் (Premier) என்ற பதவி இருந்தாலும் முதன்மை அமைச்சர் அல்லது பிரதமர், ஆட்சித் தலைவருக்கு பதில் கூற வேண்டுமே அல்லாமல் சட்டமியற்றகத்திற்கு அல்ல.

இதற்கு மாறாக, தேசிய தலைவர்கள், மன்றம் ஆளும் அரசு முறைமையில், அரசியல் அமைப்பு சார் முடியாட்சிகளைப் போன்று நாட்டின் அடையாளத் தலைமையாக செயல்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட அடையாளத் தலைவர்கள் மக்ககளால் நேரடியாகவோ அல்லது சட்டமியற்றகத்தால் மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படலாம். இங்கு முதன்மை அமைச்சர் அரசின் தலைவராக செயல்படுவார்.

பின்பற்றும் நாடுகள்[தொகு]

தலைவர் ஆளும் அரசு முறைமையை பின்பற்றும் நாடுகளின் பட்டியல்:

உலகின் குறுநில அரசுகள்[தொகு]

பொதுவாக வட்டார அரசு முறைகள், வட்டாரத் தன்னாட்சி நிறுவனங்கள், நகராட்சிகள், நகரக் கழகங்கள் போன்றவை தலைவர் ஆளும் முறைமையே கொண்டுள்ளது. ஜப்பானில் தேசிய அரசு, மன்றம் ஆளும் அரசு முறையைக் கொண்டிருந்தாலும், மாவட்ட அரசு முறைகள் மற்றும் நகராட்சிகள் ஆகியன ஆளுநர் மற்றும் மேயர் ஆகியோர் வட்டார அவைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுகின்றன. ஒன்றிணைந்த அமெரிக்க நாடுகளில் (U.S) நாட்டரசுகள் தலைவர் ஆளும் முறையைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் நிலை[தொகு]

இந்தியாவின் அரசு முறை கூட்டாட்சி தத்துவத்தை கொண்ட மன்றம் ஆளும் அரசு முறையைக் கொண்டிருந்தாலும், அரசியல் அமைப்பின் 73 மற்றும் 74-ம் சீர்திருத்தம் வாயிலாகக் கொண்டு வரப்பட்ட உள்ளாட்சிகள் மற்றும் நகரமயங்கள் தலைவர் ஆளும் முறையைக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் வட்டார தன்னாட்சி முறை

தமிழ்நாட்டில் வட்டார தன்னாட்சி நிறுவனங்கள் ஜனங்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஆளும் முறையைக் கொண்டுள்ளது. அதாவது அமெரிக்க ஒன்றிய நாடுகளின் தேசிய அரசு முறையைப் போன்று.

கேரள வட்டார தன்னாட்சி நிறுவனங்கள்

கேரள வட்டார தன்னாட்சி நிறுவனங்கள் தேன் ஆப்ரிக்காவைப் போன்று தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சான்றுகள்[தொகு]

  1. Iran combines the forms of a presidential republic, with a president elected by universal suffrage, and a theocracy, with a Supreme Leader who is ultimately responsible for state policy, chosen by the elected Assembly of Experts. Candidates for both the Assembly of Experts and the presidency are vetted by the appointed Guardian Council.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவர்_ஆளும்_அரசு_முறைமை&oldid=3595863" இலிருந்து மீள்விக்கப்பட்டது