கனிமம் (ஊட்டச்சத்து)
ஊட்டச்சத்து சார்ந்த சூழலில், கனிமம் (mineral) என்பது ஒரு தனிமம் ஆகும். சில "கனிமங்கள்" உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை ஆகும், ஆனால் பெரும்பாலானவை அவ்வாறல்ல.[1][2] அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நான்கு குழுக்களில் கனிமங்களும் ஒன்றாகும். மற்றவை உயிர்ச்சத்துகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஆகியனவாகும்.[3]
மனித உடலில் உள்ள ஐந்து முக்கிய கனிமங்கள் கல்சியம், பாசுபரசு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் ஆகியனவாகும்.[1] மீதமுள்ள தனிமங்கள் இம்மியத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இம்மியத் தனிமங்கள் இரும்பு, குளோரின், கோபால்ட்டு, செம்பு, துத்தநாகம், மாங்கனீசு, மாலிப்டினம், அயோடின், செலீனியம் ஆகியனவாகும்.[4] மனித உடலில் எடை அடிப்படையில் 96% கரிமம், ஐதரசன், ஆக்சிசன், நைட்ரசன் ஆகிய நான்கு தனிமங்கள் (CHON) உள்ளன. இத் தனிமங்கள் பொதுவாக ஊட்டச்சத்துக் கனிமங்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை.
தாவரங்கள் பொதுவாக மண்ணில் இருந்து கனிம ஊட்டச்சத்தைப் பெறுகின்றன.[5] இந்தத் தாவரங்கள் தாவர உண்ணி விலங்குகளால் உட்கொள்ளப்படுகின்ற போது இந்த ஊட்டச்சத்தானது உணவுச் சங்கிலி ஊடாக அந்த விலங்குகளை சென்றடைகின்றது. ஊனுண்ணிகள் இந்த விலங்குகளை உட்கொள்வதிலிருந்து இந்தத் தாதுக்களைப் பெறுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Berdanier, Carolyn D.; Dwyer, Johanna T.; Heber, David (2013). Handbook of Nutrition and Food (3rd ed.). CRC Press. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4665-0572-8. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
- ↑ "Minerals". MedlinePlus, National Library of Medicine, US National Institutes of Health. 22 December 2016. பார்க்கப்பட்ட நாள் 24 December 2016.
- ↑ "Vitamin and mineral supplement fact sheets". Office of Dietary Supplements, US National Institutes of Health, Bethesda, MD. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
- ↑ Berdanier, Carolyn D.; Dwyer, Johanna T.; Heber, David (19 April 2016). Handbook of Nutrition and Food, Third Edition. CRC Press. pp. 211–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4665-0572-8. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
- ↑ "Minerals". Micronutrient Information Center, Linus Pauling Institute, Oregon State University, Corvallis, OR. 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Vitamins and minerals". nhs.uk (in ஆங்கிலம்). 23 October 2017.
- Concept of a nutritious food: toward a nutrient density score
- Metals in Nutrition