உள்ளடக்கத்துக்குச் செல்

தன்சானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தான்சானியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தன்சானியா ஐக்கியக் குடியரசு
United Republic of Tanzania
Jamhuri ya Muungano wa Tanzania
கொடி of தன்சானியாவின்
கொடி
சின்னம் of தன்சானியாவின்
சின்னம்
குறிக்கோள்: "Uhuru na Umoja"  (சுவாஹிலி)
"விடுதலையும் ஐக்கியமும்"
நாட்டுப்பண்: Mungu ibariki Afrika
"ஆபிரிக்காவைக் கடவுள் காப்பாராக"
தன்சானியாவின்அமைவிடம்
தலைநகரம்டொடோமா (சட்டரீதியாக)
தாருஸ்ஸலாம் (வர்த்தகத் தலைநகர்)
பெரிய நகர்தாருஸ்ஸலாம்
ஆட்சி மொழி(கள்)கிசுவாகிலி
மக்கள்தன்சானியர்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
சக்காயா மிரிசோ கிக்வேட்டே
• தலைமை அமைச்சர்
எட்வர்ட் லொவாசா
விடுதலை 
• தங்கனீக்கா
டிசம்பர் 9 1961
• சன்சிபார்
ஜனவரி 12 1964
• இணைப்பு
ஏப்ரல் 26 1964
பரப்பு
• மொத்தம்
945,087 km2 (364,900 sq mi) (31வது)
• நீர் (%)
6.2
மக்கள் தொகை
• நவம்பர் 2006 மதிப்பிடு
37,849,133 (32வது)
• 2002 கணக்கெடுப்பு
34,443,603
• அடர்த்தி
41/km2 (106.2/sq mi) (159வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$27.12 பில்லியன் (99வது)
• தலைவிகிதம்
$723 (178வது)
ஜினி (2000–01)34.6
மத்திமம்
மமேசு (2004) 0.430
Error: Invalid HDI value · 162வது
நாணயம்தன்சானிய ஷில்லிங்கு (TZS)
நேர வலயம்ஒ.அ.நே+3 (கிஆநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (அவதானிக்கப்படுவது இல்லை)
அழைப்புக்குறி255
இணையக் குறி.tz
தன்சானியாவின் மாநிலங்கள்
தன்சானியாவின் வரைபடம்
மக்கள் தொகை 2005

தன்சானியா (Tanzania, கிசுவாகிலி: Jamhuri ya Muungano wa Tanzania), கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை கிளிமஞ்சாரோ மலை.

தான்சானியாவின் மக்கள் தொகை 51.82 மில்லியன் (2014) [1] இம்மக்கள் பல்வேறு இன, மொழி, சமயக் குழுக்களாக உள்ளனர். தான்சானியாவானது ஜனாதிபதி அரசியலமைப்பு குடியரசாகும், 1996 ஆம் ஆண்டு முதல், அதன் அதிகாரபூர்வமான தலைநகராக டொடோமா, ஜனாதிபதி அலுவலகம், தேசிய சட்டமன்றம் மற்றும் சில அரசாங்க அமைச்சகங்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது.[2] தாருஸ்ஸலாம் நகரம், முன்பு தான்சானியாவின் தலைநகராக இருந்தது, இந்நகரில் பெரும்பாலான அரசாங்க அலுவலகங்களைத் தக்கவைத்துக்கொண்டு, நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும், முக்கிய துறைமுகமாகவும், முன்னணி வணிக மையமாகவும் உள்ளது.[3][4][5] தான்சானியா நாடு சாமா சாம்பியோ மப்புண்டூஸி (CCM) என்ற ஒற்றை கட்சியின் மேலாதிக்கத்தில் அதன் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இக்கட்சி உருவானதிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை, நாட்டில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பெரிய கட்சியாக இது மட்டுமே இருந்தது. இந்நிலை 1 ஜூலை 1992 இல் அரசியலமைப்புத் திருத்தங்களால் மாற்றப்பட்டது [6] மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளை உருவாக்கவும் அவற்றின் நடவடிக்கைகளை அனுமதித்தும் பல சட்டங்கள் தேசிய சட்டமன்றத்தால் இயற்றப்பட்டன. ஜனாதிபதி மற்றும் நாட்டின் தேசிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 2015 இல் நடைபெற்றது. தேர்தலில் CCM கட்சி சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 75% இடங்களைக் கைப்பற்றியது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மன் கிழக்கு ஆபிரிக்காவை உருவாக்கியபோது ஐரோப்பிய காலனித்துவமானது, முதன்முதலாக தான்சானியாவில் தொடங்கியது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரித்தானிய ஆட்சிக்கு வழிவகுத்தது. முதன்மை நிலப்பகுதி தங்கனிக்கா என்ற பெயரில் ஆளப்பட்டு வந்தது, கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் என்ற பெயரில் ஒரு தனியான காலனியாக ஆட்சி செய்யப்பட்டது. 1961 மற்றும் 1963 இல் இந்த காலனிகள் விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து, 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய தான்சானிய குடியரசு என்ற பெயரில் இணைந்தன. இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 இல் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது[3].

தான்சானியாவின் வடகிழக்குப் பகுதியில் மலைப்பகுதிகளும் அடர்ந்த காடுகளையும் கொண்டுள்ளது, இப்பகுதியில்தான் கிளிமஞ்சாரோ மலை அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவின் மூன்று பெரிய ஏரிகளின் ஒரு பகுதி தான்சானியாவுக்குள் உள்ளன. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியும், கண்டத்தின் ஆழமான ஏரியான, விக்டோரியா ஏரி வடக்கே உள்ளது, இந்த ஏரி, அதன் தனித்துவமான மீன் இன வகைக்காக அறியப்படுகிறது. கிழக்கு கடற்கரையானது வெப்பமும் ஈரப்பதமுமானது, இந்தக் கடற்கரை சன்சிபார் தீவுக்கான கடல்வழியாக உள்ளது. ருக்வாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலாம்போ அருவி ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய அருவியாகும் இது ஜாம்பியா எல்லையில் உள்ள தாங்கானிக்கா ஏரியின் தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது.[7] மெனாய் விரிகுடா பகுதியானது சான்சிபார் பகுதியின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாகும்.

தான்சானியாவில் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன, இது கிழக்கு ஆப்பிரிக்காவில் மொழியியல் ரீதியாக மிகவும் வேறுபட்ட நாடாக உள்ளது.[8] தான்சானியாவில் பேசப்படும் மொழிகள் அனைதுதம் நான்கு ஆப்பிரிக்க மொழி குடும்பங்களைச் சேர்ந்தவை அந்த மொழிக்குடும்பங்கள்: பண்டு, குஷிட்டிக், நீலோடிக், கோயிசான் ஆகும்.[8] சுவாஹிலியும், ஆங்கிலமும் தான்சானியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன.[8] பன்மொழிகள் மிகுந்த நாடான தான்சானியாவில், சுவாகிலி மொழி நாடாளுமன்ற விவாதங்களிலும், கீழ் நீதிமன்றங்களிலும், நடுத்தர அளவில் துவக்கப் பள்ளிகளில் பயிற்றுவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது; ஆங்கிலமானது வெளிநாட்டு வர்த்தகத்திற்கும், தூதரகங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும், இரண்டாம் நிலைக் கல்வி மற்றும் உயர் கல்வியிலும்,[8] பயன்படுத்தப்படுகிறது. எனினும் தான்சானியா அரசாங்கம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக நீட்டிகாமல் நிறுத்திவிட திட்டமிட்டுள்ளது.[9] நாட்டில் உள்ள பல இன குழுக்களை ஒன்றிணைக்கும் ஒரு வழிமுறையாக, சுவாகிலி மொழியின் பயன்பாட்டை ஜனாதிபதி நியேரேர் ஊக்குவித்தார்.[10] தான்சானியர்களில் சுமார் 10% சுவாகிலி மொழியை முதல் மொழியாக பேசுகின்றனர், மேலும் 90% வரையானவர்கள் இதை இரண்டாவது மொழியாக பேசுகின்றனர்.[8] பெரும்பாலான தான்சானியர்கள் சுவாகிலி மற்றும் ஒரு உள்ளூர் மொழியை பேசுகின்றனர்; தான்ஸானியாவின் பல கல்வி நிலையங்கள் மும்மொழி பாடங்களைக் கொண்டு உள்ளனது; இங்கு ஆங்கிலத்திலும் பேசுகிறனர்.[11][12][13] சுவாகிலி மொழியைப் பரவலாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவது, நாட்டில் உள்ள சிறிய மொழிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது.[8][14] பெரும்பாலும் நகர்ப்புறங்களில்,  இளம் குழந்தைகள் பெருமளவில் முதல் மொழியாக சுவாகிலி மொழியைப் பேசுகிறார்கள்.[15]

தான்சானியா-மலாவி உறவுகளில் நாட்டின் நேசா ( மலாவி ஏரி) எல்லையை ஒட்டியிருக்கும் எல்லை நிலப்பரப்பு குறித்த சிக்கலின் காரணமாக பதட்டமாகி விட்டன. இச்சிக்கலைத் தீர்ப்பது தொடர்பாக 2014 மார்ச்சில்நடைபெற்ற முயற்சி தோல்வியுற்றது.[16][17] சர்வதேச நீதிமன்றம் (ஐ.சி.ஜே.) இந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யலாம் என 2013-ல் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.[18] மலாவி, சர்வதேச நீதிமன்றத்தின் இன் கட்டாய அதிகார வரம்பை ஏற்றுள்ளது ஆனால் தான்சானியா ஏற்க மறுத்துவிட்டது.[19]

பெயராய்வு

[தொகு]

"தான்சானியா" என்ற பெயரானது, இரு நாடுகளின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டது, இது தங்கனீக்கா மற்றும் சான்சிபார் நாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்து புதிய நாடு உருவானபோது, இரு நாட்டுப் பெயர்களையும் ஒருங்கிணைத்து புதுச்சொல்லாக பெயர் வைக்கப்பட்டது.[20] "தங்கனீக்கா" என்ற பெயர் சுவாகிலி மொழிச் சொற்கலான தங்க (கடற் பயணம்) மற்றும் நிக்கா ("மக்களற்ற வெற்று", "வனப்பகுதி") என்ற சொற்களில் இருந்து உருவானது, இது "வனாந்தரத்தில் புறப்பட்டது" என்ற சொற்றொடரை உருவாக்கியது. இது சில சமயம் தங்கனீக்கா ஏரியைக் குறிக்கின்றது.[21] சான்சிபார் என்ற பெயர் "ஜேன்ஜி" என்பதிலிருந்து வந்தது, இது உள்ளூர் மக்களைக் குறிப்பிடும் பெயர் ("கருப்பு" என்று பொருள் கூறப்படுகிறது)   மற்றும் அரபிச் சொல்லான "பார்" (இதற்கு கடற்கரை என்று பொருள்)[22] ஆகியவற்றின் கூட்டுச் சொலாலாகும்.

காலநிலை

[தொகு]

தான்சானியாவுக்குள் தட்பவெப்பமானது மிகவும் மாறுபடுகிறது. மலைப்பகுதிகளில், 10 மற்றும் 20 °C (50 மற்றும் 68 °F) வெப்பநிலையானது முறையே குளிர் மற்றும் கோடைப் பருவங்களில் இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் வெப்பநிலையானது 20 °C (68 °F) க்கும் குறைவாகவே இருக்கும். கோடைக் காலம் நவம்பர் மற்றும் பிப்ரவரி (25-31 °C அல்லது 77.0-87.8 °F) மாதங்களிலும், மே மற்றும் ஆகஸ்ட் (15-20 °C அல்லது 59-68 °F) க்கும் இடையிலான காலம் குளிர் காலமாகவும் இருக்கும். வருடாந்திர வெப்பநிலை 20 °C (68.0 °F) ஆகும்.  உயர்ந்த மலைப்பகுதிகளில் காலநிலையானது குளிர்ச்சியாக உள்ளது.

தான்சானியாவில் இரண்டு முதன்மையான மழைக் காலங்கள் உள்ளன: ஒன்று (அக்டோபர்-ஏப்ரல்) காலகட்டத்திலும் ஒரு பகுதியாகவும், மற்றொன்று இரு முறைகளாக (அக்டோபர்-டிசம்பர் மற்றும் மார்ச்-மே) காலகட்டத்தில் பொழிகிறது.[23]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World Bank Tanzania Country Page". World Bank. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  2. Aloysius C. Mosha. "The planning of the new capital of Tanzania: Dodoma, an unfulfilled dream". University of Botswana. http://www.etsav.upc.es/personals/iphs2004/pdf/148_p.pdf. பார்த்த நாள்: 13 March 2013. 
  3. 3.0 3.1 ""சிஐஏ உலகத் தரவு நூல் - தான்சானியா"". Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2007-12-08.
  4. "The Tanzania National Website: Country Profile". Tanzania.go.tz. Archived from the original on 25 November 2013. பார்க்கப்பட்ட நாள் 1 May 2010.
  5. "Dar es Salaam Port". Tanzaniaports.com. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Constitution of the United Republic of Tanzania" (PDF). Judiciary of Tanzania. Archived from the original (PDF) on 17 December 2010. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  7. "Kalambo Falls". Encyclopædia Britannica.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 Ulrich Ammon; Norbert Dittmar; Klaus J. Mattheier (2006). Sociolinguistics: An International Handbook of the Science of Language and Society. Walter de Gruyter. pp. 1967–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-018418-1.
  9. "Tanzania Ditches English In Education Overhaul Plan". AFK Insider. 17 February 2015. http://afkinsider.com/88774/tanzania-ditches-english-education-overhaul-plan/. பார்த்த நாள்: 23 February 2015. 
  10. Joshua A. Fishman Distinguished University Research Professor of Social Sciences Yeshiva University (Emeritus) (2001). Handbook of Language & Ethnic Identity. Oxford University Press. pp. 361–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-976139-5.
  11. Quintin Winks (2011). Tanzania – Culture Smart!: The Essential Guide to Customs & Culture. Kuperard. pp. 145–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85733-625-2.
  12. Colin Baker; Sylvia Prys Jones (1998). Encyclopedia of Bilingualism and Bilingual Education. Multilingual Matters. pp. 367–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85359-362-8.
  13. François Grosjean (1982). Life with Two Languages: An Introduction to Bilingualism. Harvard University Press. pp. 8–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-53092-8.
  14. Matthias Brenzinger (1992). Language Death: Factual and Theoretical Explorations with Special Reference to East Africa. Walter de Gruyter. pp. 86–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-013404-9.
  15. Concise Encyclopedia of Languages of the World. Elsevier. 2010. pp. 1026–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-087775-4.
  16. Joseph Lake (2013) "Economy" in Africa South of the Sahara, edited by Europa Publications and Iain Frame, Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-659-8
  17. "Tanzania: After Two Days, No Agreement Over Lake Niassa". AllAfrica.com. 22 March 2014. http://allafrica.com/stories/201403230009.html. 
  18. "Malawi, Tanzania agree on ICJ over lake dispute | TVC NEWS". tvcnews.tv.
  19. "Declarations Recognizing the Jurisdiction of the Court as Compulsory | International Court of Justice". icj-cij.org.
  20. Harper, Douglas. "tanzania". Online Etymology Dictionary.
  21. John Knouse: A Political World Gazetteer: Africa website accessed 1 May 2007.
  22. Harper, Douglas. "zanzibar". Online Etymology Dictionary.
  23. Zorita, Eduardo; Tilya, Faustine F. (12 February 2002). "Rainfall variability in Northern Tanzania in the March–May season (long rains) and its links to large-scale climate forcing" (PDF). Climate Research (Inter-Research Science Center) 20: 31–40. doi:10.3354/cr020031. http://www.int-res.com/articles/cr2002/20/c020p031.pdf. பார்த்த நாள்: 16 October 2014. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சானியா&oldid=3925189" இலிருந்து மீள்விக்கப்பட்டது