பஞ்சுல்
Jump to navigation
Jump to search
பஞ்சுல் | |
---|---|
![]() பஞ்சுல் அரசர் ஃபகாட் (King Fahad) மசூதி | |
![]() பஞ்சுல் - செயற்கைக்கோள் படம் | |
நாடு | காம்பியா |
பிரதேசம் | பஞ்சுல் |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 36 sq mi (93 km2) |
மக்கள்தொகை (2003) | |
• நகரம் | 34,828 |
• அடர்த்தி | 970/sq mi (374.5/km2) |
• நகர்ப்புறம் | 357,238 |
பஞ்சுல் (ஆங்கில மொழி: Banjul, முன்னர் பாதர்ஸ்ட் - Bathurst), உத்தியோகபூர்வமாக பஞ்சுல் நகரம், காம்பியாவின் தலைநகரம் ஆகும். இது காம்பியாவின் நிர்வாகப் பிரிவான பஞ்சுல் பிரதேசத்தினதும் தலைநகரமாகும். இந்நகரத்தின் மக்கட்தொகை 34,828 ஆக உள்ளபோதும் பஞ்சுல் நகரையும் கனிஃபிங் (Kanifing) மாநகர சபையையும் உள்ளடக்கும் பெரிய பஞ்சுல் பகுதியின் மக்கட்தொகை 2003 கணக்கெடுப்பின் படி 357,238[1] ஆகும். இந்நகரம் புனித மேரி தீவில் (பஞ்சுல் தீவு எனவும் அறியப்படும்), காம்பியா ஆறு அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது.