மழநாடு
மழநாடு மழவர் நாடு | |
---|---|
மண்டலம் | |
![]() சேலம், மண்டலத்தின் பெரிய மாநகரம். | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
பிரிந்தியம் | மழநாடு |
உள்ளடங்கிய மாவட்டங்கள் | சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி |
பெரிய நகரம் | |
அரசு | |
• நிர்வாகம் | தமிழ்நாடு அரசு, இந்திய அரசு |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 8,595,309 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 620-636xxx |
வாகனப் பதிவு | TN 24, TN 27, TN 28, TN 29, TN 30,TN 34, TN 45, TN 46, TN 48, TN 52, TN 54, TN 61, TN 70, TN 77, TN 88, TN 90, TN 93 |
மழவர் நாடு அல்லது மழநாடு (Mazhanadu) என்பது தொண்டை நாடு மற்றும் கர்நாடகம் ஆகியவற்றின் இடையே உள்ள நிலப் பகுதியை குறிப்பிடப்படுவதாகும். மழநாடு சேர மரபினரின் கிளைக் குடியினரால் ஆளப்பட்ட பகுதியாகும். மழநாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கும்.[2] பண்டைய சங்க காலத்தில் இப்பகுதியை மழவர் மன்னன் கொல்லி மழவன் ஆண்டான். பிரபல சங்க கால பெண் புலவரான ஔவையார் . தகடூரைச் சேர்ந்த அதியமான் நெடுமான் அஞ்சி, கொல்லிமலை வல்வில் ஓரி போன்ற மழவர் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். மழநாடு மேல்மழநாடு (மேற்கு மழநாடு), [3] [4] கீழ்மழநாடு (கிழக்கு மழநாடு) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கீழ்மழநாடு ஒரு காலத்தில் கொல்லி மழவனாலும் அவரது மரபினராலும் ஆளப்பட்டது. கீழ்மழநாடு அதன் நீர் வளத்திற்காக நன்கு அறியப்பட்டதாக ஒரு தமிழ்க் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [5]
மழநாடு மண்டலம்[தொகு]
தமிழ்நாட்டில் 'மழநாடு' பகுதியைக் கொண்ட மாவட்டங்களின் புவியியல் மற்றும் மக்கள்தொகை போன்றவை கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
வ.எண். | மாவட்டங்கள் | தலைமையகம் | நிறுவப்பட்டது | பகுதி (கிமீ²) | மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) | மக்கள் தொகை அடர்த்தி (/கிமீ²) |
---|---|---|---|---|---|---|
1 | சேலம் | சேலம் | நவம்பர் 1, 1956 | 5,205 | 3,482,056 [6] | 669 |
2 | தருமபுரி | தருமபுரி | 2 அக்டோபர் 1965 | 4,497.77 | 1,506,843 [7] | 335 |
3 | நாமக்கல் | நாமக்கல் | 1 ஜனவரி 1997 | 3363 | 1,726,601 [8] | 513 |
4 | கிருஷ்ணகிரி | கிருஷ்ணகிரி | 9 பிப்ரவரி 2004 | 5,143 | 1,879,809 [9] | 366 |
குறிப்புகள்[தொகு]
- ↑ "Census of India". Government of India. 2001 இம் மூலத்தில் இருந்து 12 May 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5XlqpiwgC?url=http://www.censusindia.gov.in/.
- ↑ "பண்பாடு வளர்க்கும் பழங்குடிகளின் பூமி: சங்ககாலத்து ‘மழநாடு’ தான் அரியூர் என்னும் நம்ம அரூர்" இம் மூலத்தில் இருந்து 2021-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211105152322/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=636011.
- ↑ "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்". http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12&Song_idField=12140.
- ↑ "Periyapuranam - Tamil and Vedas". https://tamilandvedas.com/tag/periyapuranam/.
- ↑ ":: TVU ::". http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1194.
- ↑ "Census Info 2011 Final population totals - Salem district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=684109.
- ↑ "Census Info 2011 Final population totals - Dharmapuri district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=703298.
- ↑ "Census Info 2011 Final population totals - Namakkal district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=686727.
- ↑ "Census Info 2011 Final population totals - Krishnagiri district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013 இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924150509/http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=703971.