அனைத்துலக அலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருந்தியலில் அனைத்துலக அலகு (அஅ, IU) என்பது ஒரு சாரப்பொருளின் எண்ணிக்கையை அளக்கப்பயன்படுத்தப்படும் அளவையலகு ஆகும். உயிர்ச்சத்துகள், வளரூக்கிகள், சில மருந்துப்பொருட்கள், நோய்த்தடுப்பூசிகள் போன்றனவற்றை அளக்க அனைத்துலக அலகு முறை பயன்படுத்தப்படுகின்றது. ஒரு அனைத்துலக அலகு எனக்குறிக்கப்படும் இரு வெவ்வேறு பதார்த்தங்களின் எடையோ அல்லது கொள்ளளவோ சமமாக இருப்பதில்லை. இது குறிப்பிட்ட சாரப்பொருளின் உயிரியற் செயற்பாட்டு விளைவை மையமாகக் கொண்டு அளக்கப்படுகின்றது. உயிரியல் அல்லது மருந்தியல் செயற்பாட்டு விளைவே ஒரு அனைத்துலக அலகில் அக்குறிப்பிட்ட சாரப்பொருளின் எடை எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு அனைத்துலக அலகு உயிர்ச்சத்து ஏயின் எடை 0,3 µg ரெட்டினோலுக்கு சமமாகும்; ஒரு அனைத்துலக அலகு உயிர்ச்சத்து டியின் எடை 0,025 µg கோளிகல்சிபெரோலுக்குச் சமமாகும்.[1]

ஒரு அனைத்துலக அலகின் எடை சமன்பாடு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineravita. "The international unit for vitamin content - IU" இம் மூலத்தில் இருந்து 2014-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140901020815/http://mineravita.com/en/vitamin_international_unit.html. பார்த்த நாள்: 25 சனவரி 2015. 
  2. "Dietary Supplements Ingredient Database" இம் மூலத்தில் இருந்து 2016-09-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160922024318/http://dietarysupplementdatabase.usda.nih.gov/ingredient_calculator/help.php#q2. 
  3. Dietary Reference Intakes Tables: Unit Conversion Factors
  4. "Dietary Supplement Fact Sheet: Vitamin E". http://ods.od.nih.gov/factsheets/VitaminE-HealthProfessional/. பார்த்த நாள்: 6 October 2012. 
  5. "Dietary Reference Intakes Tables". http://www.hc-sc.gc.ca/fn-an/nutrition/reference/table/index-eng.php. பார்த்த நாள்: 6 October 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்துலக_அலகு&oldid=3542282" இருந்து மீள்விக்கப்பட்டது