பென்னாகரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பென்னாகரம் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பென்னாகரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 39 வருவாய் கிராமங்கள் உள்ளன.இவ்வட்டம் பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, சுஞ்சல்நாதம் என 3 உள்வட்டங்கள் கொண்டது.

இவ்வட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

பரப்பளவு[தொகு]

பென்னாகரம் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,13,027 எக்டேர்களாகும்.[2] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,34,853 மக்கள் பென்னாகரம் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[4] விட குறைவானது. பென்னாகரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". பார்த்த நாள் 22 ஆகத்து 2014.
  3. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - பென்னாகரம் வட்டம்". பார்த்த நாள் 22 ஆகத்து 2014.
  4. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்த்த நாள் 22 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னாகரம்_வட்டம்&oldid=2729898" இருந்து மீள்விக்கப்பட்டது