பூசணி
பூசணி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | Cucurbitales |
குடும்பம்: | வெள்ளரிக் குடும்பம் |
பேரினம்: | Cucurbita spp. L. |
இனங்கள் | |
பூசணி, (ஒலிப்பு (உதவி·தகவல்), பேரினம் : Cucurbita spp.) சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு. இதன் தாயகம் வட அமெரிக்கா[1] ஆகும்.
- சொற்பொருள்
பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
- வேறுபாடு
- மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். அதன் பொருள் பறை போல் உள்ள காய் என்பது. தமிழகத்தின் சில பகுதிகளில் அரசாணிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது
- வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.[சான்று தேவை]
பயன்கள்[தொகு]
- பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பூசணி விதைகளும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
- தமிழக இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து உண்பர்.
- தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை கண் திருட்டியிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்குப் பின், சாலைகளில் போட்டு உடைப்பர். அதனால் பல சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு சட்டம் இயற்றியுள்ளது.
- அமெரிக்கா போன்ற சில நாடுகளில், பூசணியைக் கலைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். (எ.கா.) ஆலோவின்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Robinson, RW, Decker-Walters, DS (1997). "Cucurbits". Cab International. ISBN 0-85199-133-5. 2015-09-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-14 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: uses authors parameter (link)
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்சனரியில் பூசணி என்னும் சொல்லைப் பார்க்கவும். |