பகுதி
Appearance
பகுதி என்பது தனிச்சொல் நிலையில் இருக்கும் பகுபதத்தின் பகாபத நிலை. [1] இதனை மேலும் பகுத்தால் பயனில்லாமல் போகும். [2]
- பண்புப் பகுதிகள்
- செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை முதலானவையும் அவற்றின் எதிர்ச்சொற்களும் பண்பை உணர்த்தும் பகுதிகள். [3]
- வினைப் பகுதி ஈறுகள்
- நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என 23 ஈற்றெழுத்துக்களில் முடியும் பல ஏவல்வினைப் பகாப்பதங்கள். [4] செய், செய்வி, செய்விப்பி என்னும் ஏவல் வகைகளும் அவை [5]
பகுதி எப்பொழுதும் கட்டளையாகவே (ஏவலாகவே) வரும். (எ.கா): பாடினான். இதைப் பிரித்தால் 'பாடு + இன் + ஆன்' என வரும். இதில் "பாடு" என்பதே பகுதி. வினைச்சொற்களில் பகுதியே தொழிலை உணர்த்தும். பகுதியை முதனிலை என்றும் அழைப்பர்.