கடுகு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
mustard seed, yellow 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆற்றல் 470 kcal 1960 kJ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா அரசின் வயதுக்கு வந்தவருக்கான, உட்கொள்ளல் பரிந்துரை . மூலத்தரவு: USDA Nutrient database |
கடுகு (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது கடுகுத் தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும்.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.
கடுகுக்கு தன் சுவை கிடையாது . குளிர்ந்த நீருடன் சேரும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட, மைரோஸினேஸ் எனப்படும் நொதியம்(enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். இந்திய சமையலில் சூடான எண்ணெயில் பொரித்து, அதன் மேல் தோலியை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ அல்லது அரைத்த விழுதாகவோ முன்பாகவே தயார் செய்யப்பட்டதையே உணவில் பயன்படுத்துகிறார்கள்.
கொண்டுள்ள சத்துக்கள்[தொகு]
கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.
சமையலில் கடுகு[தொகு]
கடுகு தாளிதம் செய்வதற்கு ஒரு முக்கிய பொருள். தாளித்தலின் போது எண்ணெயில் முதலிடப்படும் பொருள் இதுவாகும். இது நல்ல சுவைதரும்.கடுகு வாசனையும் தரும்.