பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாப்பிரெட்டிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 98 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, கடத்தூர், பொம்மிடி என உள்வட்டங்கள் கொண்டது.

இவ்வட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

பரப்பளவு[தொகு]

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தின் பரப்பளவு சுமார் 74,678 எக்டேர்களாகும்.[2] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் பதினேழு சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,43,445 மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[4] விட குறைவானது. பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". 2011-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". 14 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". 14 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.