பெலீசு
பெலீசு Bileez (பெலிசியக் கலப்பு)) Belice (எசுப்பானியம்) | |
|---|---|
| குறிக்கோள்: Sub umbra floreo "நிழலின் கீழ் நான் செழிக்கிறேன்" | |
| நாட்டுப்பண்: "சுதந்திர பூமி" | |
| தலைநகரம் | பெல்மோப்பான் 17°15′N 88°46′W / 17.250°N 88.767°W |
| பெரிய நகர் | பெலீசு நகரம் 17°29′N 88°11′W / 17.483°N 88.183°W |
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம்[1] |
| பேசப்படும் மொழிகள் | |
| இனக் குழுகள் (2010) |
|
| சமயம் (2022)[3] |
|
| மக்கள் | பெலீசியர் |
| அரசாங்கம் | ஒற்றையாட்சி அரசியல்சட்ட முடியாட்சி |
• மன்னர் | மூன்றாம் சார்லசு |
• ஆளுநர் | புரொய்லா சாலாம் |
• பிரதமர் | ஜொனி பிரிசேனோ |
| சட்டமன்றம் | தேசியப் பேரவை |
• மேலவை | மேலவை |
• கீழவை | பிரதிநிதிகள் சபை |
| விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• சுயாட்சி | சனவரி 1964 |
• விடுதலை | 21 செப்டம்பர் 1981 |
| பரப்பு | |
• மொத்தம் | 22,966 km2 (8,867 sq mi)[4] (147-ஆவது) |
• நீர் (%) | 0.8 |
| மக்கள் தொகை | |
• 2022 கணக்கெடுப்பு | 397,483[5] |
• அடர்த்தி | 17.31/km2 (44.8/sq mi) |
| மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| மொ.உ.உ. (பெயரளவு) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| ஜினி (2013) | 53.1[7] உயர் |
| மமேசு (2023) | உயர் · 115-ஆவது |
| நாணயம் | பெலீசு டாலர் ($) (BZD) |
| நேர வலயம் | ஒ.அ.நே−06:00 (நடு அமெரிக்க நேரம்) |
| திகதி அமைப்பு | நா/மா/ஆ (கிபி) |
| வாகனம் செலுத்தல் | வலம் |
| அழைப்புக்குறி | +501 |
| ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BZ |
| இணையக் குறி | .bz |
பெலீசு (Belize, /bɪˈliːz/ (ⓘ)) நடு அமெரிக்காவின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக வடக்கே மெக்சிக்கோ, கிழக்கே கரிபியக் கடல், மேற்கு, தெற்கில் குவாத்தமாலா ஆகியன உள்ளன. இது தென்கிழக்கே ஒந்துராசுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. நடு அமெரிக்காவில் இருந்தாலும், பெலீசு கரிபியன் பகுதியுடன் அடையாளம் காணப்படுகிறது, அத்துடன் கரிபியன் சமூகம் (CARICOM), மற்றும் வரலாற்றுரீதியாக பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளான பொதுநலவாய கரிபியனில் உறுப்பினராக உள்ளது.
மாயா நாகரிகம் கிமு 1500 முதல் கிபி 300 வரை பெலீசுப் பகுதியில் பரவி சுமார் 1200 வரை செழித்து வளர்ந்தது.[9] கிறித்தோபர் கொலம்பசு ஒந்துராசு வளைகுடாவில் பயணம் செய்தபோது கிபி 1502–04 இல் ஐரோப்பியத் தொடர்பு தொடங்கியது.[10] 1638-இல் ஆங்கிலேயக் குடியேறிகளால் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் தொடங்கியது. புனித ஜார்ஜ் கேய் போரில் (1798) பிரித்தானியா எசுப்பானியர்களைத் தோற்கடிக்கும் வரை எசுப்பானியாவும் பிரித்தானியாவும் நிலத்திற்கு உரிமை கோரின.[11] இது 1840-இல் பிரித்தானியக் குடியேற்ற நாடாகவும், 1862-இல் ஒரு முடிக்குரிய குடியேற்ற நாடாகவும் மாறியது. பெலீசு 1981 செப்டம்பர் 21 அன்று ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது.[12] இது பொதுநலவாய இராச்சியமாக இருக்கும் ஒரே பிரதான நடு அமெரிக்க நாடாகும். சார்லசு III இதன் மன்னராகவும், நாட்டுத் தலைவராகவும் இருக்கிறார். நாடு தலைமை ஆளுநரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[13]
பெலேசின் ஏராளமான நிலப்பரப்பு, கடல்சார் தாவரங்களும் விலங்குகளும், அதன் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பன்முகத்தன்மை, விரிவான பவளப் பாறைகள் போன்றவை, உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடையமெரிக்க உயிரியல் இடைகழியில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றன.[14] இது அமெரிக்க, கரீபியன் பகுதிகளுடன் வலுவான உறவுகளைக் கொண்ட நடு அமெரிக்க, கரிபியன் நாடாகக் கருதப்படுகிறது.[15]
பெலீசு 22,970 சதுர கிலோமீட்டர் (8,867 சதுர மைல்) பரப்பளவையும் 397,483 (2022) மக்கள்தொகையையும் கொண்டுள்ளது.[16] இதன் முக்கிய நிலப்பகுதி சுமார் 290 கிமீ (180 மைல்) நீளமும் 110 கிமீ (68 மைல்) அகலமும் கொண்டது. இது நடு அமெரிக்காவில் மிகக் குறைந்த மக்கள்தொகை அடர்த்தியையும், மிகக் குறைந்த மக்கள்தொகையையும் கொண்ட நாடு ஆகும். இதன் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 1.87% (2018 மதிப்பீடு) என்பது இப்பகுதியில் இரண்டாவது மிக உயர்ந்ததும், மேற்கு அரைக்கோளத்தில் மிக உயர்ந்த ஒன்றாகும். இதன் தலைநகரம் பெல்மோப்பான், மிகப்பெரிய நகரம் "பெலிசு நகரம்" ஆகும். பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் கொண்ட ஒரு பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை இந்த நாடு கொண்டுள்ளது. ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும் ஒரே நடு அமெரிக்க நாடு இது, அதே நேரத்தில் பெலிசியன் கிரியோல், எசுப்பானியம், மாயன் மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன. மக்கள்தொகையின் மாறுபட்ட மொழியியல் பின்னணி காரணமாக பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பன்மொழிப் புலமை கொண்டுள்ளனர். பெலீசு செப்டம்பர் கொண்டாட்டங்கள், புண்டா இசை ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றது.[17][18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Belize". The World Factbook. Central Intelligence Agency. 8 July 2025. Retrieved 28 July 2025.
- ↑ Statistical Institute of Belize (2022). Languages spoken in Belize according to the 2022 Census (PDF) (Report) (in ஆங்கிலம்). Retrieved 2025-08-18.
- ↑ "2022 Population and Housing Census". Retrieved 16 August 2024.
- ↑ "Belize § Geography". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2026 ed.). நடுவண் ஒற்று முகமை. 14 August 2019. (Archived 2019 edition)
- ↑ "Statistical Institute of Belize Presents Key Findings of the 2022 Population and Housing Census" (PDF). Statistical Institute of Belize. 8 April 2024. Archived (PDF) from the original on 10 April 2024. Retrieved 12 April 2024.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "World Economic Outlook Database, October 2024 Edition. (Belize)". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். 10 October 2024. Retrieved 2 January 2025.
- ↑ "Income Gini coefficient". United Nations Development Programme இம் மூலத்தில் இருந்து 2 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150702161000/http://hdr.undp.org/en/content/income-gini-coefficient.
- ↑ "Human Development Report 2025" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 3 May 2025. Retrieved 10 May 2025.
- ↑ Bolland, Nigel (1993). "Belize: Historical Setting" (PDF). In Tim Merrill (ed.). Guyana and Belize: Country Studies. அமெரிக்கக் காங்கிரசு நூலகம் Federal Research Division. Archived (PDF) from the original on 2022-10-09.
- ↑ Byrd Downey, Cristopher (22 May 2012). Stede Bonnet: Charleston's Gentleman Pirate. The History Press. p. 44. ISBN 978-1609495404. Retrieved 25 March 2016.
- ↑ Woodard, Colin. "A Blackbeard mystery solved". Republic of Pirates Blog. Archived from the original on 7 April 2016. Retrieved 25 March 2016.
- ↑ "Belize | History, Capital, Language, Map, Flag, & Facts | Britannica". www.britannica.com. Archived from the original on 20 September 2023. Retrieved 25 October 2022.
- ↑ "Belize – British Honduras – Central America – Nations Online Project". www.nationsonline.org. Archived from the original on 25 October 2022. Retrieved 2022-10-25.
- ↑ "Ecosystem Mapping.zip". Archived from the original on 12 May 2011. Retrieved 3 July 2012.
- ↑ "CARICOM – Member Country Profile – BELIZE". www.caricom.org. CARICOM. Archived from the original on 18 February 2015. Retrieved 17 February 2015.
- ↑ "Postcensal estimates by age group and sex, 2010 – 2022" (XLSX). Statistical Institute of Belize. Archived from the original on 13 December 2022. Retrieved 13 December 2022.
- ↑ "Reid between the lines". Belize Times. 27 January 2012. Archived from the original on 10 May 2013.
- ↑ Ryan, Jennifer (1995). "The Garifuna and Creole culture of Belize explosion of punta rock". In Will Straw; Stacey Johnson; Rebecca Sullivan; Paul Friedlander; Gary Kennedy (eds.). Popular Music: Style and Identity. Centre for Research on Canadian Cultural Industries and Institutions. pp. 243–248. ISBN 978-0771704598.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் – Government of Belize. பரணிடப்பட்டது 10 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம்.
- Official webpage of Queen Elizabeth II (as former Queen of Belize)
- Wikimedia Atlas of Belize
- Profile at U.S. Department of State
- Belize National Emergency Management Organization – Official governmental site
- Belize Wildlife Conservation Network – Belize Wildlife Conservation Network (archived 4 February 2013)
- LANIC Belize page பரணிடப்பட்டது 17 திசம்பர் 2024 at the வந்தவழி இயந்திரம்
- Belize. த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை.
- Belize at UCB Libraries GovPubs (archived 11 May 2013)
- Belize from the BBC News
- Key Development Forecasts for Belize from International Futures
- Hydromet.gov.bz – Official website of the Belize National Meteorological Service
- Bileez Kriol Wiki – A wiki in Belizean Creole about Belize
