டெகுசிகல்பா
Tegucigalpa | |
|---|---|
நகரம் | |
| டெகுசிகல்பா | |
| அடைபெயர்(கள்): டெகுஸ், டெபாஸ்,[1] வெள்ளி மலை (Cerro de Plata) | |
| நாடு | |
| துறை | ஃபிரான்சிஸ்கோ மொரசான் |
| நகராட்சி | மைய மாவட்டம் |
| உருவானது | 29 செப்டம்பர் 1578 |
| தலைநகர் | 30 அக்டோபர் 1880 |
| மைய மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது | 30 சனவரி 1937 |
| அரசு | |
| • நிர்வாகம் | மாநகராட்சி மன்றம் |
| • மாநகராட்சித் தலைவர் | ஜார்ஜ் அல்டானா |
| பரப்பளவு | |
| • நகரம் | 201.5 ச. கி.மீ km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
| ஏற்றம் | 990 மீ m (3,250 ft) |
| மக்கள்தொகை (2010 மதிப்பீடு) | |
| • நகரம் | 11,26,534 |
| • பெருநகர் | 13,24,000 |
| • | எசுப்பானியம்: டெகுசிகல்பன்ஸ் கோமயாகுவெலென்ஸ் |
| நேர வலயம் | ஒசநே-6 (நடு அமெரிக்கா) |
| இடக் குறியீடு | (நாடு) +504 (நகரம்) 2 [2] |
| இணையதளம் | டெகுசிகல்பா அரசு |
டெகுசிகல்பா (எசுப்பானிய ஒலிப்பு: [teɣusiˈɣalpa] முந்தைய பெயர்: எசுப்பானியம்: Tegucigalpa, Municipio del Distrito Central அல்லது Tegucigalpa, M.D.C. ஆங்கிலம்: Tegucigalpa, Municipality of the Central District) சுருக்கமாக டெகுஸ் என்பது ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம். டெகுசிகல்பாவின் இரட்டை நகரம் கோமயகுவேலா.[3]
1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட[4] டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது.[5] ஹொண்டுராஸ் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இரட்டை நகரங்களான டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் இணைத்து மைய மாவட்டம் எனப்பெயரிட்டு அதை ஹொண்டுராஸ் நாட்டின் நிரந்தர தலைநகரம் எனச் சட்டமியற்றப்பட்டது.[6][7]
புவியியலமைப்பு
[தொகு]ஹொண்டுராஸ் நாட்டின் தென்-மைய உயர்நிலப்பகுதியில் 3000 முதல் 4000 அடி உயரம் வரை உள்ள மலைத்தொடரில், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் அவற்றின் இடையில் வடக்கு தெற்காகச் செல்லும் சொலூதெகா ஆறு பிரிக்கின்றது.[8]
பருவநிலை
[தொகு]வெப்பமண்டலக் காலநிலையைக் கொண்டிருந்தாலும் உயரமான இடத்திலிருப்பதால் கடற்கரை மற்றும் கீழான பள்ளத்தாக்குகளை விடக்குறைவான ஈரத்தன்மையைக் கொண்டுள்ளது. நகரின் சராசரி வெப்பநிலை 19 °C (66 °F) முதல் 23 °C (73 °F) வரை உள்ளது.[9]
மே-சூனும், செப்டம்பர்-அக்டோபரும் நிறைய மழைபொழிவுள்ள திங்கள்களாகும்.
மக்கள் பரவல்
[தொகு]ஹொண்டுராஸ் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பெரும் மக்கள்தொகை கொண்ட நகரம் டெகுசிகல்பா. இந்நகரில் 12 முதல் 13 இலகர மக்கள் வாழ்வதாக 2011ம் ஆண்டு கணிக்கப்பட்டது.[10] 2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன.[11] இந்நகரின் பெரும்பாலானோர் கிறிஸ்தவ சமயத்தின் கத்தோலிக்க திருச்சபை மரபைப் பின்பற்றுபவர்கள்.
பொருளியல்
[தொகு]டெகுசிகல்பாவில் வணிகம், கட்டுமானம், சேவைத்துறை, துணி, சர்க்கரை, புகையிலை முதலியவை பெரும்பொருளீட்டு மூலங்களாகும்.[12]
இந்நகரின் தொழில்துறை உற்பத்திகளாக துணி, ஆடை, சர்க்கரை, ஒட்டுப்பலகை, காகிதம், மட்பாண்டம், சீமைக்காரை, கண்ணாடி, உலோகம், நெகிழி, வேதியியல் பொருட்கள், உருளிப்பட்டை, மின் கருவிகள் மற்றும் விவசாயப்பொறிகள் உள்ளன.[13] புறநகர் பகுதியில் இன்றும் வெள்ளி, ஈயம் மற்றும் துத்தநாகம் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.[14]
டெகுசிகல்பாவின் அகண்ட படம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Enjoy your Tegucigalpa Expat Experience". InterNations.org. 2011-05-22. Retrieved 2011-06-29.
- ↑ Hondutel (2009-10-14). "Honduras Country Codes". CallingCodes.org. Archived from the original on 2018-12-26. Retrieved 2010-06-29.
- ↑ Kiara Pacheco (2010-10-15). "Spanish:What is the capital of Honduras?". saberia.com. Retrieved 2011-06-29.
- ↑ Oscar Acosta (original) (2011-02-13). "About Tegucigalpa". Emporis Corporation. Archived from the original on 2012-11-02. Retrieved 2011-06-29.
- ↑ Anonymous at the Honduras National Library (2008-05-19). "Spanish:Tegucigalpa, a particular story-pg. 3" (PDF). Francisco Morazán National Pedagogic University. Archived from the original (PDF) on 2011-11-04. Retrieved 2011-06-29.
- ↑ Government of Honduras (2001-01-31). "1982 Constitution of Honduras-Title I, Chapter I, Article 8". Honduras.net. Retrieved 2011-06-29.
- ↑ Government of Honduras (2001-01-31). "1982 Constitution of Honduras-Title V, Chapter XI, Article 295". Honduras.net. Archived from the original on 2011-06-14. Retrieved 2011-06-29.
- ↑ OPTURH writer (2010-03-15). "Spanish: Tegucigalpa, a city with much history". Operadores de Turismo Receptivo de Honduras. Archived from the original on 2015-02-04. Retrieved 2011-06-29.
- ↑ "Spanish: Weather in Honduras". LosMejoresDestinos.com. 2007-06-10. Retrieved 2011-07-05.
- ↑ Inter-American Development Bank (2011-04-13). "Spanish: Support Study to the Sustainable Urban Mobility Plan (PMUS) for the Central District of Tegucigalpa and Comayagüela" (PDF). Economy and Finance Ministry-Government of Spain. Archived from the original (PDF) on 2011-10-07. Retrieved 2010-07-01.
- ↑ Lic. Elsa Lili Caballero (2009-06-02). "Spanish: Social Tendencies- Current Situation and Challenges" (PDF). National Autonomous University of Honduras (UNAH). Archived from the original (PDF) on 2012-03-27. Retrieved 2010-07-15.
- ↑ Comisiones Ciudadanas (2008-09-29). "Spanish: Plan Capital 450" (PDF). Central District Mayor's Office. Archived from the original (PDF) on 2012-03-27. Retrieved 2011-07-15.
- ↑ "Tegucigalpa-economy section". Encyclopædia Britannica. 2008-04-09. Retrieved 2011-07-15.
- ↑ "Spanish: Honduras' Mining Potential". Dirección Ejecutiva de Fomento a la Minería (DEFOMIN). 2011-02-26. Archived from the original on 2011-07-21. Retrieved 2011-07-15.