பாலக்கோடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலக்கோடு வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாலக்கோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டம் பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஅள்ளி என 3 உள்வட்டங்கள் கொண்டது.

இவ்வட்டத்தில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

பரப்பளவு[தொகு]

பாலக்கோடு வட்டத்தின் பரப்பளவு சுமார் 73,267 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 16 சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,46,489 மக்கள் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை". பார்த்த நாள் 20 சூன் 2016.
  3. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". பார்த்த நாள் 22 ஆகத்து 2014.
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - பாலக்கோடு வட்டம்". பார்த்த நாள் 22 ஆகத்து 2014.
  5. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்த்த நாள் 22 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்கோடு_வட்டம்&oldid=2729896" இருந்து மீள்விக்கப்பட்டது