காம்பியா
காம்பியா குடியரசு Republic of The Gambia | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: "முன்னேற்றம், அமைதி, சுபீட்சம்" | |
நாட்டுப்பண்: எமது தாய்நாடு காம்பியாவிற்காக | |
தலைநகரம் | பஞ்சுல் |
பெரிய நகர் | செரெகுண்டா |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | காம்பியன் |
அரசாங்கம் | குடியரசு |
• தலைவர் | அடமா பாரோ |
விடுதலை | |
• ஐ.இ. இடமிருந்து | பெப்ரவரி 18, 1965 |
• குடியரசு அறிவிப்பு | ஏப்ரல் 24, 1970 |
பரப்பு | |
• மொத்தம் | 10,380 km2 (4,010 sq mi) (164வது) |
• நீர் (%) | 11.5 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2005 மதிப்பிடு | 1,517,000 (150வது) |
• அடர்த்தி | 153.5/km2 (397.6/sq mi) (74வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $3.094 பில்லியன் (171வ) |
• தலைவிகிதம் | $2002 (144வது) |
ஜினி (1998) | 50.2 உயர் |
மமேசு (2007) | 0.502 Error: Invalid HDI value · 155வது |
நாணயம் | டலாசி (GMD) |
நேர வலயம் | GMT |
அழைப்புக்குறி | 220 |
இணையக் குறி | .gm |
காம்பியா அல்லது காம்பியா குடியரசு (The Gambia), ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்திருக்கின்றன. காம்பியா ஆறு இந்நாட்டின் நடுப்பகுதிக்கூடாக சென்று அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. பெப்ரவரி 18, 1965 இல் காம்பியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் பஞ்சுல் ஆகும்.[1][2][3]
புவியியல்
[தொகு]காம்பியா அளவில் மிகவும் சிறிய குறுகிய நாடாகும். இதன் அகலம் 48 கிலோ மீட்டருக்கும் குறைவானதாகும். மொத்தப் பரப்பளவு 11,300 கிமீ². 1889 இல் ஐக்கிய இராச்சியத்துக்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. காம்பியா ஏறத்தாழ முழுமையாக செனகல் நாட்டினால் சூழப்பட்டுள்ளது.
மக்கள்
[தொகு]காம்பியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தத்தமது மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வருகிறார்கள். மண்டிங்கா பழங்குடியினர் ஆகக்கூடிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இவர்களுக்கு அடுத்த படியாக ஃபூல, வோலொஃப், ஜோலா, மற்றும் செரஹூல் ஆகியோர் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 3,500 ஐரோப்பியரும், லெபனீயரும் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையான 1,517,000 இல் 23 விழுக்காடாகும்.
இங்குள்ள 90 வீதமானோர் இங்கு முஸ்லிம்கள் ஆவர். மீதமானோர் கிறிஸ்தவர்கள்.
வேறு தரவுகள்
[தொகு]- மேற்கு ஆப்பிரிக்காவில் பிரித்தானியாவின் முதலாவதும் கடைசியுமான குடியேற்ற நாடு காம்பியாவாகும்.
- யுண்டும் விமான நிலையம் நாசாவின் மீள்விண்கலங்களுக்கான அவசரகால தரிப்பிடமாக இருந்தது.[1] பரணிடப்பட்டது 2011-06-10 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிபரின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-12-29 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ National Population Commission Secretariat (30 ஏப்பிரல் 2005). "2013 Population and Housing Census: Spatial Distribution" (PDF). Gambia Bureau of Statistics. The Republic of The Gambia. Archived (PDF) from the original on 3 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2017.
- ↑ "The World Factbook: Gambia, The". CIA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2023.
- ↑ "Gambia, The". Central Intelligence Agency. 28 February 2023.