உள்ளடக்கத்துக்குச் செல்

யெமன்

ஆள்கூறுகள்: 15°20′54″N 44°12′23″E / 15.34833°N 44.20639°E / 15.34833; 44.20639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யெமன் குடியரசு
Republic of Yemen
கொடி of யெமன்
கொடி
சின்னம் of யெமன்
சின்னம்
குறிக்கோள்: ٱللَّهُ، ٱلْوَطَنُ، ٱلثَوْرَةُ، ٱلْوَحْدَةُ
"கடவுள், தாய்நாடு, புரட்சி, ஒற்றுமை"
நாட்டுப்பண்: الجمهورية المتحدة
"ஐக்கிய குடியரசு"
தலைநகரம்சனா[a]
15°20′54″N 44°12′23″E / 15.34833°N 44.20639°E / 15.34833; 44.20639
நிர்வாக மையம்ஏடன்[b]
பெரிய நகர்தலைநகர்
அதிகாரபூர்வ மொழியும்
தேசிய மொழியும்
அரபு[2]
இனக் குழுகள்
(2000)[3]
  • 92.8% அராபியர்
  • 3.7% சோமாலிகள்
  • 1.1% ஆப்பிரிக்க-அரபுக்கள்
  • 1.0% இந்தியர்-பாக்கித்தானியர்
  • 1.4% ஏனையோர்
சமயம்
(2020)[4]
மக்கள்யெமனி
அரசாங்கம்சனாதிபதி தலைமைத்துவப் பேரவையால் அதன் தற்காலிகத் தலைநகராக உரிமை கோரப்பட்டது.
• சனாதிபதி தலைமைத்துவப் பேரவையின் தலைவர்
ரசாத் அல்-அலிமி
• பிரதமர்
சாயியா அல்-சிந்தானி
சட்டமன்றம்நாடாளுமன்றம்
சூரா பேரவை
பிரதிநிதிகள் சபை
தோற்றம்
• இணைப்பு
22 மே 1990
• நடப்பு அரசமைப்பு
16 மே 1991
பரப்பு
• மொத்தம்
455,503[5] km2 (175,871 sq mi) (54-ஆவது)
• நீர் (%)
negligible
மக்கள் தொகை
• 2023 மதிப்பீடு
Neutral increase 32,684,503[6] (2023 est.) (48-ஆவது)
• அடர்த்தி
71.8/km2 (186.0/sq mi) (143-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2025 மதிப்பீடு
• மொத்தம்
Increase $69.960 பில்.[7] (117-ஆவது)
• தலைவிகிதம்
Increase $1,670[8] (183-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2025 மதிப்பீடு
• மொத்தம்
$17.400 பில்.[7] (135-ஆவது)
• தலைவிகிதம்
$416[8] (190-ஆவது)
ஜினி (2014)36.7[9]
மத்திமம்
மமேசு (2023)Increase 0.470[10]
தாழ் · 184-ஆவது
நாணயம்யெமனி ரியால் (YER)
நேர வலயம்ஒ.அ.நே+3 (ஒசநே+03:00)
வாகனம் செலுத்தல்வலம்[11]
அழைப்புக்குறி+967
ஐ.எசு.ஓ 3166 குறியீடுYE
இணையக் குறி.ye, اليمن.

யெமன் அல்லது ஏமன் (Yemen, /ˈjɛmən/ (கேட்க); ٱلْيَمَنْ) அதிகாரபூர்வமாக யெமன் குடியரசு (Republic of Yemen) என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு.[12] சோக்கோட்ரா தீவுக்கூட்டம் உட்பட, ஏமன் பிரதான நிலப்பகுதி தெற்கு அரேபியாவில் அமைந்துள்ளது; இதன் வடக்கே சவூதி அரேபியா, வடகிழக்கில் ஓமான், கிழக்கே அரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதி, தெற்கே ஏடன் வளைகுடா, மேற்கில் செங்கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு, ஆப்பிரிக்காவின் கொம்பு முழுவதும் சீபூத்தீ, எரித்திரியா, சோமாலியா ஆகியவற்றுடண் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. தோராயமாக 455,503 சதுர கிலோமீட்டர் (175,871 சதுர மைல்கள்),[5] தோராயமாக 2,000 கிலோமீட்டர் (1,200 மைல்கள்) கடற்கரையுடன், ஏமன் அரபுத் தீபகற்பத்தில் பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடாகும்.[13] மக்கள்தொகை அடிப்படையில் இது மிகப்பெரிய நாடாகும்.

ஏமனின் அரசியலமைப்புத் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் சனா ஆகும். ஏமனின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 34.7 மில்லியன், பெரும்பாலும் அரபு முசுலிம்கள், இது சவூதி அரேபியாவை விட அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[14] இது அரபு நாடுகள் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் அவை, கூட்டுசேரா இயக்கம், இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.

இதன் புவியியல் அமைவிடம் காரணமாக, ஏமன் 7,000 ஆண்டுகளுக்கும் மேலாக பல நாகரிகங்களின் நடுவில் உள்ளது. சபேயர்கள் நவீன எத்தியோப்பியா, எரித்திரியாவின் சில பகுதிகளைப் பாதித்த ஒரு செழிப்பான வணிக இராச்சியத்தை உருவாக்கினர்.[15][16][17] அதன் பிறகு கி.பி. 275-இல் இம்யாரைட் இராச்சியம் உருவாக்கப்பட்டது, இது ஏமனின் இன்றைய பிரதேசத்தின் பெரும்பகுதியைக் கொண்டது, யூத சமயத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது.[18] கிபி 4-ஆம் நூற்றாண்டில் கிறித்தவம் பரவியது, அதைத் தொடர்ந்து 7-ஆம் நூற்றாண்டில் இசுலாம் வேகமாகப் பரவியது. இசுலாத்திற்கு மாறியதிலிருந்து, ஏமன் இசுலாமியக் கற்றலின் மையமாக மாறியது, அத்துடன் தொடக்கக்கால இசுலாமிய வெற்றிகளில் ஏமன் படைகள் முக்கிய பங்கு வகித்தன.[19] ஏமனின் கட்டடக்கலைகளில் பெரும்பாலானவை நவீன காலம் வரை நீடித்தன. பல நூற்றாண்டுகளாக, இது மோச்சா துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட காப்பியின் முதன்மை உற்பத்தியாளராக இருந்தது. 9-ஆம் முதல் 16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பல்வேறு வம்சங்கள் தோன்றின.[20] 19-ஆம் நூற்றாண்டில், நாடு உதுமானிய, பிரித்தானியப் பேரரசுகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ஏமன் இராச்சியம் நிறுவப்பட்டது, இது 1962-இல் உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஏமன் அரபு குடியரசு (வடக்கு ஏமன்) ஆனது. 1967-இல், ஏமன் மக்கள் சனநாயகக் குடியரசு (தெற்கு ஏமன்) பிரித்தானிய ஏடன் காப்பரசிடம் இருந்து விடுதலை பெற்றது. மத்திய கிழக்கு உட்பட்ட அரபு உலகில் முதலாவது ஒரே கம்யூனிச நாடாக தெற்கு ஏமன் மாறியது. 1990-இல், இரண்டு ஏமன் நாடுகளும் ஒன்றிணைந்து இன்றைய யெமன் குடியரசை உருவாக்கின, அலி அப்துல்லா சாலே 2012-இல் அரபு வசந்தத்தைத் தொடர்ந்து பதவி விலகும் வரை முதல் அரசுத்தலைவராகப் பணியாற்றினார்.[21][22]

ஏமன் உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகும்,[23] வளம்குன்றா வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க தடைகளை இது எதிர்கொள்கிறது,[24] மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள ஏழ்மையான நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.[25] 2019-ஆம் ஆண்டில், ஏமனில் மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது, இது சுமார் 24 மில்லியன் தனிநபர்கள் அல்லது அதன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 75% ஆகும்.[26] 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, பலவீனமான நாடுகள் குறியீட்டில் ஏமன் ஆறாவது இடத்தில் உள்ளது.[27] 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளாவிய பசிக் குறியீட்டில் இரண்டாவது மிக மோசமான இடத்தைப் பிடித்துள்ளது, இது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசால் மட்டுமே முந்தியுள்ளது.[27] 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அமைதிக் குறியீட்டால் ஏமன் உலகின் மிகக் குறைந்த அமைதியான நாடாகக் கருதப்படுகிறது.[28] கூடுதலாக, 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இது 184-ஆவது இடத்தில் உள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஏமனும் ஒன்றாகும், மேலும் அதன் விளைவுகளைக் கையாள மிகவும் தயாராக இல்லாத நாடுகளில் ஒன்றாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

5,27,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 109 மக்கள் வாழ்கின்றனர். 2004-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யேமன் நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர்.

பொருளாதாரம்

[தொகு]

நாட்டில் பாறை எண்ணெய் உற்பத்தி அருகி விட்ட காரணத்தினால் அரேபிய நாடுகளில் யேமன் வறுமைமிக்க நாடாக உள்ளது.

உள்நாட்டுப் போர்

[தொகு]

ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போரில் 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போர் காரணமாக யேமனின் தலைநகர் சனாவிலிருந்து ஏடன் துறைமுக நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.[29]

குறிப்புகள்

[தொகு]
  1. அரசமைப்புத் தலைநகரம். 2014 முதல் நடை முறைப்படி ஊத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
  2. சனாதிபதி தலைமைத்துவப் பேரவையால் அதன் தற்காலிகத் தலைநகராக உரிமை கோரப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Al-Sakani, Ali (19 April 2022). "Yemen inaugurates new presidential council". அல் ஜசீரா இம் மூலத்தில் இருந்து 8 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220508025532/https://www.aljazeera.com/news/2022/4/19/yemen-inaugurates-new-presidential-council. "Yemen's Prime Minister Maeen Abdulmalik Saeed, along with other senior government officials, had also arrived in Aden, which serves as Yemen's temporary capital, before the swearing-in ceremony." 
  2. "Yemen's Constitution of 1991 with Amendments through 2015" (PDF). Constitute Project. Archived (PDF) from the original on 15 April 2021. Retrieved 31 August 2020.
  3. "Yemen – Flora, Fauna, Ecosystems". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Archived from the original on 5 February 2024. Retrieved 8 September 2023.
  4. "Yemen". Central Intelligence Agency. CIA World Factbook. 6 December 2013. Archived from the original on 8 May 2021. Retrieved 24 January 2021.
  5. 5.0 5.1 "THE NATIONAL STRATEGY FOR ENVIRONMENTAL SUSTAINABILITY 2005–2015 AND NATIONAL ENVIRONMENTAL ACTION PLAN 2005–2010" (PDF). Republic of Yemen Ministry of Water and Environment Environment Protection Agency. p. 6. Archived (PDF) from the original on 30 August 2025. Retrieved 3 December 2024. The area of Yemen is 455,503 sq. km. most of which is rocky land
  6. "Annual Statistical Health Report 2023" (PDF). www.moh.gov.ye. Yemen Ministry of Health. August 2024. p. 11. Retrieved 12 July 2025.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. 7.0 7.1 "World Economic Outlook Database, April 2025". IMF.
  8. 8.0 8.1 "World Economic Outlook Database, April 2025".
  9. "GINI index (World Bank estimate)". உலக வங்கிக் குழுமம். Archived from the original on 16 December 2020. Retrieved 15 October 2017.
  10. "Human Development Report 2025" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Archived (PDF) from the original on 6 May 2025. Retrieved 13 May 2025.
  11. "Yemen". International News Safety Institute. Archived from the original on 5 May 2010. Retrieved 14 October 2009.
  12. "Yemen | History, Map, Flag, Population, Capital, & Facts | Britannica". www.britannica.com. Archived from the original on 10 May 2021. Retrieved 16 April 2023.
  13. McLaughlin, Daniel (1 February 2008). Yemen. Bradt Travel Guides. p. 3. ISBN 978-1-84162-212-5. Archived from the original on 2 July 2020. Retrieved 11 March 2017.
  14. "Yemen Population (2025) - Worldometer". Archived from the original on 11 May 2023. Retrieved 12 November 2023.
  15. Burrowes, Robert D. (2010). Historical Dictionary of Yemen. Rowman & Littlefield. p. 319. ISBN 978-0-8108-5528-1.
  16. St. John Simpson (2002). Queen of Sheba: treasures from ancient Yemen. பிரித்தானிய அருங்காட்சியகம். p. 8. ISBN 0-7141-1151-1.
  17. "The kingdoms of ancient South Arabia". பிரித்தானிய அருங்காட்சியகம். Archived from the original on 4 May 2015. Retrieved 22 February 2013.
  18. Yaakov Kleiman (2004). DNA & Tradition: The Genetic Link to the Ancient Hebrews. Devora Publishing. p. 70. ISBN 1-930143-89-3.
  19. Marta Colburn (2002). The Republic of Yemen: Development Challenges in the 21st Century. CIIR. p. 13. ISBN 1-85287-249-7.
  20. Karl R. DeRouen; Uk Heo (2007). Civil Wars of the World: Major Conflicts Since World War II, Volume 1. ABC-CLIO. p. 810. ISBN 978-1-85109-919-1.
  21. Laura Etheredge (2011). Saudi Arabia and Yemen. The Rosen Publishing Group. p. 137. ISBN 978-1-61530-335-9.
  22. Burrowes, Robert. "Why Most Yemenis Should Despise Ex-president Ali Abdullah Saleh". Yemen Times. Archived from the original on 16 June 2017. Retrieved 20 August 2015.
  23. "LDCs at a Glance | Department of Economic and Social Affairs". Economic Analysis & Policy Division | Dept of Economic & Social Affairs | United Nations. 25 May 2008. Archived from the original on 29 March 2022. Retrieved 29 July 2020.
  24. "Least Developed Countries (LDCs) | Department of Economic and Social Affairs". Economic Analysis & Policy Division | Dept of Economic & Social Affairs | United Nations. 23 September 2010. Archived from the original on 20 June 2019. Retrieved 29 July 2020.
  25. "Overview". Archived from the original on 26 April 2024. Retrieved 2 February 2023.
  26. "Yemen: 2019 Humanitarian Needs Overview [EN/AR]". ReliefWeb. United Nations Office for the Coordination of Humanitarian Affairs (OCHA). 14 February 2019. Archived from the original on 17 June 2019. Retrieved 17 June 2019.
  27. 27.0 27.1 "Global Data | Fragile States Index". fragilestatesindex.org. Archived from the original on 15 July 2019. Retrieved 29 July 2020.
  28. "2024 Global Peace Index" (PDF). Institute for Economics & Peace. Institute for Economics & Peace. June 2024. Archived (PDF) from the original on 19 August 2024. Retrieved 2 July 2024.
  29. யேமன் -- ஐந்து முக்கிய தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெமன்&oldid=4445820" இலிருந்து மீள்விக்கப்பட்டது