கிராம ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிராம ஊராட்சி தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே:[1] [2]

  • கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • ஒவ்வொரு கிராம ஊராட்யிலும் 7 உறுப்பினர்களுக்கு குறையாமல் 15 உறுப்பினர்களுக்கு மிகாமல் உள்ளனர்.
  • உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
  • கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியாளர் செயல்படுகிறார்.

கிராம ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் கடமைகள்:[தொகு]

  • படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள்.
  • தெரு விளக்குகள் அமைத்தல்
  • சிறுபாலங்கள் கட்டுதல்
  • ஊர்ச்சாலைகள் அமைத்தல் ,சாலை பராமரிப்பு
  • குடிநீர்க் கிணறு தோண்டுதல்
  • கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்
  • சிறிய பாலங்கள் கட்டுதல்
  • வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்
  • கிராம நூலகங்களைப் பராமரித்தல்
  • தொகுப்பு வீடுகள் கட்டுதல்
  • இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
  • வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அந்நிதியிலிருந்து பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.

கிராம ஊராட்சியின் வருவாய்[தொகு]

  • வீட்டுவரி,தொழில் வரி,கடைகள் மீது விதிக்கப்படும் வரி அபாரதக் கட்டணங்கள்
  • குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம்
  • நிலவிரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு
  • சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு
  • சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது.
  • இவைகளால் வரும் வருவாய் மட்டுமே போதாது. எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும் ,மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன.
  • மத்திய மாநில அரசுகள்வழங்கும் மானியங்கள் தான் முதன்மையானவருவாய் ஆகும்.

கிராம சபை / ஊர்மன்றக் கூட்டம்[தொகு]

  • ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ஊர் மன்றக் கூட்டம் அமைக்கப்பட்ள்ளது.
  • கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
  • கிராம சபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி தலைவர் தலைமை வகிப்பார்.
  • ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன. அந்நாட்கள்: ஜனவரி, 26 குடியரசு நாள்மே, 1 தொழிலாளர் நாள்ஆ, கஸ்ட் 15 இந்திய விடுதலை நாள், அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள்.[3]

கிராமத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல். ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல், திட்டங்களின்பயனாளிகள் யார் என்பது போன்றவற்றிற்கு ஒப்புதல் அளித்தல் ஆகியவை கிராம சபையின் பணிகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Grama Sabha
  2. Gram Panchayat
  3. கிராம சபைக் கூட்டம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம_ஊராட்சி&oldid=2577045" இருந்து மீள்விக்கப்பட்டது